Friday, May 22, 2015


  PGM  அவர்களுடன் புதிய நிர்வாகிகள் அறிமுகம் ! 

கோவை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாவட்டச் சங்க 
நிர்வாகிகளை PGM அவர்களுக்கு அறிமுகம் செய்யும் சந்திப்பு  
20-5-15 அன்று மதியம் நடைபெற்றது.
DGM (A),  DGM (U) AGM (OP & Admn) ஆகியோர் உடனிருந்தனர். 
  
புதிய மாவட்ட சங்க நிர்வாகிகளை வரவேற்ற PGM அவர்கள், தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். 

புதிய மாவட்டச் செயலர் தோழர் L.S, மாவட்ட மாநாட்டில் நமது மாநிலச் செயலர் தோழர் பட்டாபிராமன் , கோவை  SSAவின் வளர்ச்சித்  திட்டங்கள் பற்றி விவரித்ததை எடுத்துக் கூறி, அனைத்து சங்க கூட்டத்தை கூட்டி விவாதித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினார். 

பொள்ளாச்சி CSC இடத்தை Axix Bankக்கு வாடகைக்கு விடுவதை 
கடுமையாக எதிர்த்தும்,  வேலைநிறுத்த காலத்தில் சில தலமட்ட 
அதிகாரிகள் அலுவலகத்திற்கு வராமலேயே தங்கள் வருகையை பதிவு செய்ததோடு, தங்கள் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருகைப் பதிவு  செய்ததை சுட்டிக்காட்டி, அந்த வருகைபதிவுகளை ரத்து செய்ய 
வலியுறுத்தியும் கடிதங்கள் கொடுத்தும் வலியுறுத்தி உள்ளோம்.

Monday, May 18, 2015

இனிதே முடிந்த மாவட்ட மாநாட்டு காட்சிகள் Sunday, May 17, 2015

 அன்புத் தோழர் ஜெகன் பிறந்த நாள் !

                         இன்று, தமிழகம் மட்டுமில்லாமல் அகில இந்தியாவில் 
உள்ள அனைத்து தோழர்களின் நன்மதிப்பை பெற்ற தோழர் ஜெகன் அவர்களின் பிறந்த நாள்.

அவர் அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்ட மாமனிதர்.

இந்த  நன்நாளில் தோழர் ஜெகன்  5-4-1987 அன்று அதிகாலை மைசூரிலிருந்து  கோவை வந்து எனது திருமணத்திற்கு தலைமை 
ஏற்று  எங்களை வாழ்த்திய புகைப்படங்களை வெளியிடுவதில் 
மகிழ்ச்சி அடைகிறேன்.


Friday, May 8, 2015

நன்றி ! நெஞ்சுநிறை நன்றி !! 

கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் ஏற்கப்பட்ட
 அடுத்த  நொடியே  முதல் வாழ்த்து  எமது அருமைத் தலைவர் 
தோழர் C.K.மதிவாணன்  அவர்களிடமிருந்து செல்பேசியில் வந்தது. 

 மாநாட்டிற்கு வந்த தலைவர்கள் தோழர்கள்  கோ.ஜெயராமன்,

 SSG, பட்டாபிராமன், காமராஜ், அசோகராஜன் ஈரோடு குமார், 
என அனைவரும் வாழ்த்தினர். 

 தோழர் மாலி,  மாநிலத் தலைவர் தோழர் லட்சம்,  மாநில துணைச் செயலர் வேலூர் சென்னகேசவன் ,மாநில துணைத் தலைவர் சேலம் ராஜா, ஜோதி சிவம், தோழர்கள்  நெல்லை பாபநாசம், மாநில அமைப்புச் செயலர் சண்முகம், தூத்துக்குடி  மாவட்டச்.செயலர் பாலக்கண்ணன், 
மதுரை மாவட்டச்.செயலர் சிவகுருநாதன்,  
மாநில துணைத் தலைவர் தோழியர் பரிமளம்,
திருச்சி  மாவட்டச் செயலர் பழனியப்பன்,  மாநில துணைச் செயலர் தஞ்சை நடராஜன், எனதருமை திருச்சி மாவட்டத்  தோழர்கள்
மாநில துணைத் தலைவர் தோழர் பாலசுப்ரமணியம்   தூத்துக்குடி தஞ்சை மாவட்ட சங்க தோழர்கள், 
நூற்றுக்கும் மேற்பட்ட கோவை மாவட்ட தோழர்கள்  தங்கள் வாழ்த்துக்களை SMS, Facebook, தொலைபேசி மூலம்  
தெரிவித்து வருகின்றனர். 
 அனைவருக்கும் புதிய மாவட்டச் சங்க நிர்வாகிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் !   
----------------------------------------------------------------------------------------------------------------------------------
NFTE THANJAVUR SSA    கோவை மாவட்ட மாநாடு : புதிய நிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 
மாவட்ட தலைவர்  தோழர் .A.ராபர்ட்ஸ்

மாவட்டச் செயலர் தோழர்எல் சுப்பராயன்

மாவட்ட பொருளர் தோழர் A.செம்மல்லமுதம் 

ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 

மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரையும் 

மனதார தஞ்சை nfte மாவட்ட சங்கம் 

பாராட்டுகின்றது.

