Monday, August 8, 2016

ஆகஸ்ட் - 9
ஆவேசம் கொண்ட அகிம்சை



1942 - ஆகஸ்ட் 8...
அகிம்சை நாயகன் காந்தி ஆவேசம் கொண்ட நாள்...
செய்... அல்லது செத்து மடி... என ஆவேசம் கொண்டு 
மும்பையில் முழங்கினார்... அண்ணல் காந்தி...
QUIT...INDIA ... வெள்ளையனே... வெளியேறு.. என்று 
வீறு கொண்டு கிளம்பினார்...
வெள்ளையன் வெளியேறும் வரை 
ஒத்துழையாமை இயக்கம் என சபதம் செய்தார்...
உறக்கம் கலைந்தது... உசுப்பேறியது...

ஆகஸ்ட் 9 நாடு முழுவதும் தலைவர்கள் கைது...
மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கிப் போராடினர்...
வெள்ளையனே... வெளியேறு... 
கோரிக்கை முழங்கியது... கோடிக்கைகள் முழங்கின...
குண்டுகளும் முழங்கின...
டெல்லியில் ஒரே இடத்தில் 76 பேர் இரையானார்கள்...
சிறை முழுக்க மக்கள் வெள்ளம்....
குற்றங்கள்  பதியப்படவில்லை... 
விசாரணைகள்  நடத்தப்படவில்லை...
தண்டனைகள் மட்டும் தாராளமாக கொடுக்கப்பட்டன...
அகிம்சையும் புரட்சி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது...
இதுவே இந்திய வரலாற்றில் 
ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்பட்டது...

அன்று... ஆகஸ்ட் 9 ... 1942...
அகிம்சைக்கும் அளவு  உண்டு...
பொறுமைக்கும் எல்லை உண்டு..
என்பதை உணர்த்தி..
வெள்ளையனே... வெளியேறு என்று 
வீதியில்  நின்று  தேசம் உரக்க கூவிய தினம்...

இன்று ஆகஸ்ட் 9 - 2016...
வெள்ளையன்... துரத்தப்பட்டானா?
வெள்ளைத்தனம் துடைக்கப்பட்டதா? 
உங்கள் சிந்தனைக்குரியது...

சம்மேளனச் செயலர் தோழர் ஜெயராமன் அவர்களுக்கு கடலூரில் நடந்த பாராட்டு விழா காட்சிகள்










Friday, August 5, 2016


வேலூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின்  பட்டியலை 
மாநில நிர்வாகம் அங்கீகரித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ! 


                               Click here.

கோவை மாவட்ட தேசிய ஃபோரம்   கூட்டம் !

கோவை மாவட்ட National Forum அமைப்புக் கூட்டம் இன்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

SEWA-BSNL  கோவை மாவட்ட செயலர்     தோழர் எஸ்.கருணாகரன் தலைவராகவும், NFTE-BSNL
மாவட்டச் செயலர் தோழர் எல்.சுப்பராயன் கன்வீனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 12 தர்ணவை எழுச்சிமிக்கதாக நடத்த முடிவெடுக்கப்பட்டது.
  







Thursday, August 4, 2016


தமிழ் மாநில தேசிய போரம் கூட்டம் இன்று சென்னையில் 
நடைபெற்றது. ஆகஸ்ட் 12 தர்ணா போராட்டத்தை  ஊழியர்களைத் 
திரட்டி எழுச்சிமிகு  தர்ணா நடத்த முடிவெடுக்கப்பட்டது.









Monday, August 1, 2016

ஜூலை மாதம் கார்ப்பரேட் அலுவலகம் மாநிலத்திற்கு GPFநிதி   ஒதுக்கீடு   செய்யாததால் GPF  Withdrawal வழங்கப்படவில்லை.   

ஆகவே சென்ற மாதம்விண்ணப்பித்தவர்கள் தங்களது  ESS PORTAL-ல்   பழைய விண்ணப்பத்தை   CANCEL  செய்துவிட்டு இந்த (ஆகஸ்ட்) மாதம் 
புதியதாக 5-ந் தேதி அல்லது அதற்கு பின் தேதியில்  விண்ணப்பிக்க 
வேண்டும்.