Thursday, June 30, 2016

                        மாவட்ட செயற்குழுக் கூட்டம் !

கோவை மாவட்டச் சங்கத்தின்  செயற்குழுக் கூட்டம் 29-6-16 
அன்று ராம்நகர் தொலைபேசி நிலையத்தில் தோழர் A.  ராபர்ட்ஸ் 
தலைமையில் நடைபெற்றது

மாவட்ட உதவித் தலைவர் தோழர் S. கோட்டியப்பன் தியாகிகளுக்கு
அஞ்சலி செலுத்தினார். 

ராம் நகர் கிளைச் செயலர் தோழர் S.கிருஷ்ண மூர்த்தி அனைவரையும்
வரவேற்றார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி உரையாற்றிய
மாவட்ட செயலர் தோழர் L.சுப்பராயன், ஊதிய மாற்றம் குறித்த நமது
 ஊழியர்களின் எதிர்பார்ப்பு, இன்றைய நிலை, தேசிய அளவிலான 
போரம் அமைப்பு, மாநில மாநாட்டை வெற்றிகர -மாக்கிட நமது
 உறுப்பினர்களின் பங்கு ஆகியவற்றை விளக்கி  உரையாற்றினார். 

மெயின் எக்ஸேஞ்ச் கிளைச் செயலர் தோழியர் L. தனலட்சுமி, 
முதற்கட்ட நிதியாக ரூ.5000/- வழங்கினார்.


சங்க அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றிய தோழர் P.ராமையன், 
பணி ஓய்வை ஒட்டி கௌரவிக்கப்பட்டார்.

சம்மேளனச் செயலர் தோழர்  SSG ஊதிய மாற்றம் குறித்த இன்றைய 
நிலை, மாநில மாநாட்டை வெற்றிகரமாக்கிட வேண்டிய அவசியம், 
BSNLEU சங்கத்தின் அராஜக செயல்பாடுகள் போன்றவற்றை
விளக்கினார்.   

 மாநில மாநாட்டிறகாக அனைத்து உறுப்பினர்களிடமும் தலா 
ரூ.200/- வசூலிப்பது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தலா 
ரூ.500/- வழங்குவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
5-7-16க்குள் வசூலித்த தொகையை மாவட்ட பொருளரிடம்
ஒப்படைப்பது என்றும் ஏற்கப்பட்டது.

உடனடியாக மாவட்ட துணைச் செயலர் தோழர் K.G.நரேஷ் குமார்,
ரூ.500/- வழங்கினார். 

   
மாவட்டச் செயற்குழுவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த 
கிளைச் செயலர் தோழர் S.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிளைத்
தோழர்கள் A.கருப்புசாமி, P.குமாரவேல் உள்ளிட்டோருக்கு நமது
 நன்றி.
Tuesday, June 28, 2016


                         

        தோழர் ஸ்ரீதர் !  மகிழ்ச்சியுடன் அமையட்டும் !
                     உமது பணி ஓய்வுக்  காலம் !!

கோவை மாவட்ட சங்கத்தின் சிறந்த செயல் வீரர்களில் ஒருவராக திகழும் தோழர் எஸ்.ஸ்ரீதர், பெரிய நாயக்கன்பாளையம்  கிளைச் செயலர் ,இம்மாதம் பணி ஓய்வு பெறுகிறார்.

கற்றோர் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பழமொழி. அதுபோல  
தோழர் ஸ்ரீதர் சென்ற இடமெல்லாம் நமது சங்கத்தின் கோட்டையாக 
மாறும் என்பது அவரது சிறப்பு.

ஏப்ரல், 1978ல் கொடுமுடியில் பணியில் சேர்ந்த நாள் முதல் இலாகா பணியிலும் சங்கப் பணியிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு  பணியாற்றியவர் தோழர் ஸ்ரீதர். பணியில் சேர்ந்த  ஒரு சில மாதங்களீலேயே செப்டம்பர் 1978ல் கொடுமுடி கிளைச் செயலராக 
கே.ஜீ போஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டு வென்றவர்.

1981ல் தாராபுரத்திற்கு மாற்றலில் சென்றவுடன் அங்கும் கிளைச் செயலராக தேர்ந்தெடுக்கபட்டார். 

இடையில் ஈரோடு மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்று  செயலாற்றினார். 

தோழர் மாலி அவர்களின் வளர்ப்பான ஸ்ரீதர், தலைவர்கள்  
முத்தியாலு, மதிவாணன் ஆகியோரால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.
  
