Wednesday, June 21, 2017


                                                            GFF  செய்திகள் 

தமிழ் மாநில சங்கமும் சென்னை தொலைபேசி   மாநில சங்கமும்  தற்போது   GPF   வழங்கும்  பணியை  ஏற்றுள்ள DOT Cell அதிகாரிகளை சந்தித்து பிரச்னையை எடுத்து வருகின்றது.

இன்று அதன் தலைமை அதிகாரி Dr. R.நிரஞ்சனா அவர்களை  சந்தித்து பேசிய தோழர் C.K. மதிவாணன் அவர்கள் தற்போதுள்ள நிலையை 
தனது முகநூலில் விளக்கி உள்ளார்.

இதுவரை  6000 ஊழியர்களுக்கு GPF பட்டுவாடா செய்யும் பெரும் பணியை அந்த அலுவலகம் கையாண்டதில்லை. ஆகவே,  கடும் 
தாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மிகவும் வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார் Principal Controller of  Communication  திரு. நிரஞ்சனா அவர்கள்.

பட்டுவாடா துவங்கிவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் மீதமுள்ள 3500 ஊழியர்க்குமான பணியை  முடித்து விடுவோம்


அடுத்த மாதத்திலிருந்து காலதாமதம் இருக்காது. 

அதுமட்டுமல்ல .....இனிமேல் GPF  advance/withdrawal பணியை DOT Cell  ஏற்றுள்ளதால்  Funds இல்லை என்ற பிரச்னை எழாது என்றும் உறுதி கூறியுள்ளார்.  

Cordial meeting with PCCA on 21-06-17:

Following our Circle Union's written communication on 15-06-2017 today  Comrades CKM and 
Elangovan had a very cordial meeting with Dr. R. Niranjana , the Principal Controller of 
Communications ( PCCA) at his office in R.K. Nagar . He was very much apologetic for the delay 
in dispersement of GPF advance to BSNL employees/ executives. He expressed his difficulties 
in coping up with the sudden workload of dispersing GPF advance for more than 6000 staff of 
both Tamilnadu and Chennai Telephones Circles. 

Being the first month of new arrangement this month he agreed there is a big delay in paying 
the GPF advance. However he assured us there wouldn't be any delay in the dispersement 
from next month. He also promised that all the pending applications numbering 3500 and 
odd will be dispersed in two weeks time positively. But he informed us that since DOT has 
taken over the job of Dispersement of GOF advance to BSNL employees/ executives 
no question of fund crunch will arise hereafter as it has happened when BSNL was doing 
this job itself. We thanked him for his efforts and assurances.

Tuesday, June 20, 2017

மகிழ்ச்சியுடன் நடந்த குறிச்சி பகுதி கிளை மாநாட்டில் 
  கிளைத் தலைவராக தோழர் ஆர்.நடராஜன் அவர்களும் 
கிளைச் செயலராக  தோழர் வீ. சுப்ரமணிய சப்தகிரி அவர்களும்   
கிளைப் பொருளராக தோழர் கே.திருமூர்த்தி அவர்களும் மற்ற 
நிர்வாகிகளும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள். 

Image may contain: 3 people, people smiling

                                  Image may contain: 2 people, people standing


Image may contain: 2 people

Image may contain: 3 people

Image may contain: 3 people, people sitting and indoor


Image may contain: 1 person

Image may contain: 1 person, sitting and indoor



Image may contain: 4 people, people smiling



இரங்கல்


அன்பு
அடக்கம்
அறிவு
ஆற்றல்
இவற்றின்
உருவமாகத் திகழ்ந்த்
NFTE இயக்கத்தின்
முன்னணித் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த
கோவை மாவட்ட முன்னாள் லைன்-ஸ்டாப் சங்க கோட்டச் செயலர்
தோழர் வாதிராஜன்
அவர்களின் மறைவுக்கும்
நமது இரங்கலைக் காணிக்கையாக்குகிறோம்.


ஊழியர்களை / அதிகாரிகளை முட்டாளாக்க நினைக்கும் அபிமன்யூ !

அனைத்து சங்கங்கள்/ அசோசியேஷன்கள் என்று கூறிக் கொண்டு 
ஊதிய மாற்ற கோரிக்கை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த அறிவிப்பை சில சங்கங்கள் வெளியிட்டுள்ளன.
NFTE BSNL, AIBSNLEA, SEWA BSNL, TEPU OTA BSNL உள்ளிட்ட பல 
சங்கங்களின் பொதுச் செயலர்கள் அந்த அறிவிப்பில் கையொப்பம் 
இடவில்லை. ஆகவே அது எப்படி அனைத்து சங்க அறிவிப்பு ஆகும் ?

