Tuesday, September 15, 2015


அன்பின் வெளிப்பாடாய் ! ஒரு மாறுபட்ட நிகழ்வு !!

நமது சங்கத்தின் மீது அளப்பரிய பற்றுள்ளவர்  
உடுமலை சகோதரி  ஞானாம்பாள்.
 அவரது பணி ஓய்வை ஒட்டி,   நமது சங்கத்தின் 
முக்கிய தோழர்களை அழைத்து மிகச் சிறந்த  உணவகத்தில் 
விருந்து வைத்து,  அழைத்த அனைவரையும் அவரது கணவர், 
கௌரவித்தது ஒரு மாறுபட்ட நிகழ்வு, 
அவரது கணவர்  பணி ஓய்வு பெற்ற,  அஞ்சல் ஊழியர் சங்க 
முன்னாள் கிளைச் செயலர் )  
Thursday, September 10, 2015

        வெற்றிகரமான மாவட்டச் செயற்குழு  !


மாவட்ட மாநாட்டிற்கு பிறகு பீளமேட்டில் இன்று (10-9-15) மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ் தலைமையில் கூடிய மாவட்டச் செயற்குழு வெற்றிகரமாக அமைந்தது.

        மாவட்ட முழுவதிலுமிருந்து கிளைச்செயலர்கள்,  மாவட்டச் சங்க நிர்வாகிகள் முன்னணித் தோழர்கள் பங்கேற்றனர். அனைத்து கிளைச் சங்க நிர்வாகிகளும் தங்கள் கருத்தை முன் வைத்தனர்.

  கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

1. திருப்பூரில் சிறப்பாக மேளா நடத்தும் திருப்பூர் தோழர்களை செயற்குழு     மனதார பாராட்டுகிறது. இது போன்ற மேளாக்களை மற்ற கிளைகளும்
   நற்செயலை  பின்பற்றி நடத்திட 

 வழிகாட்டுகிறது.

2.மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடக்     கோரி  நடந்த செப்டம்பர் 2 வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும்  செயற்குழு தனது  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தது.
3. செப்டம்பர் 16 தர்ணாவிற்கு ஊழியர்களை அதிகமான திரட்டுவது என்றும்

4.   கேபிள் பணி குறித்து நிர்வாகம் விரைவான முடிவெடுக்க வேண்டும் என்றும் அந்த பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த  ஊழியர்க்கு தல மட்ட அதிகாரிமுன் ஒப்புக்கொண்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும், PF ( பிராவிடெண்ட் நிதி) ESI நிதி முறையாக பிடித்தம் செய்கிறதா என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்றும் நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

5. சிறப்பான ஏற்பாடுகள் செய்த பீளமேடு கிளையை பாராட்டுகிறோம். 
 வெற்றிகரமான மாவட்டச் செயற்குழு 
                     
அமைப்பு நிலை விவாதத்தை துவக்கி வைத்த மூத்த துணைத்தலைவர்
தோழர் D.R மருதாசலம் 
                                           
TAX  கிளைச் செயலர் தோழர் பாரதிமுத்து 
மாவட்ட துணைச்  செயலர் தோழர் V சுப்ரமணியன்


மாற்றல் பெற்று தந்தமைக்கு மாவட்ட சங்கத்திற்கு நன்கொடை  வழங்கும்
 தோழர் ராஜேந்திரன் JTO (Offg)

குறிச்சி கிளைச் செயலர் தோழர் சப்தகிரி 
பீளமேடு கிளைச் செயலர் தோழர் கருணாநிதி
மாவட்ட துணைத் தலைவர் தோழர் கோட்டியப்பன்  
                                 
மாவட்ட துணைத் தலைவர் தோழர் கருப்பையா

ஆர்.எஸ்.புரம் கிளைச் செயலர் தோழர் காமராஜ்

கோவைப்புதூர் குரூப்ஸ் கிளைத்தலைவர் தோழர்  திருநாவுக்கரசு

உடுமலை கிளைச் சங்க பொறுப்பாளர் தோழர் ஃப்ரான்ஸிஸ்

மெயின் எக்சேஞ்ச் வெளிப்புற கிளைச் செயலர் தோழர் பரமேஸ்வரன்

சூலூர் கிளைப் பொறுப்பாளர் தோழர் கண்ணைய குமார்

ராம்நகர் கிளைச் செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி 

மெயின் எக்சேஞ்ச் PGM அலுவலக கிளைச் செயலர்
 தோழியர் எல்.தனலட்சுமி
திருப்ப்பூர் கிளைப் பொறுப்பாளர் தோழர் அந்தோனி மரிய ப்ரகாஷ்
  
