Saturday, October 31, 2015

                   
                    முக்கியமான செயலகக் கூட்டம் !

  3-11-2015 முதல் துவங்க உள்ள உண்ணாவிரத போராட்டத்தை 
சிறப்புடன்  நடத்த  திட்டமிட  கோவையில்  உள்ள   அனைத்து 
கிளைச் செயலர்கள்,  மாவட்ட  சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் 
செயலகக் கூட்டம் 2-11-15  திங்கட்கிழமை     மாலை 4 மணிக்கு 
நமது சங்க அலுவலகத்தில்  மாவட்டத் தலைவர் தோழர்  A.R. 
தலைமையில் நடைபெறும்.
       
முன்னாள் மாவட்டச் செயலர் தோழர் என்.ராமகிருஷ்ணனும் 
சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுகிறார்.

                        அனைவரும் தவறாது பங்கேற்கவும்.

                                                  L.சுப்பராயன் 
                                          மாவட்டச் செயலர்

Thursday, October 29, 2015

மத்திய சங்க கடிதங்கள் 

நமது மத்திய சங்கம் 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 
BSNL  நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது.



  • இந்த ஆண்டு வருமானம் 800 கோடி உய்ரந்துள்ளதால் BSNL   ஊழியர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும்.
  • BSNLலில் பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் அளிப்பதற்கான கொள்கை உடனடியாக வகுக்கப்பட வேண்டும்.
  • TTA  மற்றும் TELECOM MECHANIC  தோழர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். அதிகாரிகள் தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வருவது போல் ஊழியர்களுக்கு தாய்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டும்.
  • 78.2 சத  IDA  அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.
    • DELOITTEE குழு அமுலாக்கத்தின் போது உபரியாகும் ஊழியர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே விற்பனைப்பிரிவு போன்ற பகுதிகளில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
==========================================================

TM பயிற்சி முடித்து பதவிகள் இல்லாத காரணத்தால் இன்னும் 
TM பதவி உயர்வு பெறாத தோழர்களை பதவி உயர்வு,இறப்பு மற்றும் பணி ஓய்வு ஆகியவற்றால் காலியாகும் இடங்களில் பணியமர்த்தவும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் சென்று TM ஆகப்பணி புரிய அவர்களின் சம்மதங்களை கேட்கவும்  CORPORATE அலுவலகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 
======================================================

ஓய்வூதியம் பெறும் தோழர்கள் ஒவ்வொரு நவம்பர் மாதமும் தாங்கள் உயிரோடு இருப்பதாக உயிர்ச்சான்றிதழ் LIFE CERTIFICATE வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தோழர்கள் 
வேறு இடங்களில் வசித்து வந்தால் அந்தந்த இடங்களில் உள்ள வங்கிக்கிளைகளில் தங்களது LIFE CERTIFICATEஐ வழங்கி 
ஒப்புகை பெற்றுக்கொள்ளலாம் என நிதி அமைச்சகம் உத்திரவிட்டுள்ளது.
=======================================================

LEASED LINE மற்றும் CIRCUIT பழுதுகளை உடனுக்குடன் நீக்குமாறும் இதனால் ஏற்படும்  வருமான இழப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

=======================================================

   JTO இலாக்காத்தேர்வு மற்றும் நேரடித்தேர்வுகள்  OUTSIDERS விரைவில் நடத்தப்படும்.  தேர்வுகள் 
நடத்துவதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.
=======================================================

BSNL மருத்துவ திட்டத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.


===========================================================

நாலுகட்டப் பதவி  உயர்வில் உள்ள குளறுபடிகளை நீக்கக்கோரி BSNLEU சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக இலாக்காத் தேர்வு மூலம் அடைந்த பதவி உயர்வை நாலுகட்டப்பதவி உயர்வில் ஒன்றாக கருதக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போதாவது நாலுகட்டப்பதவி உயர்வில் உள்ள குளறுபடிகள் புரிந்ததே....

