Wednesday, January 31, 2018

இரண்டாம் நாள் சத்தியாகிரக போராட்டம் Image may contain: 4 people, people standing and outdoor

Image may contain: 7 people, people sitting

AITUC மாநிலச் செயலர் தோழர் ஆறுமுகம் Ex-MLA   பேசுகிறார்
Image may contain: 2 people, people sitting, table and outdoor

Image may contain: 2 people, outdoor

Image may contain: 3 people, people sitting, table and outdoor

Image may contain: one or more people, people sitting, table and outdoor

Friday, January 26, 2018

  சிறக்கட்டும் ! தோழர் கோட்டியப்பனின் பணி ஓய்வுக் காலம் !
                  அறுபதிலும் இளமையாக தோற்றமளிக்கும் 
 வீரமிகு நெல்லை கோவையின்  மாண்பில்  சங்கமித்தது !
              

                                             
அன்றும் இன்றும் 
 

        எனது சமகால  இயக்கப் போராளி.  எனது அனைத்து தொழிற்சங்க  பணிகளிலும்  உறுதுணையாக இருந்தவர். 

1983 லிருந்து கோவை   மாவட்டச்  சங்கத்தின் முக்கியமான தூண்களில் ஒருவராக இருப்பவர்.

1980களில்   அவர்   பணியாற்றிய பொது மேலாளர் அலுவலகத்தில் எதிர் அணி ஆகப்பெரும்பான்மை. 
இவரும் மூத்த தோழருமான மாசாணன் மட்டுமே 
நமது அணி. பெரும் எதிர்ப்புகளை அஞ்சாநெஞ்சத்தோடு  எதிர்கொண்டு சங்கத்தை   வலுவாக  கட்டியவர்.   பொது மேலாளர்  அலுவலகத்திற்கு யார் வந்தாலும் முதலில் சந்திப்பது  தோழர்  கோட்டியப்பனாகத்தான் இருக்கும்.
எந்த பிரச்னையையும் தீர்க்கும் வல்லமை அவரிடம்
 இருந்தது. 

வாழ்க்கைத்துணையாக அஞ்சல் துறையில் பணியாற்றும் தோழியரை ஏற்று மனநிறைவான வாழ்க்கை வாழ்பவர்.

கர்ண பரம்பரை. கலை இலக்கிய பெருமன்றம், இந்தோ- சோவியத் நட்புறவுக் கழகம், இஸ்கப் என்று அனைத்திலும் தீவிர செயல்பாட்டாளர்.

தனது சொந்த செலவில் ருஷ்யா சென்று யுகப்புரட்சியின் நாயகர் லெனின் அவர்களின் பூத உடலை அருகில் சென்று  தொட்டுணர்ந்த அரிய வாய்ப்பை கிடைக்கப் பெற்றவர்.

அவரது பணி ஒய்வுக் காலம் அர்த்தமுள்ளதாய் அமையும் 
என்பதில் சந்தேகமில்லை.

 பணி ஓய்வுக்கு பி,ன்  நமது நிறுவனத்தில் மிகுந்த சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களின் 
நலன் காக்க செயலாற்ற உள்ளார்.

அவரது பணி நிறைவுக் காலம் சிறப்புடன் அமைய மாவட்டச் சங்கத்தின் தோழமைமிகு  வாழ்த்துக்கள்.

      

Friday, January 19, 2018

No automatic alt text available.
             மேட்டுப்பாளையம் கிளை மாநாடு !

கிளைத் தலைவர் தோழர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர் கே.நடராஜன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

கிளை மாநாட்டில் முன்வைக்கபட்ட செயல்பாட்டறிக்கையில்   மாவட்டச் செயலரைப் பற்றி பல அவதூறான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

அவற்றை மறுதலித்தும் மாவட்டச் செயலரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட அனைத்து பிரச்னைகளும் தீர்ப்பட்டுள்ளன என்றும் விளக்கினேன்.


மேலும் கோவை மாவட்டத்தில் NFTCL சங்கத்தை துவக்கியது தவறான செயல் என்றும் கண்டிக்கத்தது என்று எழுதப்பட்டு இருந்தது. 


NFTCL சங்கத்தின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் விருப்பப்படியே NFTCL  மாவட்டச் சங்கம் துவக்கப்பட்டது என்றும் அதற்கும் மேட்டுப்பாளையம்     கிளை மாநாட்டுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும் 
தெளிவாக விளக்கினேன். 

புதியதாக தேர்ந்தெடுக்கபட்ட கிளைச் சங்க நிர்வாகிகளுக்கு 
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
கிளைத் தலைவர் : தோழர் செல்வகுமார்
கிளைச் செயலர்  : தோழர் ரவி
கிளைப் பொருளர் : தோழர் லட்சுமணன்
புதியநிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

 கிளைச் சங்கத்தின் செயல்பாட்டறிக்கை தமிழ் மாநில வாட்ஸப்லில் உடனடியாக பதிவேற்றப்பட்டது  முறையற்ற 
செயலாகும்.
Image may contain: 2 people, people sitting

Image may contain: 8 people, indoor