Sunday, October 18, 2015

            
   என்.ராமகிருஷ்ணன் மா.செ பொறுப்பில்

                               இருந்தபோது


                              


என். ராமகிருஷ்ணன் மாவட்டச் செயலர் பொறுப்பில் 
இருந்தபோது  2006 ல் அவர் எழுதிய மாவட்ட மாநாட்டு 
செயல்பாட்டு அறிக்கையிலிருந்து.......



                    இன்று அவர் பொறுப்பில் இல்லாதபோது
                                           



                     
 பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு !
      
        புரிந்து கொண்டால் நன்மையுண்டு !!

கடந்த 4 மாதங்களாக மாவட்டச் செயலராகிய என்னைப்பற்றி 
அவதூறுப் பிரசாரம் செய்பவருக்கு  சமர்ப்பணம் !

 " நான் எனது சொந்த வேலையில் பிஸியாக உள்ளேன், எனது
கையொப்பத்தை நீயே போட்டு சென்னை துணை லேபர் கமிஷனர்
அலுவலகத்திற்கு  புகார் கடிதத்தை அனுப்பி விடு " என்று அன்றைய 
மாவட்டச் செயலர் என். ராமகிருஷ்ணன் என்னிடம் கேட்டுக் கொண்ட
-தன் அடிப்படையில் நான் செய்தது தோழமை  நம்பிக்கையின் 
வெளிப்பாடு. 

 7 வருடம் கழித்து அதை forgery என்றும் களவாணிித்தனம் என்றும்
இப்போது எழுதுவது நம்பிக்கை துரோகம்.

   மதுரை மாநில மாநாட்டிற்கு பிறகு , கோவையில் சங்க ஒற்றுமை 
கருதி அப்போதைய மாவட்ட துணைச் செயலரான தோழர் ராபர்ட்ஸ்
அவர்களையும் நிர்வாகத்தை சந்திக்க போகும்போது  அழைத்துச்
செல்லவேண்டும் என்று நான்  அறிவுறுத்தியபோது,



 " அவன் ப்ரூட்டஸ், எனது எதிரியை சந்தித்து விஜிலென்ஸ் மூலம்
என்னை மாட்டி விட்டவன் " என்று கூறி மறுத்து விட்டு, நிர்வாகம்
அவரை தனியாக சந்திப்பதையும்  அனுமதிக்க மாட்டேன் என்று
மிரட்டிய அதே ராமகிருஷ்ணன்,  இன்று நாம் அழைத்தும் நம்மோடு
வராமல் தனியாக சென்று நிர்வாகத்தை சந்திப்பது இரட்டை வேடம்
அன்றோ !



அகில இந்திய தலைமையே சொன்னாலும் BSNLEU சங்கத்துடன் 

சேர்ந்து  தர்ணா, ஆர்பாட்டம் ஆகியவற்றை நடத்த மாட்டேன் என்று 
தீண்டாமைக் கொள்கையை கடைபிடித்தவர்,  தற்போது, முன்னாள் 
மாவட்டச் செயலர் ஆனவுடன் BSNLEUவுடன் கைகோர்த்துக்கொண்டு, 
அந்த சங்கத்தின் மாவட்டச்  செயலர் எழுதிய கடிதத்தில் கண்ணை 
மூடிக் கொண்டு நமது மாவட்டச் செயலர் கையெழுத்து இட வேண்டும் 
என்று அவர் முன்னிலையில் நிர்பந்திப்பது சரணாகதியின் உச்ச கட்டம்.



 கோவை வெளிப்புற கிளை மாநாடு நடத்த வலியுறுத்திவிட்டு, தனக்கு

அந்த கிளையில் ஆதரவு இல்லை என்று வெட்ட வெளிச்சமானவுடன்  

 மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்காமல், ஒரு மாதம் கழித்து 
அக்கிளையின் 33 உறுப்பினர்களில் நான்கே நான்கு  உறுப்பினர்களின்
பங்கேற்போடு மைனாரிட்டி மாநாடு நடத்தி அதற்கென நோட்டீஸ்
போர்டு வைத்து மாவ்ட்ட சங்கத்தைப் பற்றி அவதூறான செய்திகளை
வெளியிடுவது  அராஜகமான அடாவடிச் செயல்.