அவரது நோக்கம் ஊதிய மாற்ற கோரிக்கையை வெல்வது அல்ல. 
அதற்கு மாறாக நான் தான் போராட்ட நடத்தினேன் என்ற
விளம்பரமே !
தோழர் அபிமன்யூ அவசர அவசமாகக் கூட்டிய அனைத்து சங்க                         கூட்டத்திற்கு தலைமை ஏற்ற AIBSNLEA சங்கத்தின் பொதுச்
செயலர் தோழர் பிரகலாத ராய் அவர்கள்கூட அந்த வேலைநிறுத்த                   அறிவிப்பில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
கூட்டத்தின் தலைவரைக்கூட வேலைநிறுத்த அறிவிப்பில் கையொப்பமிட             வைக்க முடியாத அபிமன்யூவால் எப்படி அனைத்து சங்க ஒற்றுமையை                         கட்ட முடியும்?
அனைத்து சங்கத்திற்கும் கன்வீனராக தனக்குத் தானே முடிசூட்டிக்                                    கொண்ட அபிமன்யூ, அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் BSNLEU பொதுச்                  செயலர் என்று கையொப்பமிட்டது ஏன் ? தனது சங்கத்திற்கு பேட்டி                    தரவேண்டும் என்று கூறியது ஏன் ? கனரக தொழில் துறை அமைச்சருக்கு                 எழுதிய கடிதத்தில் கூட தனியாருக்கு ஆதரவாக முந்தைய அரசு செயல்பட்டதால்தான் நமது நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கடிக்கபட்டது               என்பதை விளக்கவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால்                                            2004 முதல் 2013 வரை BSNLEUதான் ஒரே அங்கீகாரச் சங்கமாக                                   இருந்தது.
மற்ற அனைத்து சங்கங்களும் ஆதரவளித்த போதும் அச்சங்கம் தனது                  கடமையை ஆற்றவில்லை.
தனக்கு தேவை என்றால் ஒற்றுமை என்பதும் தேவை முடிந்தவுடன்                                கழற்றி விடுவதும் அவர்களது வாடிக்கை.
உதாரணத்திற்கு சில :
2004ல் FNTO சங்கத்தை கவர்ந்து இழுத்தவர்கள் இரண்டு தேர்தலில்                              வென்ற பிறகு கழற்றிவிட்டார்கள். அதுமட்டுமல்ல அவர்களது                       சின்னத்தையும் அபகரித்தனர்.
SEWA BSNL சங்கத்தின் ஆதரவால் அங்கீகாரம் பெற்றவர்கள்,                                  இன்றுவரை அச்சங்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
இது போன்ற செயல்பாடுகளால்தான் அனைத்து சங்கங்களும்                         அபிமன்யூவை கன்வீனராக ஏற்க மறுக்கின்றனர். ஓற்றுமை                        உருவாகவில்லை. ஆகவே தனது மேலாண்மைப் போக்கை                                       கைவிட்டு தான்தான் ஒரே கனவீனர் என்ற நிலைபாட்டிலிருந்து                                       விலகி அனைத்து சங்கங்களுக்கும் உரிய மரியாதை அளித்து
மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும்.
ஊதிய மாற்றம் என்ற கடுமையான கோரிக்கையை வெல்ல                                                   ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் போதாது.           
ஒரு உணர்வுபூர்வமாக ஒன்றுபட்ட, காலவரையற்ற வேலைநிறுத்த                போராட்டத்தின் 
மூலமே ஊதிய மாற்றம் சாத்தியம்.
அந்த திசைவழியில் செயலாற்றுவோம்.!

Sunday, June 18, 2017



இன்று AIBSNLEA சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் 
பங்கேற்று NFTE. மாவட்ட சங்கத்தின் சார்பாக 
வாழ்த்தி உரையாற்றினேன்.

Image may contain: 1 person, sitting and text
Image may contain: indoor

Image may contain: 2 people
Image may contain: 1 person, indoor
Image may contain: 1 person


Thursday, June 15, 2017

ஊதிய மாற்றத்திற்கான  அடுத்த கட்டம் !    
2017 ஜூலை 3,4 தேதிகளில் அடையாள   உண்ணாவிரதம் ! தேசிய போரம்  முடிவு ! 

டெல்லியில் 14-6-17 அன்று  நடந்த ஆர்பாட்டத்திற்கு  பிறகு கூடிய தேசிய போரம் தலைமையின் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் பற்றி ஆழமான விவாதம் நடைபெற்றது. 
14-6-17 ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. 

கூட்டத்திற்கு BTU(BMS) சங்கத் தலைவர் தோழர் R.C. பாண்டே தலைமை ஏற்றார்.பாரதீய அதிகாரிகள் சங்கமும் நமது தேசிய போரத்தில் இணைந்தது. ஜூலை 3 மற்றும் நான்கு ஆகிய தேதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்றும் அன்று தீர்மானங்கள்  ஊதிய மாற்றத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி தீர்மானங்கள்   நிறைவேற்றி பிரதமர்,  அமைச்சர் ஆகியோருக்கு அனுப்புவது, தலமட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோருவது,  மற்ற மத்திய சங்கங்களின் ஆதரவை கோருவது என்றும் , தேவைப்பட்டால்    வேலைநிறுத்த போராட்டம் பற்றி பிறகு பரிசீலிப்பது என்றும்  ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.                          

                     CHQ NEWS 

15-06-2017 : National Forum Meeting:- 


                     Click Here

CSC CTO தோழியர் திலகம் அவர்களின் மகன் திருமண வரவேற்பில் 
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்

Image may contain: 3 people, people smiling, people standing