===========================================================

Wednesday, October 28, 2015

நமது மாவட்ட சங்கத்தின்  உண்ணாவிரத போராட்டத்தின் 
 முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று :

 
Issue of Employment Card, EPF contribution Card and 
ESI card to Contract Labours : 


உத்திரவு உள்ளது. ஆனால் அமலாக்கப்படவில்லை.
                        Click here  (for the Latest  BSNL Orders ) 

                                          
கடலூர் மாவட்டத்தில்  பணியாற்றும் ஒப்பந்த  ஊழியர்க்கு போனஸ் வழங்கப்பட்டுவிட்டது. 

              நமது மாவட்டத்திலும் வழங்க நிர்பந்திப்போம் ! 

1987ல் கோவை  SSAவின்  முதல் மாநாட்டில் தோழர் ஜெகன் அவர்களை
வரவேற்கும் 
அன்றைய கோட்டச் செயலர் தோழர்  L S. 

நமது தொழிற்சங்க ஆசான் தோழர் ஜெகன் காட்டிய 
அறவழியில் அடிமட்ட ஊழியர்களின் வாழ்வு ஏற்றம் பெற 
அயராது உழைப்போம் ! அநீதி களைவோம் !!
                       
                    போராடாமல் இல்லை புது வாழ்வு !  

Monday, October 26, 2015

                             
      நியாயத்தை  நிலை நாட்ட,  
   போராட்டப்  பாதையில் நாம்  !

மாவட்டத் தலைவர் தோழர்  A.ராபர்ட்ஸ்,
மாவட்டச்  செயலர்   தோழர்  L.சுப்பராயன், 
துணைத்    தலைவர்  தோழர்  S.கோட்டியப்பன்
ஆகியோர் இன்று  துணைப் பொது மேலாளர்
(நிர்வாகம்)  திரு P.ரத்தினசாமி அவர்களை 
சந்தித்து போராட்ட அறிவிக்கையை அளித்தனர்.

*   தீர்க்கப்படாத கோரிக்கைகளை     
     நிறைவேற்றக் கோரியும் , 

*  நிர்வாகம் மாற்றல் பிரச்னையில்
    பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்றும் , 

*  ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் உடனடியாக
     வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்  

              என்று வலியுறுத்தியும் 
                       3-11-2015 முதல் 
மாவட்டத் தலைவர் தோழர் A. ராபர்ட்ஸ்,
மாவட்டச் செயலர் தோழர்  L. சுப்பராயன் 

ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்வர் 
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  நியாயம் வெல்ல, அமைப்பை காத்திட,    
             அனைவரும் ஒத்துழைப்பீர் !! 


   

Monday, October 19, 2015


             Forum  சார்பான தர்ணா போராட்டம் தோழர்கள் செம்மல் அமுதம், கோட்டியப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கன்வீனர் 
தோழர் சி.ராஜேந்திரன், சம்மேளனச் செயல்ர்  தோழர் எஸ்.எஸ்.ஜி,
ராபர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து சங்க தலைவர்கள் உரையாற்றினர், 

   பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி. 


Sunday, October 18, 2015

            
   என்.ராமகிருஷ்ணன் மா.செ பொறுப்பில்

                               இருந்தபோது


                              


என். ராமகிருஷ்ணன் மாவட்டச் செயலர் பொறுப்பில் 
இருந்தபோது  2006 ல் அவர் எழுதிய மாவட்ட மாநாட்டு 
செயல்பாட்டு அறிக்கையிலிருந்து.......



                    இன்று அவர் பொறுப்பில் இல்லாதபோது
                                           



                     
 பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு !
      
        புரிந்து கொண்டால் நன்மையுண்டு !!

கடந்த 4 மாதங்களாக மாவட்டச் செயலராகிய என்னைப்பற்றி 
அவதூறுப் பிரசாரம் செய்பவருக்கு  சமர்ப்பணம் !

 " நான் எனது சொந்த வேலையில் பிஸியாக உள்ளேன், எனது
கையொப்பத்தை நீயே போட்டு சென்னை துணை லேபர் கமிஷனர்
அலுவலகத்திற்கு  புகார் கடிதத்தை அனுப்பி விடு " என்று அன்றைய 
மாவட்டச் செயலர் என். ராமகிருஷ்ணன் என்னிடம் கேட்டுக் கொண்ட
-தன் அடிப்படையில் நான் செய்தது தோழமை  நம்பிக்கையின் 
வெளிப்பாடு. 