கோவை மாவட்டத்தில்  பெரியநாயக்கன் பாளையத்திற்கு
 1993 ல் மாற்றலில் வந்த நாள் முதல் இன்று வரை 23 ஆண்டுகளாக தொடர்ந்து கிளைச் செயலராக பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார்.வேறு சங்கத்தின் கிளையே உருவாகாத அளவு அமைந்தது அவரது சீரிய செயல்பாடு .   

 கோவை மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார். 

பதவியை ஒரு பொருட்டாக கருதாமல்  செயலாற்றுபவர் தோழர் ஸ்ரீதர்.

இலாகா பணிகளிலும் கருமமே கண்ணாக பணியாற்றுபவர். CSC யில் அனைத்து விஷயங்களையும்  அறிந்து   வாடிக்கையாளர்களை மகிழ்விப்பவர்.

 சிறந்த தோழராக செயலாற்றிய தோழர் ஸ்ரீதர் அவர்களின் பணி 
ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய மாவட்டச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள். 
   


சிறக்கட்டும் பணி ஓய்வுக்  காலம் !

திரு P ரத்தினஸ்வாமி DGM (A)  

கடந்த காலங்களில் ஊழியர்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் நிதானமாகவும் நியாயமாகவும் செயல்பட்ட  திரு.P.ரத்தினஸ்வாமி DGM (Admn), P.கணேசன் DGM (F), P.ராஜன் DGM (Mktg) 
ஆகியோர் 30-6-16 அன்று பணி ஓய்வு பெறுகின்றனர்.

அவர்களது பணி ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய மாவட்டச்  சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

Friday, June 24, 2016

From the Face book of Com.C.K.Mathivanan..
National Forum along with many RGB members today met the President ( in charge), 
CEO and Secretary and submitted a memorandum to demand
1. Reduction of rate of interest
2. To begin construction of Flats on the
Land belong to Co-operative society in
Vellanur near Avadi.

In a discussion on our demands the CEO , Shri. Kannan assured our leadership that 
both our 
demands will be met by 15-07-2016 the date we fixed for agitation to begin 
for realisation of the said two demands.Our delegation was very happy at this and 
thanked the management of Telecom cooperative society for accepting our 
demands.


இன்று நமது தொலைத் தொடர்பு ஊழியர்களின் கூட்டுறவு சங்க தலைவர் (பொறுப்பு) மற்றும் கூட்டுறவு சங்க முதன்மை அலுவலர் திரு கண்ணன் ஆகியோரை , சென்னை மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் RGB உறுப்பினர்கள்  தோழர் மதிவாணன் அவர்கள் தலைமையில்  சந்தித்து, சாதாரண கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும், அடுக்குமனை கட்டும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்  என்று வலியுறுத்தினர்.

 ஜூலை 15க்குள்  இந்த பிரச்னைகள் குறித்து சாதகமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் 
என்று உறுதி அளித்துள்ளனர்.  
   
Thursday, June 23, 2016

தொழிற்சங்க சர்வாதிகாரத்தை உருவாக்கிட  
               BSNLEUவின்  விடாமுயற்சி !   

 ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் 
என்ற புதிய அங்கீகார விதிகள், 2013, உருவானவுடன்,  அந்த  விதிகள், தொழிற்சங்க ஜனநாயகம் காப்பதற்காக  BSNLEU செய்த சாதனை 
என்று வீரவசனம் பேசினார்கள்.

ஆனால், 2016ல்,  7வது அங்கீகாரத்  தேர்தல் துவங்கிய நேரம் முதலே தனது தொழிற்சங்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதே அதன் ஒரே குறிக்கோளாக இருந்தது.

அதற்காக அனைத்து பொய்ப் பிரச்சாரங்களிலும் அந்த சங்கம் ஈடுபட்டது.
தேர்தல் முடிந்த பிறகும் சதி செய்தது. அதையும் மீறி நமது சங்கம் அங்கீகாரம் பெற்றதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தற்போது ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நமது சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கியது தவறு என்று வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

2002ல்,  BSNLEU சங்கம் ஜெயித்துவிடும் என்ற அதீத நம்பிக்கையில் 
ஒரு   சங்க அங்கீகாரத்திற்கு ஒப்புக் கொண்டுவிட்டு, வெற்றி 
பெற்றவுடன் இரண்டாவது  சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டும் என்று இதே ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததும்  BSNLEU  சங்கம்தான்.

  பதிவான வாக்குகள் அடிப்படையில்தான் வாக்கு சதவீதம் 
கணக்கிடப்பட  வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் 
NFTE-BSNL சென்னை மாநிலச் செயலர் தோழர் சி.கே.மதிவாணன்
அவர்கள் வழக்கு தொடுத்தபோது, இதே BSNLEU சங்கம் மிகப்பெரிய முதலாளித்துவ வக்கீலை வைத்து அதை எதிர்த்து வாதாடியது.   

