Thursday, December 31, 2015

   
             வரவேற்போம் 2016 !
               இன்னும் ஒரு சில மணிகளில் புத்தாண்டு பிறக்க உள்ளது. 
புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்போம்.

   2015ன்  மோசமான நினைவுகள் நமது நினைவை விட்டு அகல 
வேண்டும்.

2016ல் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள் தங்களது சக்தி வாய்ந்த வாக்குரிமையை முதிர்ச்சியுடன் பயன்படுத்தி  நன்றாக ஆளத் தெரிந்த சரியான தலைமையை தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிபார்ப்போம்.

 நமது நிறுவனத்தில் இவ்வாண்டு  ஏப்ரல்/ மே திங்களில் 7வது அங்கீகாரத்

 தே
ர்தல் நடைபெறவுள்ளது. அது மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். 

மேலும் மூன்றாண்டுகளுக்கு நமது சங்கம் அங்கீகாரத்துடன் பணியாற்ற 

நாம் தேர்தல் பணியை காலதாமதமின்றி துவங்க வேண்டும். 

ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம் பெறும் வகையில் 
தற்போதைய அங்கீகார விதிகள் உள்ளபோதும், முதன்மைச் சங்கம்
 51 சதம் பெற்று விட்டால், அந்த சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் 
கிடைக்கும் என்ற விதியும் உள்ளது. ஆகவே மெத்தனமாக இருக்கக்
கூடாது.

நமது சங்கம் முதன்மை அங்கீகாரச் சங்கமாக இருந்தால்தான் 
கோரிக்கைகளில் சமரசமின்றி போராட முடியும் என்பதை 
ஊழியர்களிடம் விளக்கிட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் 
உள்ளது. 

BSNLEU சங்கம் மட்டுமே அங்கீகாரத்தில் இருந்த காலத்தில் 
10  ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் என்பதை ஏற்றுக் கொண்டதால்தான்   நமக்கு அடுத்த ஊதிய மாற்றம் 1-1-2017 முதல் 
அமலாக வேண்டும் நிலை உள்ளது. நமது சங்கம் அங்கீகாரத்தோடு இருந்தால்தான், 78.2 சத ஊதிய நிர்ணயம், அனைவருக்கு 30 சத ஊதிய 
நிர்ணயப்பலன், போனஸ் போன்ற பிரச்னைகளில் BSNLEU சமரசம் 
செய்து இழப்பை ஏற்படுத்தியது போல அல்லாமல் நமது கோரிக்கை 
முழுமையாக பெற முடியும். அந்த பிரச்னைகள் இன்னமும்கூட  
தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது நாம் அனைவரும்  அறிந்ததே. 

மிகவும் அனுபவமும் ஆழ்ந்த அறிவாற்றலும் பெற்ற தோழர் குப்தா 
அவர்களின் முயற்சியால் முதல் ஊதிய மாற்றத்தின்போது அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் நல்ல ஊதிய ஒப்பந்தம் சாத்தியமானது.

  ஆனால் BSNLEU சங்கத்தின் மேலாதிக்க போக்கால் இரண்டாவது ஊதிய 
ஒப்பந்தமும் NEPPயும் பல குறைபாடுகளோடு உருவானது.

  மூன்றாவது  ஊதிய ஒப்பந்தம் முழுமையானதாக அமைய நமது
சங்கத்திற்கு முதன்மை அங்கீகாரம் இன்றிமையாதது என்பதை 
அனைத்து ஊழியர்க்கும் விளக்கி வெற்றி வாகை சூடுவதோடு 
அனைத்து ஊழியர்களையும் ஒன்றினைத்து நல்ல ஊதிய ஒப்பந்தம் 
உருவாக  பாடுபடுவோம், முன்னேற்றம் காண்போம்  என்று புத்தாண்டில் 
உறுதி ஏற்போம்.  

     ------- தோழர் CKM அவர்களின் முகநூலில் இருந்து.....

