Saturday, December 31, 2016

                    Image may contain: text

இன்று பணி ஓய்வு பெறும் 
தோழியர் K.பாரதமாதா உடுமலை, 
தோழர் S.V திருச்செல்வம், RNP, 
தோழர் R.நடராஜன் பொள்ளாச்சி 
ஆகியோர் நமது சங்கத்திற்கு 
நன்கொடை வழங்கினர்.
நன்றி!   நன்றி !! 

தோழர், தோழியரின் பணி ஓய்வு காலம் சிறப்புடன் அமைய வாழ்த்துகிறோம்.

Image may contain: 4 people, people standing and indoor

Image may contain: 1 person, standing

Image may contain: 5 people, people standing

Thursday, December 15, 2016

Image may contain: 8 people
No automatic alt text available.


Image may contain: text

No automatic alt text available.




                                Image result for red salute comrade

   வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற 
      அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் !
---------------------------------------------------------------------------

உண்மை நிலையும் உள்ளக் குமுறலும்  !

இன்று காலை   வேலைநிறுத்தம் உண்டா இல்லையா என்றறிய ஒரு தோழியர் நம்மிடம்  தொடர்பு கொண்டார்.
கண்டிப்பாக உண்டு என்று சொன்னவுடன், அவர் தொடர்ந்தார்: 

" சார், நமது சங்கக் கூட்டம் என்றுதான் 28-`11-16 அன்று துடியலூரில் நடந்த கூட்டத்திற்கு    ஆவலுடன் சென்றேன். உங்களைப் பற்றி 
குற்றப் பத்திரிக்கை வாசித்தனர். அப்போதுதான்    நாம் ஏதோ தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ ?என்று தோன்றியது " 

Monday, December 12, 2016

கோவை ராமநாதபுரத்தில் பணியாற்றும் தோழர் திருச்செல்வன், 
    தனது பணி நிறைவை ஒட்டி அளித்த விருந்தில் பங்கேற்று 
                                வாழ்த்தினோம்.
பொள்ளாச்சியில் நடந்த வேலை நிறுத்த விளக்க கூட்டம் !








Saturday, December 10, 2016


        Image result for C K MATHIVANAN



Jun 06, 2011, 10.02 PM | Source: CNBC-TV18 Maran should step down: NFTE-BSNL's 
CK Mathivanan The National Federation of Telecom Employees today staged a protest 
against Dayanidhi Maran. 
They demanded that Maran should step down for misusing 323 BSNL lines. 

இந்த போராட்டத்தின் தளபதிக்கு எங்கள் வாழ்த்துகள்.... 

                                                       முகநூலில்  தோழர்  மாலி....

  BSNL  சட்டவிரோத இணைப்புகள் வழக்கு: 

மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை 



மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் (பிஎஎஸ்என்எல்) தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்பட ஏழு பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    

           





     

Thursday, December 8, 2016

    தனி டவர் கம்பெனி அமைக்கும் முயற்சியை முறியடிப்போம் !
  டிசம்பர்-15 அனைத்து சங்கங்களின் ஒன்றுபட்ட  வேலைநிறுத்தம் .

கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த நமது நிறுவனம்,
தற்போது லாபத்தை நோக்கி பீடுநடைபோடுகிறது. ஆனால் மத்திய
அரசோ நமது நிறுவனத்தை மீண்டும் வலுவிழக்க    வைக்கும்
மிகவும் பாதகமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே  நமது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 65,000 செல் 
டவர்கள் உள்ளன. அவை அனைத்தும் நமது ஊழியர்களாலும் அதிகாரிகளாலும் பராமரிக்கப்படுகின்றன.  தற்போது மேலும் 
20,000 டவர்களை நிர்மாணிக்கும்   பணி மும்மரமாக நடைபெற்று வருகின்றது. ஆக 85000 டவர்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி.

 நமது கடும் எதிர்ப்பையும் மீறி    இந்த டவர்களை பிரித்து தனி 
கம்பெனி அமைக்க 6-8-2015 அன்று நடந்த  மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு இறுதி கட்ட நிலைக்கு வந்துள்ளது.