வழக்கம்போல, 2016 ஏப்ரலில் T.Mech ஊழியர்க்கு சுழல் மாற்றல்
வரும்போது  தனக்கு கவுன்சிலிங் அடிப்படையில் திருப்பூர், அவினாசி,
சோமனூர் போன்ற இடங்களுக்கு போக வேண்டி  இருக்கும் என்று
தெரிந்து கொண்டு, அதற்கு முன்பாக, தான் மட்டும் வீட்டுக்கு் அருகில்
மேட்டுபாளையத்திற்கு மாற்றல் பெற்று தப்பித்தது புத்திசாலித்தனமான
சுயநலமன்றோ !

தன்னை சமாதானம் செய்ய முயற்சிக்கும்  அனைவரிடமும்
 " என்னை  மீண்டும் மாவட்டச் செயலர் ஆக்கினால்தான் 
ஒத்துழைப்பேன், இல்லையென்றால் போட்டிச் செயல்பாடு தொடரும் "


என்று 
முன் நிபந்தனை போடுவது எந்தவிதமான ஜ
னநாயகம் என்று
நமக்கு தெரியவில்லை !

இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடாமல் இருப்பது, நம்மை
எல்லாம் அடையாளம் காட்டிய நமது உயிமூச்சான சங்க 
வளர்ச்சிக்கு 
நல்லது  என்பதே ந
மது தோழமை வேண்டுகோள் !

Monday, October 12, 2015


              சீர்குலைவாளருக்கு நிர்வாகம்
                  எச்சரிக்கை  கடிதம் 

மெயின் எக்ஸேஞ்ச் External  கிளை மாநாட்டு நிர்வாகிகள்

தேர்தலில்    பங்கேற்க பயந்து  ஒரு மாதம் கழித்து போட்டி 
மாநாடு நடத்தி ஒரு நோட்டீஸ் போர்டையும் வைத்து அதில் 
மாவட்டச்  சங்கத்தை கொச்சைப்படுத்தியும் மாற்று சங்கத்திற்கு 
அதரவாகவும்  முன்னாள் மாவட்டச்செயலர் சொல்வதை எல்லாம் 
அதில் எழுதி நமது சங்கத்திற்கு அவப்பெயரை செய்து வருகிறார் 
ஒரு அப்பாவி நண்பர்.
       
                                     ஒரு சேம்பிள்



   இதை கண்டித்து நாம் நிர்வாகத்திற்கு தகுந்த  நடவடிக்கை எடுக்க 

வேண்டும் என்று  கடிதம் கொடுத்தோம்.

நிர்வாகம் சமபந்தப்ப்ட்ட ஊழியருக்கு 72 மணி நேரத்திற்குள் 

அந்த போர்டை எடுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தவுடன், 

நோட்டீஸ் போர்டில் கை வைத்தால் அந்த அதிகாரியின் கையை 

வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார், அடவாடிப் பேர்வழி..
  

              சீர்குலைவை அனுமதியோம் ! 

        சீர்குலைக்க அனுமதியோம் !

              கோவை மாவட்ட செயலர் தடாலடி உண்ணாவிரதம்.
AGM(Admn) அறையில் மா.செ. திடீர் உண்ணாவிரதம் துவங்கினார். 
       மேலும் விரிவான தகவலுக்கு மா.செ.அணுகவும்.
      -- முன்னாள் மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணனின்  முகநூலிலிருந்து

                           

மாவட்டச் செயலர் L.S, பொறுப்பேற்றவுடன். ஊழியர் பிரச்னைகளை 
அதிகாரிகளுடன் விவாதிக்க செல்லும்போது, முன்னாள் மாவட்டச் 
செயலரான N.ராமகிருஷ்ணனையும் நம்முடன் வருமாறு  பலமுறை 
அழைத்தோம். 