சில  ஆண்டுகள் கழித்து , பல்டி அடித்து,  பதிவான  வாக்குகள் அடிப்படையில் வாக்கு சதவீத்தை கணக்கிட வேண்டும் என்று  கோருவது விந்தையிலும் விந்தை மட்டுமல்ல, தான் எடுத்த  
வாந்தியை மீண்டும் உண்பதற்கு  சமமாகும்.
       
ஆகவே, BSNLEU,  தற்போது  கெடுமதியோடு தனது  சர்வதிகாரத்தை 
நிலை நாட்டிட செய்யும் முயற்சி தோற்கும் என்பது உறுதி .     

Wednesday, June 22, 2016


நமது சங்கத்தின் அடிமட்ட தொண்டராக பணியாற்றும் 
தோழர் P.ராமையன்  அவர்கள்  கொடுத்த பணி நிறைவு 
விருந்தின்போது கௌரவிக்கப்பட்டார். 


                     
             மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

அருமைத் தோழர்களே !
              வணக்கம் ! 
     நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழுக் கூட்டம்
மாவட்டத் தலைவர் தோழர் A.ராபர்ட்ஸ் அவர்கள்
தலைமையில் நடைபெறும்.

  இடம் : ராம் நகர் தொலைபேசி நிலையம்,
                  கோவை -9.     
     நாள் : 29-6-2016    ( புதன் கிழமை)
    நேரம் : மதியம் 3 மணி 
ஆய்படுபொருள் :
               1. உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் 
               2. மாநில மாநாடு 
              அ) சார்பாளர்கள் பங்கேற்பு திட்டமிடல்,  

               ஆ)மாநில மாநாட்டு நிதி வசூல் விரைவுப் படுத்துதல் 
                3. உறுப்பினர் பிரச்னைகள்
                4. இன்ன பிற (தலைவர் அனுமதியுடன்)


                                   சிறப்புரை :           தோழர் S.S.G

                                                                அகில இந்திய செயலர் .

அனைத்து கிளைச்  செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் 

தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.


                                                                          தோழமையுடன்,
22-6-16                                                              எல்.சுப்பராயன்
கோவை-18,                                              மாவட்டச் செயலர் 

(மாநில மாநாட்டிற்கு வசூல் செய்த தொகையை 
மாவட்ட பொருளரிடம் தரவும் )  

Tuesday, June 21, 2016

        இரட்டை நாக்கு பேர்வழிகள் !

                       Modi-750x500
          The Central government of India to give a major impetus to the country’s economy, radically liberalised the Foreign Direct Investment (FDI) regime by approving 100 percent FDI under government approval route for almost every 
sector, including defence, civil aviation and pharmaceuticals.

    
             
                                Will oppose FDI till our last breath: BJP

What BJP said in the opposition. 

NEW DELHI:  Assuring support to the traders opposing the Congress-led government's decision to allow FDI in retail, BJP leader Arun Jaitley said on Thursday that his party
 would oppose the move till its "last breath".

"This FDI (foreign direct investment) is not in favour of the consumer, farmer, trader, manufacturer and the country. That's why we are opposing it and will continue to oppose 

it till our last breath," Mr Jaitley said as he addressed a rally held at Ramlila Ground in 
New Delhi by the Confederation of All India Traders (CAIT).

"We stand united with the traders and the people of this country," he added.

The senior Bharatiya Janata Party (BJP) leader argued that under FDI, 60-70 per cent 

of the business will go into the hands of just two or three companies which will be 
harmful for the farmers.

"The farmers would be left with no choice but to sell their produce to them. When the number of sellers decrease, how will it benefit the farmers?" asked Mr Jaitley.


Monday, June 20, 2016


                                          மகிழ்ச்சியான செய்தி !        


   ஏப்ரல் 2016ல் மிக அதிகமான செல் இணைப்புகளை கொடுத்தது  BSNL தான் !!   

BSNL adds most wireless users in April: 
                                                     TRAI - ET telecom. 

Click Here

Wednesday, June 15, 2016


   பொதுத் துறை நிறுவனங்களில்  பணியாற்றும் அதிகாரிகளுக்கு   1-1-2017 முதல் சம்பள மாற்றம் 
செய்வது குறித்து பரிந்துரை செய்திட 3வது   ஊதிய மாற்றக் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. நம்மைப் போன்ற அதிகாரிகள் அல்லாத ஊழியர்க்கு சம்பள மாற்றம் செய்திட பேச்சு வார்த்தை நடத்திட வழிசெய்யும் வகையில் வழிகாட்டுதலை பொதுத் துறைக்கான அமைச்சகம் (DPE) வெளியிடவேண்டும். அப்பொழுதுதான் பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்க்கு சம்பள மாற்றம் செய்திட இயலும். அந்த வழிகாட்டுதலை வழங்கிட வலியுறுத்தி நமது சங்கத் தலைமை எழுதியுள்ள கடிதம்.