இந்த முடிவு நமது  நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும்
 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அதன் ஊழியர்கள் மற்றும் 
அதிகாரிகளின் எதிர்காலத்திற்கும் பெரும் கேடு 
விளைவிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை,

தனித்தனியாக BSNL நிறுவனத்தின் சேவைகளை கூறுபோட்டு 
பிரித்து விட்டால் அதன் வளர்ச்சி என்பது பெரிதும் சுணங்கிப் போகும்.ஏற்கனவே broadband   பணிக்கென BBNL எனும் நிறுவனம் அமைக்கப்பட்டதும் அதே குறுகிய  நோக்கத்துடன்தான்.

தொலைத் தொடர்புத் துறையில் புதியதாக தடம் பதித்துள்ள அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு செல் டவர் 
இல்லாத குறையை போக்கவும், அந்த நிறுவனம் புதியதாக செல் டவர்களை நிர்மாணிக்க ஆகும் செலவை குறைக்கவும்தான் 
BSNL நிறுவனதிற்கு சொந்தமான செல் டவர்களை பிரித்து புதிய 
கம்பெனி அமைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது

இது நடைமுறைக்கு வந்துவிட்டால், இனி அந்த செல் டவர்களை பயன்படுத்த  BSNL    நிறுவனமும்  அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிவரும் என்பது கொடுமையானது. இதனால் கூடுதல் செலவு ஆகும். BSNLன்  நிதியாதாரமும் பாதிக்கப்படும்.

ஆகவேதான்   நாம் அனைவரும் நமது நிறுவனத்தை காக்கும்
டிசம்பர்-15, 2016 அன்று நடைபெறவுள்ள அனைத்து சங்க வேலைநிறுத்த
போராட்டத்தில்  தவறாது   பங்கேற்க அறைகூவி அழைக்கிறோம் !

Sunday, December 4, 2016



BSNL  நிறுவனத்தைத் துண்டாடத்துடிக்கும் 
மக்கள் விரோத மத்திய அரசின் முடிவை எதிர்த்து 

செல் கோபுரங்களை நம்மை விட்டுச் செல்ல விடமாட்டோம் 
என்ற உறுதியுடன் அனைத்து சங்கங்களும் பங்கு கொள்ளும் 
டிசம்பர் 15 ஒரு நாள்  அகில இந்திய 
வேலை நிறுத்தத்தை  வெற்றிகரமாக்குவோம்...

ஓங்கி ஒலிக்கட்டும் உரிமைக்குரல்கள்... 
ஓங்கி உயரட்டும் உரிமைக்கரங்கள்...

Saturday, December 3, 2016

இன்று சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 

மெயின் எக்சேஞ்ச் எக்ஸ்டர்ன்ல் கிளை, 
சூலூர் கிளை, 
பீளமேடு கிளை 
ஆகியவற்றின் சார்பாக   போனஸ் நன்கொடை வழங்கப்பட்டது.

                          




NFTE BSNL கோவை மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடந்த
 சர்வதேச புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோ மறைவை ஒட்டி 
நடந்த அஞ்சலி கூட்டத்தில் அரசுப் பணியாளர் சங்கத் தலைவர்
தோழர் V.S உரையாற்றினார்.
















Friday, December 2, 2016


                 மெய்சிலிர்த்து போனேன் !
                                           --குறிச்சி கிளை கூட்டத்தில்  தோழர் ராபர்ட்ஸ்.


                                            



தோழர் சுப்பராயன் அவர்களின் மனைவி காலமானபோது நடந்த 
ஒரு நிகழ்வு என்னை மெய்சிலிர்க்க வைத்தது..

துக்கம் விசாரிக்க   DGM  அவரது  வீட்டுக்கு  சென்றபோது  மனைவியை இழந்த  தனது துக்கத்தை அடக்கிக் கொண்டு,  அவரிடம்    முக்கியமான இரண்டு ஊழியர்களின்   பிரச்னைகளை  தீர்க்க வலியுறுத்தி உள்ளார்  தோழர் சுப்பராயன். 

அடுத்தநாள் மற்றொரு அதிகாரியை சந்தித்தபோது அவர் இதை 
என்னிடம் நெகிழ்ச்சியோடு   பகிர்ந்தபோது நான் மெய்சிலிர்த்து போனேன்.     

மாநில சங்க  நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தின் போதும் தனக்கு 
கிடைத்த சிறு  இடைவெளியில்    CGM அவர்களிடம்   கோவையில்  
ஒரு ஊழியருக்கு இழைக்கப்பட்ட  அநீதியை களைய வேண்டும் 
என்று   வலியுறுத்தினார்.  