நம்மோடு வர முடியாது, "  மாவட்டச் சங்கத்திற்கு போட்டியாக  தனியாக 
 அதிகாரிகளை சந்திப்பேன், என்னை யாரும் தடுக்க முடியாது ".  என்று 
சவால் விடுத்தார்  N. ராமகிருஷ்ணன். 
  சங்க நலன் கருதி 4 மாதங்கள் பொறுமை காத்தோம். பல முன்னணி 
தோழர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றபோது அதற்கு ஒத்துழைப்பு 
நல்கினோம்.   

ஆனால், அவர் எதற்கும் ஒப்புக்கொள்ளாமல் அவரை மீண்டும் மாவட்டச்செயலர் 
ஆக்கினால்தான், ஒத்துழைப்பேன் என்று எல்லோரிடமும் கூறிவிட்டார்.

நேற்று காலை  AGM (A) அவர்களை சந்திக்க மாவட்டச் செயலர் சென்றபோது,
மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலர் பதவிக்கு மீண்டும் தான் தேர்ந்தெடுக்கப்
படாததை  இன்னும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல்  பழைய ஹோதாவில் 
குமரேசன், மற்றும் இரண்டு தோழர்களுடன்  AGM அவர்களின் அறையில் அமர்ந்து 
ஊழியர்கள் பிரச்னையை விவாதிப்பது போல பாவ்லா செய்து கொண்டிருத்தார், 
N.ராமகிருஷ்ணன்

சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒரு சிலருக்கு நிர்வாகம்  துணை 
போகக் கூடாது, அதை அனுமதிக்கவும் மாட்டோம்  என்று  கூறி மாவட்டச் 
செயலர் L.S.உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார்.

  AGM அவர்கள் , தான் முன்னாள் மாவட்டச் செயலருடன்  எந்த பிரச்னையையும் 
விவாதிக்கவில்லை என்றும் ஊழியர் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் 
என்றால் மாவட்டச் செயலரை அழைத்து வரச் சொன்னதாகவும் கூறினார்.

மாவட்ட மாநாட்டில் தோழர் L.S. பெயரை முன் மொழிந்து ஏகமனதாக 
தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துவிட்டு தற்போது போட்டியாக செல்படுவது
ஏன் ?  "  என்று ராமகிருஷ்ணனிடம் AGM முன் நேரடியாக கேள்வி கேட்டார் எல்.எஸ்.

பிரச்னை பெரியதாகும் முன் வெளியேறி விடுங்கள் என்று AGM கூறியவுடன் 
மற்ற மூவரையும் அழைத்துக் கொண்டு  ராமகிருஷ்ணன் வெளியேறினார்.

 விஷயத்தை கேள்விப்பட்ட மாவட்ட தலைவர் தோழர் A.ராபர்ட்ஸ் உடனடியாக 
ஓடோடி வந்தார். 
  
  இனி  மாவட்டச் செயலருடன் வரும் மாவட்ட நிர்வாகிகளை மட்டும் நான் 
சந்திப்பேன் என்று AGM (A)  உறுதி அளித்தார்.




 .

                             செயலகக் கூட்ட முடிவுகள் !

                       
                       
                         


கோவை நகரில் உத்தேசிக்கப்பட்ட மாற்றல் கொள்கை அமலாக்கம் குறித்து ஆழமான விவாதம் 4 மணி நேரம் நடந்தது

        இரண்டு அங்கீகாரச் சங்கங்களும் ஏற்றுக் கொண்ட நிலைபாட்டை நிர்வாகம் பாரபட்சமின்றி முழுமையாக அமலாக்க வேண்டும் ;

ஒரு சங்கத்தின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து ஒரு பகுதியை மட்டும் அமலாக்கிவிட்டு மற்ற பகுதிகளை அமலாக்காமல் தள்ளிப் போடுவது  சரியல்ல என்று ஏகமனதாக ஏற்கப்பட்டது. இல்லையென்றால் அமலாக்கிய ஒரு பகுதி மாற்றல்களை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி போராடுவது,

  சங்கத்தின்  ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் 
ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்கு நிர்வாகம் துணை போகக் கூடாது என்று வலியுறுத்துவது என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவேண்டும், பிரதி மாதம்
 ஏழாம் தேதிக்குள் முறையாக சம்பளம்  பட்டுவாடா செய்யப்பட வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அமலாக்க வலியுறுத்திடவும் முடிவெடுக்கப்பட்டது..