 Letter to DPE on wage revision for Non-Executives 


                                                                  Click Here

Tuesday, June 14, 2016


                         நன்கொடைக்கு  நன்றி !

      VRSல் பணி ஓய்வு பெற்ற தோழியர் கீதா மோகன் SS, 
தனது  கணவருடன்  மாவட்ட  சங்க  அலுவலகத்திற்கு  
வந்து நன்கொடை வழங்கினார். 
                   
                     அவருக்கு நமது நன்றி.  

Friday, June 10, 2016

பொதுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 
3வது ஊதிய மாற்ற குழு அமைப்பு !

பணி ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் சந்திரா அவர்கள் தலைமையில் பொதுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 1-1-2017 முதல் 
ஊதிய மாற்றம் செய்திட 6 மாதங்களில் பரிந்துரையை தருமாறு 
3வது ஊதிய மாற்ற குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது வரவேற்கத்தக்கது.    Wednesday, June 8, 2016

                             PGM அவர்களுடன் சந்திப்பு !

8-6-16 அன்று நமது முதன்மைப் பொது மேலாளர் திரு  D. சிவராஜ் அவர்களை மாவட்டச் செயலர் தோழர் L. சுப்பராயன், மாவட்டத் தலைவர்   தோழர் A.ராபர்ட்ஸ், மாவட்ட துணைத் தலைவர் தோழர்  S.கோட்டியப்பன்,  P.ஈசாக், மெயின் எக்சேஞ்ச் கிளைச் செயலர் 
தோழியர் L. தனலட்சுமி   ஆகியோர் சந்தித்து  Sr.TOA கேடர் 
சுழல்  மாற்றல் குறித்தும், நிர்வாக தேவைக்காக OP செக்ஷனை 
மெயின் தொலைபேசி நிலையத்திலிருந்து கோவை-43  PGM  அலுவலகத்திற்கு மாற்றுவது, மெயின் தொலைபேசி
 நிலையத்திற்கு  TRA செக்ஷனை மாற்றுவது பற்றியும் 
வாதிக்கப்பட்டது. 
 OP, WORKS  ஷெக்சன்களை  மாற்ற வேண்டிய   அவசியத்தை
 PGM விளக்கினார்.

சுழல் மாற்றல் அமலான பிறகு செக்ஷன் மாற்றுவதுதான் சரியாக இருக்கும் என்றும் ஆகவே 2008லிருந்து அமலாகும் சுழல்  

மாற்றலை உடனடியாக அமலாக்க வலியுறுத்தி உள்ளோம். 

  
Displaying 20160608_152804-1.jpg


Monday, June 6, 2016

                                             
   வரவேற்கவேண்டிய முடிவு !
இன்று  நடைபெற்ற  NFTE-BSNL  சென்னை
மாநிலசங்கத்தின் விரிவடைந்த செயற்குழுக்
கூட்டத்தில், 
          "   நமது  கூட்டுறவு சங்கம் வழங்கும்
சாதாரண கடனுக்கான  வட்டி விகிதத்தை
குறைக்க வேண்டும், அடுக்கு மனை வீ டு 
கட்டும்  பணியை  விரைவாக  துவக்கி  
கட்டி முடிக்க வேண்டும் "
என்று சொஸைட்டி நிர்வாகத்தை மாநில 
சங்கம் அறிவுறுத்த வேண்டும் என்று 
தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

.Circle Union will advise the Leadership of Telecom Co-operative society to reduce 
the rate of interest for loans availed by employees and to begin the construction 
work of apartments inside the Vellanur village for our employees without further delay.

Wednesday, June 1, 2016

                         DGM (A) அவர்களுடன் சந்திப்பு !!

இன்று மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள் L. சுப்பராயன்,  A.ராபர்ட்ஸ்,  S. கோட்டியப்பன், A.செம்மலமுதம் ஆகியோர்  DGM (Admn & Plg)) 
திரு. P.ரத்தினசாமி அவர்களை சந்தித்து ஊழியர் பிரச்னைகளை விவாதித்தோம்.

  டெலிக்காம் டெக்னிஷியன் கேடரில் சுழல் மாற்றல் மற்றும் விருப்ப மாற்றல் உத்திரவுகள்   வெளியிட்டுள்ள பின்னணியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை அவர் இம்மாதம் பணி ஓய்வு பெறுமுன் சுமுகமாக தீர்க்குமாறு கேட்டுக் கொண்டோம்.