
Sunday, April 30, 2017
Thursday, April 27, 2017
Tuesday, April 25, 2017
நமக்கு நாமே நல நிதித்திட்டம்
BSNL தலைமையகம் தனது 19/04/2017 தேதியிட்டக் கடிதத்தில்...
பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக BENEVOLENT FUND
நலநிதி ஒன்றைத் துவக்க இருப்பதாகவும்...
அந்த நலநிதி முழுக்க முழுக்க ஊழியர்களின்
பங்களிப்பில் உருவாக்கப்படும் என்றும்...
இது சம்பந்தமாக அதிகாரிகளைக்கொண்ட
குழு ஒன்று பரிசீலிக்கும் என்றும்...
நலநிதியை எவ்வாறு கையாள்வது....
மாதந்தோறும் ஊழியர்களிடம்
எவ்வளவு தொகை பிடித்தம் செய்வது…
நலநிதியாக எவ்வளவு தொகை வழங்குவது...
என்ற தங்களது கருத்துக்களை தொழிற்சங்கங்கள்
01/05/2017க்குள் அதிகாரிகள் குழுத்தலைவருக்கு
தெரியப்படுத்த வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் கூறியுள்ளது.
முதலில் இப்படியொரு குழு அமைக்கப்பட்டதே யாருக்கும் தெரியாது..
இது போன்ற பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர் தரப்பு அடங்கிய இருதரப்புக்குழு அமைப்பதுதான் சரியான முறையாகும்…
ஊழியர் தரப்பின் கருத்துக்களை மட்டுமே கேட்டு முடிவெடுப்பது சரியான ஜனநாயக நடைமுறையாகப் படவில்லை...
இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி கொடுப்பதைக் கைவிட்டு விட்டு ஏதேனும் நலநிதியைக் கொடுத்து அவர்களைச் சரிசெய்து விடலாம் என்று நிர்வாகம் நினப்பதாக ஊழியர்களுக்கு தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது....
இதனைப் போக்குவது நிர்வாகத்தின் கடமை…
நலநிதி சம்பந்தமாக நமது கருத்துக்கள் இவைதான்…
நலநிதி கருணை அடிப்படைப்பணிக்கு மாற்றாக இருக்க முடியாது….
தற்போது ஏறத்தாழ இரண்டு லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
மாதம் ரூ.100/- பங்களிப்பு செய்தால்
மாதம் இரண்டு கோடி ரூபாயும்…
ஆண்டிற்கு 24 கோடி ரூபாயும் நலநிதியாகத் திரட்ட முடியும்.
தற்போது பணிக்கொடை அளவு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியருக்கு
இருபது லட்சம் நலநிதியாக வழங்க வேண்டும்…
கருணை அடிப்படையில் பணி பெற்றவர்களுக்கு
குறிப்பிட்ட நலநிதித்தொகையும்...
கருணை அடிப்படையில் பணி கிடைக்காதவர்களுக்கு
கூடுதல் தொகையும் வழங்கப்பட வேண்டும்..
இறந்து போன ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட வேண்டிய
வங்கிக்கடன், கூட்டுறவு சங்கக்கடன் மற்றும் இதரக்கடன்கள் கணக்கில் கொள்ளப்படவேண்டும்…
தற்போது ஆயுள் காப்பீடாக LICயில் ஊழியர்களுக்கு மாதம் ரூ.105/- பிடித்தம் செய்யப்பட்டு இறந்தால் ஒருலட்சம் வழங்கப்படுகிறது.
இது மிகக்குறைவான தொகையாகும்.
எனவே ஆயுள் காப்பீட்டு அளவுத்தொகை
5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.
ஊழியர் தரப்பையும் உள்ளடக்கி குழு அமைத்து...
உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால்...
நமக்கு நாமே நலநிதித்திட்டம் இறந்து போகும் ஊழியர் குடும்பங்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்.
சாக்காடு கண்ட ஊழியரின் வாரிசுகளுக்கு...
உண்மையான நோக்கோடு.... உதவி புரியும் நோக்கோடு...
இந்தத்திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும்...
Monday, April 24, 2017
மத்திய சங்க செய்திகள்
போன்மெக்கானிக் இலாக்காத் தேர்வு அறிவிப்பில் உள்ள
குளறுபடிகளை நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு
சுட்டிக்காட்டி.. உரிய திருத்தம் வெளியிட கேட்டுக்
கொண்டுள்ளது,
---------------------------------------------------------------------------------
விரைவில் நடைபெறவுள்ள விளையாட்டுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதற்காக நமது மத்திய சங்கம் பல்வேறு
கோரிக்கைகளை நிர்வாகத்திடம் அளித்துள்ளது. விளையாட்டு
வீரர்களுக்கு இரயிலில் AC II வகுப்பில் பயணம் செய்வது…
தினப்படியை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை
நமது சங்கம் விவாதப்பொருளாக அளித்துள்ளது.
---------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
SR.ACCOUNTANT கேடர்களை அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்த
வேண்டும் என்ற CAT தீர்ப்பினை எதிர்த்து BSNL நிர்வாகம்
மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. அவ்வாறு
மேல்முறையீடு செய்வது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி
என்றும் அவர்களை அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்துவதுதான்
சரியானது என்றும் நமது சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை
விடுத்துள்ளது.
அதிகாரிகள் கூட்டமைப்பு போராட்டம் !
அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு
இன்று 25/04/2017 முதல்
நாடு தழுவிய போராட்டத்திற்கு
அறைகூவல் விடுத்துள்ளது.
நாடு தழுவிய போராட்டத்திற்கு
அறைகூவல் விடுத்துள்ளது.
25/04/2017 முதல்
3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்…
3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்…
28/04/2017 அன்று ஒட்டுமொத்த விடுப்பு…
மே 1 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம்
மற்றும் விதிப்படி வேலை
என்ற போராட்டத் திட்டத்தை
அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அடிப்படைக்கேடர்களான
JTO/JAO சம்பள விகித மாற்றம்
முக்கிய கோரிக்கையாகும்.
நமது வாழ்த்துக்களையும்…
ஆதரவையும் உரித்தாக்குகின்றோம்.
JTO/JAO சம்பள விகித மாற்றம்
முக்கிய கோரிக்கையாகும்.
நமது வாழ்த்துக்களையும்…
ஆதரவையும் உரித்தாக்குகின்றோம்.
Subscribe to:
Posts (Atom)