 7 வருடம் கழித்து அதை forgery என்றும் களவாணிித்தனம் என்றும்
இப்போது எழுதுவது நம்பிக்கை துரோகம்.

   மதுரை மாநில மாநாட்டிற்கு பிறகு , கோவையில் சங்க ஒற்றுமை 
கருதி அப்போதைய மாவட்ட துணைச் செயலரான தோழர் ராபர்ட்ஸ்
அவர்களையும் நிர்வாகத்தை சந்திக்க போகும்போது  அழைத்துச்
செல்லவேண்டும் என்று நான்  அறிவுறுத்தியபோது,



 " அவன் ப்ரூட்டஸ், எனது எதிரியை சந்தித்து விஜிலென்ஸ் மூலம்
என்னை மாட்டி விட்டவன் " என்று கூறி மறுத்து விட்டு, நிர்வாகம்
அவரை தனியாக சந்திப்பதையும்  அனுமதிக்க மாட்டேன் என்று
மிரட்டிய அதே ராமகிருஷ்ணன்,  இன்று நாம் அழைத்தும் நம்மோடு
வராமல் தனியாக சென்று நிர்வாகத்தை சந்திப்பது இரட்டை வேடம்
அன்றோ !



அகில இந்திய தலைமையே சொன்னாலும் BSNLEU சங்கத்துடன் 

சேர்ந்து  தர்ணா, ஆர்பாட்டம் ஆகியவற்றை நடத்த மாட்டேன் என்று 
தீண்டாமைக் கொள்கையை கடைபிடித்தவர்,  தற்போது, முன்னாள் 
மாவட்டச் செயலர் ஆனவுடன் BSNLEUவுடன் கைகோர்த்துக்கொண்டு, 
அந்த சங்கத்தின் மாவட்டச்  செயலர் எழுதிய கடிதத்தில் கண்ணை 
மூடிக் கொண்டு நமது மாவட்டச் செயலர் கையெழுத்து இட வேண்டும் 
என்று அவர் முன்னிலையில் நிர்பந்திப்பது சரணாகதியின் உச்ச கட்டம்.



 கோவை வெளிப்புற கிளை மாநாடு நடத்த வலியுறுத்திவிட்டு, தனக்கு

அந்த கிளையில் ஆதரவு இல்லை என்று வெட்ட வெளிச்சமானவுடன்  

 மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்காமல், ஒரு மாதம் கழித்து 
அக்கிளையின் 33 உறுப்பினர்களில் நான்கே நான்கு  உறுப்பினர்களின்
பங்கேற்போடு மைனாரிட்டி மாநாடு நடத்தி அதற்கென நோட்டீஸ்
போர்டு வைத்து மாவ்ட்ட சங்கத்தைப் பற்றி அவதூறான செய்திகளை
வெளியிடுவது  அராஜகமான அடாவடிச் செயல்.






வழக்கம்போல, 2016 ஏப்ரலில் T.Mech ஊழியர்க்கு சுழல் மாற்றல்
வரும்போது  தனக்கு கவுன்சிலிங் அடிப்படையில் திருப்பூர், அவினாசி,
சோமனூர் போன்ற இடங்களுக்கு போக வேண்டி  இருக்கும் என்று
தெரிந்து கொண்டு, அதற்கு முன்பாக, தான் மட்டும் வீட்டுக்கு் அருகில்
மேட்டுபாளையத்திற்கு மாற்றல் பெற்று தப்பித்தது புத்திசாலித்தனமான
சுயநலமன்றோ !

தன்னை சமாதானம் செய்ய முயற்சிக்கும்  அனைவரிடமும்
 " என்னை  மீண்டும் மாவட்டச் செயலர் ஆக்கினால்தான் 
ஒத்துழைப்பேன், இல்லையென்றால் போட்டிச் செயல்பாடு தொடரும் "


என்று 
முன் நிபந்தனை போடுவது எந்தவிதமான ஜ
னநாயகம் என்று
நமக்கு தெரியவில்லை !

இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடாமல் இருப்பது, நம்மை
எல்லாம் அடையாளம் காட்டிய நமது உயிமூச்சான சங்க 
வளர்ச்சிக்கு 
நல்லது  என்பதே ந
மது தோழமை வேண்டுகோள் !