Tuesday, November 3, 2015


             உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு ! 

நேற்று கூடிய செயலக கூட்டத்தின் முடிவின்படி இன்று  PGM அவர்களுடன் பேச்சுவார்ர்த்தை நடைபெற்றது. DGM(A), AGM(A) ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்றனர்.  காலை 11.00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை மதியம் 1 மணிவரை நீடித்தது. 
  
நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்கள் L.S, A.ராபர்ட்ஸ், 
A.செம்மல் அமுதம், S.கோட்டியப்பன், L.தனலட்சுமி, W.சாந்தி பிரேமகுமாரி , அந்தோனி மரிய ப்ரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.  .

நாம் வைத்த அனைத்து கோரிக்கைகளின் நியாயத்தை நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, அனைத்து பிரச்னைகளையும் விரைவில் தீர்க்க 
ஒப்புக் கொண்டது.

           அங்கேயே கூடிய செயலகக்  கூட்டம் நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவெடுத்தது.

                       நமது அறைகூவலை ஏற்று வந்த அனைத்து கிளைச் செயலர்களுக்கும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், உறுதுணையாக நின்ற பொறுப்பு மாநிலச் செயலர் தோழர் சென்னகேசவன் அவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த நன்றி !  
   
     


Monday, November 2, 2015

        
                                  இன்றைய செயலகக் கூட்ட முடிவு !

                        போராட்ட அறிவிப்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தை !





    



நமது போராட்ட அறிவிப்பின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் அழைத்துள்ளது.


   நாளை காலை 10 மணிக்கு கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க 
நிர்வாகிகள் கோவை -43ல் உள்ள பொது மேலாளர் அலுவலகத்திற்கு 
தவறாது வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Saturday, October 31, 2015

                   
                    முக்கியமான செயலகக் கூட்டம் !

  3-11-2015 முதல் துவங்க உள்ள உண்ணாவிரத போராட்டத்தை 
சிறப்புடன்  நடத்த  திட்டமிட  கோவையில்  உள்ள   அனைத்து 
கிளைச் செயலர்கள்,  மாவட்ட  சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் 
செயலகக் கூட்டம் 2-11-15  திங்கட்கிழமை     மாலை 4 மணிக்கு 
நமது சங்க அலுவலகத்தில்  மாவட்டத் தலைவர் தோழர்  A.R. 
தலைமையில் நடைபெறும்.
       
முன்னாள் மாவட்டச் செயலர் தோழர் என்.ராமகிருஷ்ணனும் 
சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுகிறார்.

                        அனைவரும் தவறாது பங்கேற்கவும்.

                                                  L.சுப்பராயன் 
                                          மாவட்டச் செயலர்

Thursday, October 29, 2015

மத்திய சங்க கடிதங்கள் 

நமது மத்திய சங்கம் 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 
BSNL  நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது.



  • இந்த ஆண்டு வருமானம் 800 கோடி உய்ரந்துள்ளதால் BSNL   ஊழியர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும்.
  • BSNLலில் பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் அளிப்பதற்கான கொள்கை உடனடியாக வகுக்கப்பட வேண்டும்.
  • TTA  மற்றும் TELECOM MECHANIC  தோழர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். அதிகாரிகள் தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வருவது போல் ஊழியர்களுக்கு தாய்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டும்.
  • 78.2 சத  IDA  அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.
    • DELOITTEE குழு அமுலாக்கத்தின் போது உபரியாகும் ஊழியர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே விற்பனைப்பிரிவு போன்ற பகுதிகளில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
==========================================================

TM பயிற்சி முடித்து பதவிகள் இல்லாத காரணத்தால் இன்னும் 
TM பதவி உயர்வு பெறாத தோழர்களை பதவி உயர்வு,இறப்பு மற்றும் பணி ஓய்வு ஆகியவற்றால் காலியாகும் இடங்களில் பணியமர்த்தவும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் சென்று TM ஆகப்பணி புரிய அவர்களின் சம்மதங்களை கேட்கவும்  CORPORATE அலுவலகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 
======================================================