Saturday, December 12, 2015

                 
         காலச் சக்கர சுழற்சியில் .....

In those good old days (probably the 40s, 50s) a man got a job in 
Madurai Municipality .(It became a corporation only in 1971). 
A monthly salary of Rs.40 was considered a royal sum in those 
days. For a sovereign of gold cost only Rs. 10. The authorities had 
agreed to give a salary of Rs. 40 to our hero. But there was a 
problem with the designation. 

You know we Maduraiites give a damn to what we are called. 
So this man told the authorities, "Call me thotti; pay me forty" 
Thotti is Tamil for scavanger,  the entry level grade in the 
Municipality. 

1980களில் லட்சத்திற்கும் மேற்பட்ட கேசுவல் மஸ்தூர்கள் கடும்
சுரண்டலுக்கு ஆளானார்கள். நமது சங்கம் அவர்களது நிரந்தரத்திற்காக
மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியது. அதன் காரணமாக
அவர்கள் ரெகுலர் மஸ்தூர்கள் என்ற பெயரில் நிரந்தரப்படுத்தப் பட்டார்கள். நிரந்தரமான பிறகும் மஸ்தூர் எனும் பெயரா என்று கேள்விகள் கேட்கப்பட்டபோது, பெயரில் என்ன இருக்கிறது, 

 "Call me thotti; pay me forty" என்பது போல,  எனக்கு உங்களது நிரந்தரம்தான் முக்கியம் என்று பகர்ந்தார் தோழர் குப்தா. 

அதே போல 10 சத ஊழியர்க்கு Grade IV பதவி உயர்வு; 
அது கிடைக்காத ஊழியர்க்கு பணி ஓய்வு பெறும் ஓராண்டுக்கு 
முன் ஒரு கூடுதல் இன்கிரிமெண்ட். அதன் காரணமாக பணி ஓய்வு பெற்ற பின், பென்சன் தொகையும் கூடுதல் ஆனது.

பாட்னா கன்வெண்ஷனில் தோழர் குப்தா பதவி உயர்வு திட்டத்தை
முன்மொழிந்த போது, இந்த திட்ட்த்தால் ஊதிய உயர்வும் கிடைக்கும், 
சமூக அந்தஸ்தும் உயரும் என்ற போது,

 " Promotions are unwholesome " 

(பதவி உயர்வு என்பதே விரும்பத்தக்கதல்ல)  என்று பகர்ந்தார்
தோழர் N.J.ஜே.ஐயர் என்ற ஒரு தலைவர் ...

                      இன்று Designation  மாற்றம் ! 

சமூகத்தில் நமது அந்தஸ்து  உயருகிறதாம் !!
ஆனால் பெயர் மாற்றம் பெற்றாலும் வேறு துறை ஊழியர்களைக்
சுட்டிக்காட்டி அந்த பெயருக்கு ஏற்றாற்போல ஊதிய மாற்றம் 
கேட்கக் கூடாது என்று ஒரு ஷரத்து !! 

கால ஓட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள் சிந்தனையில் !
செயல் பாட்டில் !!


      
       


               Change of Designation
       8 years pending issue resolved !

Consensus  arrived  between the management 
and staff side  on 11-12-2015 in respect of new designations for TTA, Sr. TOA, TM and RM. 

Sr.ToA cadre:- 
 1)   NE7 & NE 8      =       Senior Office Associate.
 2)   NE9 & NE10     =       Assistant Office Superintendent.
 3)   NE 11 & NE 12 =       Office Superintendent.
RM:       Assistant Telecom Technician
TM :      Telecom Technician.

TTA :    JE. 

      Agreement signed on 11th instant. 
                                    
                                                               Click Here

Saturday, December 5, 2015

                                         BSNLன் பெருமை 
Royal salute to all BSNL staff, who worked hard to maintain our network to serve better to affected public in Chennai. 
Only PSU's like BSNL can serve public at the need of the hour.