இப்படி ஊழியர் நலன் பற்றி  சிந்தித்து செயலாற்றும்  தோழர் 
சுப்பராயன் அவர்களை  ஒரு சிலர்  வேண்டுமென்றே  அவதூறு பேசுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
                         
                     

                                  இன்றைய செய்தி !

சாய்பாபா டெலிகாம் டெக்னீஷியன் மாற்றல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
                            குறிச்சி கிளை சிறப்புக் கூட்டம் !

குறிச்சி கிளைக் கூட்டம் கிளைத் தலைவர் தோழர் ஆர். நடராஜன் அவர்கள் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலர் தோழர் சுப்பராயன்,
மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ்  ஆகியோர் பங்கேற்றனர். டிசம்பர் 15 வேலைநிறுத்தம், திருச்சி ஊதிய மாற்ற கருத்தரங்க தீர்மானங்கள், நமது  அமைப்பு நிலை விளக்கப்பட்டன. கூட்டம் முடிந்தவுடன் தோழர்கள் மாவட்டச் செயலரிடம் போனஸ் நன்கொடை வழங்கினர்.
                 

          

    
     

      






 


                                             அஞ்சலி கூட்டம் 
நாளை 3-12-16 அன்று தொழிற்சங்க அலுவலகத்தில்
நடைபெறும். அனைவரும் தவறாது பங்கேற்போம்.  

                      

Tuesday, November 29, 2016

                                        மாநிலச் செயலரின் விளக்கம்           

      சென்ற மாவட்ட மாநாட்டில் மீண்டும் மாவட்டச் செயலராக      வேண்டும்   என்று பல  சாகஸங்கள்    செய்தார் ராமகிருஷ்ணன்.
 அது  சாத்தியமாகாது    போனதால், வேறு வழியின்றி  தோழர் L.S     பெயரை முன்மொழிந்தார்.       அதிலிருந்து மாவட்ட சங்கத்தை சீர்குலைப்பதையே தனது ஒரே வேலையாக செய்து வருகிறார்.  
அந்த நோக்கத்தோடு ஒரு கூட்டத்தை 28.11.16 அன்று கூட்டினார்.        

முறையற்ற  அந்த கூட்டத்தில்       மாநிலச் செயலர் பங்கேற்றது  
 தவறு என்ற  தோழர்களின்    கருத்தை தொலைபேசி மூலம் தெரிவித்தோம்.  

ராமகிருஷ்ணன் கூட்டிய கூட்டம் முறையற்றது என்று விளக்கவும் 
தவறான முடிவுகள் எடுக்காமல் தடுக்கவே அங்கு சென்றதாகவும் மாநிலச் செயலர்  கூறினார். 

Saturday, November 26, 2016

                                                    வாழ்த்துக்கள் 

தஞ்சை மாவட்ட சங்க புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட
மாவட்டத் தலைவர் தோழர் பன்னீர்செல்வம்,   மாவட்டச் செயலர் 
தோழர் கிள்ளிவழவன், பொருளர் தோழர் சேகர் உள்ளிட்ட புதிய 
மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்.
                                        வேண்டாம்,  பொய் பிரச்சாரம்  !      

 கடந்த ஓராண்டில் நமது உறுப்பினர் பலர் மாற்று சங்கத்திற்கு சென்று விட்டதாக  சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.   

அவர்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை  : 

பட்டியலை வெளியிடுங்கள். அவர்கள் யாருடைய ஆதரவாளர்களாக இருந்தனர்?  அவர்களை அனுப்பி வைத்தது யார் என்பதை பகிரங்கமாக விவாதிக்க நாம் தயார் .

Wednesday, November 23, 2016

நவம்பர் 24- சம்மேளன தினம் !

     சாதனைகள் கண்ட NFPTE சங்கம் உருவான நவம்பர் 
24 அன்று நமது சங்கத்தை மேலும் வலிமைமிக்கதாக்க

 உழைத்திட உறுதி ஏற்போம் !




Tuesday, November 22, 2016


கருத்தரங்கம் முடிந்து திரும்பும்போது தோழர்களுடன்...... 

கருத்தரங்கம் முடிந்து திரும்பும்போது,நம்முடன் வந்த
 தோழர் சேஷு ராஜன் அவர்களின் 60வது பிறந்த நாளை 
கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.












                    பயன்மிகு ஊதிய மாற்ற கருத்தரங்கம் !































சிறப்பான ஏற்பாடுகளை செய்த திருச்சி தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்