ஓய்வூதியம் பெறும் தோழர்கள் ஒவ்வொரு நவம்பர் மாதமும் தாங்கள் உயிரோடு இருப்பதாக உயிர்ச்சான்றிதழ் LIFE CERTIFICATE வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தோழர்கள் 
வேறு இடங்களில் வசித்து வந்தால் அந்தந்த இடங்களில் உள்ள வங்கிக்கிளைகளில் தங்களது LIFE CERTIFICATEஐ வழங்கி 
ஒப்புகை பெற்றுக்கொள்ளலாம் என நிதி அமைச்சகம் உத்திரவிட்டுள்ளது.
=======================================================

LEASED LINE மற்றும் CIRCUIT பழுதுகளை உடனுக்குடன் நீக்குமாறும் இதனால் ஏற்படும்  வருமான இழப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

=======================================================

   JTO இலாக்காத்தேர்வு மற்றும் நேரடித்தேர்வுகள்  OUTSIDERS விரைவில் நடத்தப்படும்.  தேர்வுகள் 
நடத்துவதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.
=======================================================

BSNL மருத்துவ திட்டத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.


===========================================================

நாலுகட்டப் பதவி  உயர்வில் உள்ள குளறுபடிகளை நீக்கக்கோரி BSNLEU சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக இலாக்காத் தேர்வு மூலம் அடைந்த பதவி உயர்வை நாலுகட்டப்பதவி உயர்வில் ஒன்றாக கருதக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போதாவது நாலுகட்டப்பதவி உயர்வில் உள்ள குளறுபடிகள் புரிந்ததே....

===========================================================

Wednesday, October 28, 2015

நமது மாவட்ட சங்கத்தின்  உண்ணாவிரத போராட்டத்தின் 
 முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று :

 
Issue of Employment Card, EPF contribution Card and 
ESI card to Contract Labours : 


உத்திரவு உள்ளது. ஆனால் அமலாக்கப்படவில்லை.
                        Click here  (for the Latest  BSNL Orders ) 

                                          
கடலூர் மாவட்டத்தில்  பணியாற்றும் ஒப்பந்த  ஊழியர்க்கு போனஸ் வழங்கப்பட்டுவிட்டது. 

              நமது மாவட்டத்திலும் வழங்க நிர்பந்திப்போம் ! 

1987ல் கோவை  SSAவின்  முதல் மாநாட்டில் தோழர் ஜெகன் அவர்களை
வரவேற்கும் 
அன்றைய கோட்டச் செயலர் தோழர்  L S. 

நமது தொழிற்சங்க ஆசான் தோழர் ஜெகன் காட்டிய 
அறவழியில் அடிமட்ட ஊழியர்களின் வாழ்வு ஏற்றம் பெற 
அயராது உழைப்போம் ! அநீதி களைவோம் !!
                       
                    போராடாமல் இல்லை புது வாழ்வு !  

Monday, October 26, 2015

                             
      நியாயத்தை  நிலை நாட்ட,  
   போராட்டப்  பாதையில் நாம்  !

மாவட்டத் தலைவர் தோழர்  A.ராபர்ட்ஸ்,
மாவட்டச்  செயலர்   தோழர்  L.சுப்பராயன், 
துணைத்    தலைவர்  தோழர்  S.கோட்டியப்பன்
ஆகியோர் இன்று  துணைப் பொது மேலாளர்
(நிர்வாகம்)  திரு P.ரத்தினசாமி அவர்களை 
சந்தித்து போராட்ட அறிவிக்கையை அளித்தனர்.

*   தீர்க்கப்படாத கோரிக்கைகளை     
     நிறைவேற்றக் கோரியும் , 

*  நிர்வாகம் மாற்றல் பிரச்னையில்
    பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்றும் , 

*  ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் உடனடியாக
     வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்  

              என்று வலியுறுத்தியும் 
                       3-11-2015 முதல் 
மாவட்டத் தலைவர் தோழர் A. ராபர்ட்ஸ்,
மாவட்டச் செயலர் தோழர்  L. சுப்பராயன் 

ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்வர் 
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  நியாயம் வெல்ல, அமைப்பை காத்திட,    
             அனைவரும் ஒத்துழைப்பீர் !! 


   

Monday, October 19, 2015


             Forum  சார்பான தர்ணா போராட்டம் தோழர்கள் செம்மல் அமுதம், கோட்டியப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கன்வீனர் 
தோழர் சி.ராஜேந்திரன், சம்மேளனச் செயல்ர்  தோழர் எஸ்.எஸ்.ஜி,
ராபர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து சங்க தலைவர்கள் உரையாற்றினர், 

   பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி.