Saturday, February 27, 2016


PGM அலுவலகத்தில் பணியாற்றி இம்மாதம் பணி நிறைவு பெறும் தோழியர்கள் சுசீலா மாதவன் STS,    பிரேமா RM  ஆகியோர்க்கு நடந்த 
பாராட்டு விழா ! 


Friday, February 26, 2016

தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கோவையில் 25-2-16 அன்று 
சிறப்பாக நடைபெற்றது.
பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் தோழர் 
தோழியர்களுக்கும்   நமது நன்றி !

Tuesday, February 23, 2016

               
                        திருடனுக்கு தேள் கொட்டியதுபோல !

மது சங்கத்  தோழர்களிடையே கோள்மூட்டி பிளவுபடுத்த முயற்சித்தவரின் வேலை முறியடிக்கப்பட்ட ஆத்திரத்தில்  NFTE-BSNL கோவை மாவட்டச்செயலரின் செல் தொலைபேசி காணாமல் போனதைக் கூட குதர்க்கமாக எழுதி அதில் மகிழ்ச்சி அடைகிறது.  BSNLEU மாவாட்டச் சங்கம். 

   ஆஹா ! என்னே அவர்களது கொள்கை வழியிலான வாதம் !!


                           
   
   

Sunday, February 21, 2016

  TEPU சங்க அகில இந்திய மாநாட்டில் NFTE-BSNL,        SEWA BSNL  சங்க தலைவர்கள் பங்கேற்பு !!


    தமிழ் மாநில சங்க தேர்தல் சிறப்பிதழ்
             தயாரிப்பு குழுக் கூட்டம்
                               20-2-2016 

Tuesday, February 9, 2016


                              மேலும் ஓர் சாதனை ! 

பணியில் இருக்கும்போது   விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டால்  
அந்த ஊழியரின்   வாரிசுக்கு  உடனடியாக கருணை அடிப்படையில்
 பணி தருமாறு நிர்வாகம் உத்திரவு பிறப்பித்துள்ளது. சென்ற 
தேசிய கவுன்சிலில் இப்பிரச்னையை நமது சங்கம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 


Compassionate ground appointment to the dependents of deceased 
officials who died due to accidents while on duty: Click here.

Monday, February 8, 2016


                                            நாணயமற்றவர் 

எவ்வளவு பிரச்னைகள்  வந்த போதும் சொன்ன சொல்லை காப்பாற்றுவது என்பது நாணயஸ்தருக்கு   முக்கிய தேவை.

ஒரு சிலர் சுயநலம் கருதி சொன்ன சொல்லை காப்பாற்ற 
மாட்டார்கள். 

அதற்கு ஏதுவாக பல சால்ஜாப்புகளைச் சொல்வார்கள்.

அதற்கு எடுத்துக்கட்டாக திகழ்பவர்தான்   நம்மைப்பற்றி  
அவதூறுகளை அள்ளித் தெளித்து ஒரு கட்டுரையை 
வெளியிட்டு உள்ளார்.

BSNLEU  சங்கம் மட்டுமே அங்கீகாரத்தில் இருந்த  2010 முதல் 
கோவையில் சுழல் மாற்றல் அமலாகி வருகிறது. 

அதன் காரணமாக 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்
பட்டனர்.

இவ்வாண்டும் அது தொடரவேண்டும் , Sr. Accountant கேடருக்கும் 
சுழல் மாற்றல் அமலாக்க வேண்டும் என்று நிர்வாகத்துடன் 
ஒப்புக் கொண்டுவிட்டு, பிறகு தனக்கு மிக நெருங்கியவர்களுக்கு 
மாற்றல் வருகிறது என்பதால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க
முடியாமல்,  திடீர் பல்டி அடித்து  தன் பதவியை காப்பாற்றிக்
கொண்ட அந்த நாணயஸ்தருக்கு, கோவை BSNLEU  மாவட்ட
 செயலருக்கு நம்மைப்பற்றி எழுத அருகதை  இல்லை. 

Saturday, February 6, 2016

                                                        வேலூரில் சூளுரை !

பல கடுமையான சவால்களை BSNL ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள தற்போதைய காலகட்டத்தில் 
பல  நல்ல தீர்வுகளைக் கண்ட போராட்ட அனுபவங்களும்,

வேதனைகளையும் சாதனைகளாக மாற்றும் சூட்சமத்தையும்,  அதற்கான வல்லமையும் பெற்ற நமது
NFTE-BSNL ,  7வது சங்க அங்கீகாரத் தேர்தலில் முதன்மைச் சங்கமாகவெற்றி
பெற வேண்டியது கட்டாய தேவையாகும்.
       
 அந்த குறிக்கோளோடு அனைத்து நேச
சக்திகளையும்  ஓரணியில் திரட்டிட  வேலூரில்  
6-2-16 அன்று நடந்த  தமிழ்  மாநில சங்கத்தின் செயற்குழு முடிவெடுத்து உள்ளது.

தமிழகத்தில் வழக்கம்போல மீண்டும் மகத்தான  வெற்றிவாகை சூடிட அனைவரும் அயராது பாடுபடுவோம் என்று சூளுரைக்கபட்டது.