சோமனூர் கிளைச் செயலர் தோழர் மணிவாசகம்

சாய்பாபா காலனி கிளைச் செயலர் தோழர் பேரின்பராஜ்   
திருப்பூர் தோழர் கந்தசாமி 

ஆனைமலை கிளைத் தலைவர் தோழர் பழனியப்பன்

மாவட்ட துணைத் தலைவர் தோழர் சுந்தரராஜன் 
                                                               
விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றும் மாவட்டச் செயலர் 

                                   

                     திருப்பூர்   BSNL மேளா

மக்களை நோக்கி BSNL என்ற  அடிப்படையில் NFTE-BSNL, Anna union, FNTO  சங்கங்களும் இணைந்து நிர்வாகத்தின் உதவியோடு திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன் உள்ள  P P புதூர் தொலைபேசி நிலையம் முன் 10-9-15 முதல் மூன்று நாட்களுக்கு மேளாவை  சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திவருகின்றனர்.

 திருப்பூர்  DGM  திரு. ராமசாமி அவர்கள் தலைமையில், திருப்பூர்  D,E.
திருமதி. வளர்மதி, மாவட்டச் செயலர் தோழர் L. சுப்பராயன் ஆகியோர்  முன்னிலையில் AGM (Sales)    திரு ராஜன் அவர்கள் இந்த மேளாவில் 
முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.   

தோழர்களின் எதிபார்ப்பையும் மிஞ்சும் வகையில்  ஒரே நாளில் 501 சிம்களும்  48 புதிய லேண்ட் லைன் இணைப்புகளும் விற்பனையானதோடு   7 மறு இணைப்புகளும் தரப்பட்டன. 
இதற்கான அயராது உழைத்த அனைத்து தோழர் தோழியர்களுக்கும்        நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.  Tuesday, September 1, 2015

பெங்களூருவில் சொஸைட்டி கிளை துவக்க விழா !

    நமது கூட்டணி வாக்குறுதி அளித்தபடி பெங்களூருவில்  சொஸைட்டி
 கிளை  31-8-15  அன்று துவக்கப்பட்டது.


கிளை துவக்க விழாவிற்கு அனைத்து சங்க தலைவர்களும் அழைக்கப் பட்டனர். NFTE-BSNL   தலைவர்கள்,   சென்னை மாநிலச் செயலர் தோழர் 
C.K. மதிவாணன், சம்மேளனச் செயலர்கள்  தோழர்கள்  சேஷாத்திரி,  
S.S. கோபால கிருஷ்ணன், கர்னாடக மாநில சங்க தலைவர் கிருஷ்ண மோகன், கிருஷ்ணா  ரெட்டி,    FNTO சங்கத் தலைவர் தோழர் லிங்க மூர்த்தி,  SEWA BSNL அகில இந்திய தலைவர்  சகோ. P.N. பெருமாள்,    
TEPU சங்க சென்னை மாநிலச் செயலர் தோழர் விஜயகுமார் ,  BSNLEU சங்கத்தைச் சார்ந்த  முரளி,  கிருஷ்ணன் உள்ளீட்ட  அனைத்து  சங்கத் தலைவர்களும் பங்கேற்ற ஒற்றுமை நிகழ்ச்சியாக  அந்த விழா  அமைந்தது பாராட்டத் தக்கது.
   
 அவ்விழாவில் பேசிய வெற்றிக் கூட்டணியின்  தளகர்த்தர்களில் 
ஒருவரான தோழர் மதிவாணன், மோடி அரசின் உத்திரவின் காரணமாக சொஸைட்டி சாதாரண கடனுக்கான  வட்டியை  உயர்த்த வேண்டிய கட்டாயம் இருந்தாலும்,   உறுப்பினர்களின் நலன் கருதி, சொஸைட்டி இயக்குனர்கள் குழு,  வட்டியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  மேலும் வெள்ளானூர் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் திட்டத்தை அமலாக்குவதில்  கூடுதல் வேகம் தேவை என்று வலியுறுத்தினார்.

நிறைவுரை ஆற்றிய கூட்டுறவு சங்கத் தலைவர் தோழர் எஸ்.வீரராகவன் அவர்கள் , தோழர் மதிவாணன் அவர்களின் இரண்டு கோரிக்கைகளையும்  அமலாக்கும் பணிகள்  ஏற்கனவே  துவங்கி விட்டது என்று பலத்த கரகோஷத்திற்கிடையே   அறிவித்தார்.