------------------------------------------------------------------------------------------------------------

தமிழக NFTE தோழர்களின் அபிலாஷைக்கு கிடைத்த வெற்றி !   

தமிழகத்தின் ஒட்டு மொத்த NFTE  தோழர்களின் அடிமனதில் இருந்த மன விருப்பத்தை, 
   சேலம் செயற்குழுவில் எடுத்துரைத்தோம் ! 

அதை விடாப்பிடியாய் கோவையில் அமலாக்கியதன் இன்ப அதிர்வுகளின்  வெளிப்பாடுதான் காரைக்குடி கவியின் புதுக்கவிதை ! 
   
அன்புத் தோழர் மாரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி   !
---------------------------------------------------------------------------------
காரைக்குடி வலைதளத்திலிருந்து.......    

                   ஒன்று படு... உயர்படு.                               

                        
                                ஓட... ஓட... விரட்டு...
                             ஒற்றுமையால் மிரட்டு... 

தோழர்களே....


NFTE  கோவை மாவட்ட மாநாடு...
சிறுவாணியின் இனிமை போல் 
சிறப்புடன் நடந்தேறியுள்ளது...

ஒரு மனதாக..
ஏக மனதாக... 
முழு மனதாக.. 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
புதிய நிர்வாகிகளுக்கு 
நமது மனம் நிறை வாழ்த்துக்கள்...

மாவட்டத்தலைவர்  அருமைத்தோழர். இராபர்ட் 

மாவட்டச்செயலர். அன்புத்தோழர்.சுப்பராயன் 

மாவட்டப்பொருளர்.அருமைத்தோழர்.செம்மல் அமுதம் 

ஆகியோரின் பணி சிறக்க  நமது வாழ்த்துக்கள்...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.. 
ஒன்றாம் வகுப்பு பாடமல்ல...
என்றும் மனிதருக்கு மங்காத பாடம்...
வெற்றி மாநாட்டு காட்சிகள் சில.......

மாவட்ட தலைவர் தோழர் ஸ்ரீதரன்  

தோழர் S.கோட்டியப்பன் - உணர்ச்சிமிகு தியாகிகள் அஞ்சலி உரை
   
  மாவட்டச் செயலர்  தோழர் என்.ராமகிருஷ்ணன் - வரவேற்புரை 

                                     

 DGM (Admn) திரு.P  ரத்தினசாமி  


Thursday, May 7, 2015

  எழுச்சியுடன் துவங்கி இனிதே 
முடிந்த கோவை மாவட்ட மாநாடு 

    7-5-15 காலையில்    தோழர் A.காமராஜ் 
தேசியக் கொடியையும் 

தோழர் D.R. மருதாசலம் சம்மேளனக் கொடியையும் ஏற்றிட,

மாவட்ட தலைவர் தோழர் ஸ்ரீதரன்  தலைமையில் துவங்கிது   மாவட்ட மாநாடு.

தோழர் கோட்டியப்பன் உணர்ச்சிமிகு 
தியாகிகள் அஞ்சலி உரையை நிகழ்த்திட,


மாவட்டச் செயலர்  தோழர் என்.ராமகிருஷ்ணன் வரவேற்புரையை நல்கிட,  

விளக்கமான துவக்கவுரையை மாநிலச் செயலர் தோழர் ஆர்.பட்டாபிராமன்  ஆற்றிட, 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் 
தோழர் கே.எம், செல்வராஜ் அவர்கள் அரசியல் விளக்க உரை  ஆற்றிட,

 DGM (Admn) திரு. ரத்தினசாமி அவர்கள்  நமது நிறுவன  நிலையை பற்றி விளக்கவுரை ஆற்றிட, 

நமது அன்பிற்கினிய மூத்த தோழர் ஆர்.கே, சம்மேளனச் செயலர்கள்  கோ. ஜெயராமன்,  S.S.கோபாலகிருஷ்ணன், அகில இந்திய  சங்க அழைப்பாளர் தோழர் P.காமராஜ், 
மாநிலப் பொருளர் தோழர் K.அசோக்ராஜ், 
ஈரோடு மாவட்டத் தலைவர்  தோழர் G.குமார் ஆகியோர் சிறப்புரை ற்றிட,மாநாடு சிறப்பாக நடந்தது.

அனைத்து சங்கத் தலைவர்களும் தோழர் SSG   அவர்களின் தொழிற்சங்க சேவையை  வெகுவாக பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியாக,  மாவட்டச் செயலர் தோழர் என்.ராமகிருஷ்ணன்  முன்மொழிய மாவட்டத் தலைவர் தோழர் ஸ்ரீதரன் வழிமொழிய 

மாவட்டத் தலைவர்  தோழர் .A.ராபர்ட்ஸ்

மாவட்டச் செயலர் தோழர். எல் சுப்பராயன்


மாவட்டப் 
 பொருளர் தோழர் A.செம்மல்லமுதம் 

உள்ளிட்ட 15  புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய மாவட்டச் செயலர் தோழர் L.S  நன்றி கூற,  தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த மாநாடு  ஒற்றுமையை பறைசாற்றி  இனிதே நிறைவுற்றது.