  போராட்ட தேதியை மாவட்ட செயலரும் தலைவரும் கலந்துபேசி முடிவு செய்ய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.



        .





Wednesday, October 7, 2015

            மிகுந்த   நன்றியின் வெளிப்பாடு  !

  15 ஆண்டுகள்  காத்திருப்புக்கு பின், நமது மாவட்டத்தில் உள்ள 
ஆனைமலை பகுதியைச் சார்ந்த  தோழர் M.கிருஷ்ணசாமி, T.Mech,  
தோழர்  V. குமார் T.Mech ஆகியோருக்கு   BSNL  Absorption   உத்திரவு   
வெளியாகி   உள்ளது.

       

     அந்த இரண்டு தோழர்களும்  மாவட்ட  சங்க அலுவலகத்திற்கு 

 வந்து இந்த  உத்திரவைப் பெற அரும்பாடுபட்ட மாவட்ட, மாநில,  


அகில   இந்திய    சங்கங்களுக்கு    தங்களது    மிகுந்த     நன்றியை  


தெரிவித்தனர். 


         

          1-10-2000 முதல் 31-10-2015 வரையிலான 15 ஆண்டுகளுக்கான   

IDA  அரியர்ஸ் வந்தவுடன் கணிசமான   தொகையை   அனைத்து 


மட்டங்களுக்கும்  நன்கொடையாக    வழங்குவோம்   என்று மிக்க 


 மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.    

Sunday, October 4, 2015

      வருத்தத்திற்குரிய புறக்கணிப்பு !


             சிறிய பண்ருட்டி கிளைப் பிரச்சனையை காரணம் காட்டி 
நமது நண்பர்கள்  புறக்கணித்தனர்.  மாவட்ட செயலர்  இரா.ஸ்ரீதர்  
மாற்று தீர்வை  அளித்தும்  அதனை  ஏற்றுக்கொள்ளாமல் மாநில 
செயற்குழுவை  புறக்கணித்து கலந்து கொள்ளாதது வருத்தத்துக்கு
உரியது.
                                  கடலூர் வெப் சைட்டிலிருந்து

நமது  மாநில சங்கத்தின் சில அமைப்பு பிரச்னைகள் காரணமாக
பல   மாவட்டச்   செயலர்களும்  மாநில  சங்க  நிர்வாகிகளும் 
மயிலாடுதுறையில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த செய்தியை நாம் அமைப்பு நலன் கருதி பகிரங்கமாக்க விரும்பவில்லை.

 கடலூர் மாவட்டச் செயலர் அச்செய்தியை வெளியிட்டுள்ளதால்
 அதற்கான காரணத்தை விளக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. 


மயிலாடுதுறையில் நடந்த  செயற்குழுவை ஒற்றுமையாக நடத்த 
வேண்டும் என்று நாம் உளமாற விரும்பியதால்தான் அதற்காக 
முன் முயற்சி எடுத்தோம். இது குறித்து மாநில சங்கத்தின் முக்கிய 
நிர்வாகிகள், அமைப்பு பிரச்னைகளை செயற்குழு கூடும் முதல் 
நாளன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை விவாதித்து 
ஒத்த கருத்தை உருவாக்க  முயற்சித்தோம்.

     கோவை மாநில மாநாட்டு முடிவுக்கு எதிராக,  அங்கீகாரத் 
தேர்தலில் சென்னை தொலைபேசி மாவட்டத்தில் வாக்களிக்கும்
உரிமையுள்ள தோழரை தமிழ் மாநிலத்தில்  உள்ள  STR மாவட்ட
செயலராக தேர்ந்தெடுத்தது முறையற்ற செயல் என்று சென்னையில்
நடந்த  செயற்குழு கூட்டத்திலேயே உறுதியாக எடுத்துரைத்தோம்.
அகில இந்திய சங்கமும் இப்பிரச்னையை பேசித் தீர்ப்போம் என்று 
கூறியுள்ள நிலையில் இந்த செயற்குழு கூட்டத்தில்  அந்த தோழர் 
மாவட்டச் செயலராக பங்கேற்காமல் இருந்தால் சுமுக சூழல் 
உருவாகும் என எடுத்துரைத்தோம். 

எந்த கிளையையும் கலைத்து மாநாடு நடத்தி அங்கீகரிக்கும் உரிமை 
சங்க அமைப்பு விதிகளின்படி மாவட்ட சங்கத்திற்கு கிடையாது. 
பண்ருட்டி கிளையை கலைத்துவிட்டு தங்களுக்கு சாதகமானவர்களைக்
கொண்டு  புதிய கிளையை உருவாக்கியது தவறான செயல், இந்த
நடைமுறை ஒருமுறை ஏற்கப்பட்டால் இனிமேல் மாவட்டச் 
செயலர்கள் தங்கள் இஷ்டம்போல த்ன்னிச்சையாக செயலாற்றி
 ஜனநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவர். ஆகவே 
பண்ருட்டி கிளைச் செயலரே மாநாட்டை நடத்த அனுமதிக்க்வேண்டும் 
என்ற இரண்டே இரண்டு தீர்வுகளை ஏற்க கோரினோம். ஏற்க மறுத்த
காரணத்தாலேயே, சென்னையில் நடந்தைப்போல மீண்டும் பிரச்னை
ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், செயற்குழுவில் பங்கேற்க
ஆவலுடன் சென்ற நாம் மிகுந்த ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும்
புறக்கணிப்பு முடிவை எடுத்து உடனே ஊர்  திரும்பினோம்.

நாமெல்லாம் ஜெகன் அவர்களின் பாதையை பின்பற்ற வேண்டும் 
என்று அவரது பிறந்த நாளிலும் நினைவு  நாளிலும் உறுதி
ஏற்கிறோம்.

கே.ஜீ.போஸ் அணியினர் நம்முடன் இருந்தபோதும்கூட அமைப்பு 
பிரச்னைகள் வந்தால், தோழர் ஜெகன்  காட்டிய  பாதை :
LCM-Lowest Common Multiple) (மீச்சிறு பொது மடங்கு) என்ற 
அனைவரும் ஏற்கக்கூடிய ஒரு நடுநிலையான தீர்வு என்பதாகும்..
  
நமக்குள் தீர்க்க முடியாத பிரச்னை என்பது எதுவும் கிடையாது 
என்பதே நமது ஆழமான கருத்து. 

( It is possible If we bury the egos and try for a consensus as was  
practised by Com.Jagan) 

நமது ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு நமது சங்கத்தின் 
வளர்ச்சி, வெற்றி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து 
அனைவரும் முயற்சி செய்தால் அசைக்க முடியாத ஒற்றுமை 
சாத்தியமே.

சாதிக்க முடியாததை சாதித்து காட்டுவோம் (Make Impossible possible)
என்று மைசூர் அகில இந்திய மாநாட்டில் தோழர் குப்தா விடுத்த
அறைகூவல்தான் நமது நினைவுக்கு வருகிறது. 

அதற்கான திசைவழியில் அனைவரும் செயலாற்ற வேண்டும் 
என்பதே நமது விளைவு.  


       




தொலைத்  தொடர்புத்  துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 

1. பிரதி மாதம் 7ந்தேதிக்குள் சம்பளம் தவறாது பட்டுவாடா 
    செய்யப்பட வேண்டும் 


2. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்

3.அனைவருக்கும் EPF/ESI சலுகை வழங்கப்படவேண்டும்

4. சட்டபடியான போனஸ் வழங்கப்படவேண்டும்

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 

சென்னை வள்ளுவர் கோட்டம் முன் 3-10-15 அன்று  நடந்த 

பெருந்திரள் ஆர்பாட்டத்தில் தோழர் எல். சுப்பராயன் உரையாற்றினார்.




\