Friday, September 30, 2016

Image result for BSNL

              

BSNL completes 16 years excellent service to the people                 Congratulations to all!                              


       அக்டோபர்   ஒன்றாகிய இன்று ,   BSNL  17ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.


நமது நிறுவனம் ஓரிரு ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்காது என்று ஆருடம் கூறியவர்தான் 

BSNL completes 16 years excellent service to the people                  Congratulations to all!                              

என்று பெருமையாக தனது வலைதளத்தில் வாழ்த்து கூறுகிறார். 
அவர் வேறு யாருமல்ல....... தோழர் நம்பூதிரி.

இன்று strategic sale  எனும்  ஆபத்தை 
எதிர் நோக்கிய சூழ்நிலையிலும்,  DOTல் 
பணியாற்றி வந்த   90 சத மூத்த  ஊழியர்களின் வாழ்க்கைக்கு  பாதுகாப்பாக திகழும் பென்சனை உறுதி செய்த  அந்த மகத்தான தலைவனை நினைவு கூர்வதும், மக்கள் சேவைக்காக 
தன்னை அர்பணித்துக் கொள்ளும் நிறுவனத்தை பாதுகாக்கவும்,  சிறந்த  சேவை வழங்கவும் 
உறுதி ஏற்போம் ! 

Thursday, September 29, 2016


    1.10.2016 முதல் உயர்ந்துள்ள IDA   புள்ளி 
                           5.5 சதம் 
வைப்பு நிதி பட்டுவாடா 

செப்டம்பர் மாத வைப்பு நிதி  விரைவில் பட்டுவாடா 
செய்யப்படும்  என மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.  

எனவே  வைப்புநிதி விண்ணப்பித்தவர்கள் அதனை ரத்து செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அக்டோபர் மாதம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 02/10/2016க்கு மேல் 
விண்ணப்பிக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்து  
அக்டோபர் மாத பட்டுவாடா  செய்யப்படும்.
இருந்தால் இருந்தோம்... எழுந்தால்..

டெல்லியில் நடைபெற்ற சிறந்த ஊழியருக்கான
விருது வழங்கும் விழாவில் பேசிய நமது இலாக்கா அமைச்சர் 
உடனடியாக BSNL நிறுவனம்...  
ஒரு லட்சம் கிராமப்பஞ்சாயத்துக்களை OFC மூலம் இணைப்பது...
2.5 லட்சம் கிராமங்களை  அகன்ற அலைவரிசை இணைப்புக்களின் 
மூலம் இணைப்பது... என்ற பிரதமரின் விருப்பத்தை உடனடியாக 
நிறைவேற்ற வேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளார். 

மேலும் தொலைத்தொடர்பு சந்தையில் தனது பங்கை... 
BSNL நிறுவனம்  தற்போதைய 10.4 சதத்திலிருந்து 
15 சதமாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

அனைத்துப் பழுதுகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். 
இதில் ஏற்படும் தாமதங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது 
என்றும் உறுதியாகக் கூறியுள்ளார். 

BSNL அதிகாரிகளும் ஊழியர்களும் 
திறம்பட பணி செய்ய வேண்டும்.. 
அவ்வாறு பணி செய்ய இயலாதவர்கள் 
விருப்ப ஓய்வில் சென்று விடலாம் 
என்றும் அழுத்தமுடன் கூறியுள்ளார்.

இருந்தால் இருங்கள் ... இல்லாவிட்டால் ஓடுங்கள்  
என்று ஊழியர்களைப் பார்த்து  அமைச்சர் கூறுகிறார்.  
அமைச்சர் என்ற முறையில் அவருடைய பாணி சரிதான். 
ஆனால் இதே பாணியில்...
மக்களும் மந்திரிகளைப் பார்த்து கூறும் காலம் வர வேண்டும். 
இதுவே நமது விருப்பம்.

இருந்தால் இருந்தேன்... எழுந்தால் பெருங்காளமேகம் பிள்ளாய்... 
என்று  தன்னை ஏளனம் செய்தவனைப் பார்த்து 
கவிக்காளமேகப் புலவன் பாடினான்...
தொழிலாளி வர்க்கமும் அப்படித்தான்...
இருந்தால் இருக்கும்... எழுந்தால்...
கோடிக்கால் பூதமடா... கோபத்தின் ரூபமடா...

                                                நன்றி : காரைக்குடி வலைதளம்



Wednesday, September 28, 2016



வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை !

சொஸைட்டி தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி,
சென்னை வெள்ளானூர் பகுதியில் முதற்கட்டமாக
10 ஏக்கர் நிலத்தில் அடுக்குமனைகள் கட்டவும்
அதற்காக டெண்டர் விடவும் முடிவு எடுக்கப்பட்டது.
உறுப்பினர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறவும்
இன்று நடந்த சிறப்பு RGB கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில்
அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மாதிரி அடுக்குமனை - Model Flat






Either perform or  take VRS’ 

     – Manoj Sinha to BSNL and its employees


Manoj Sinha, Communications Minister yesterday told the 
BSNL Management and employees to perform well. 

He also spoke about ‘performance related pay’ and VRS for 
inefficient employees’.

BSNL  ஊழியர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் 
உரையாற்றிய நமது துறையின் அமைச்சர் திரு மனோஜ் 
சின்ஹா, 

 " பணியாற்றுங்கள், இல்லை என்றால் விருப்ப ஓய்வில் 
செல்லுங்கள் " என்று மிரட்டும் தொனியில் உரையாற்றி
உள்ளார்.  


Tuesday, September 27, 2016

                       
                                                  நன்றி ! நன்றி !!

விண்ணிலே பறந்து வந்து ஆறுதல் கூறிய   அன்புத் தலைவன் 
மதிவாணன், தோழர் மாலி,   தோழர் சேது, சம்மேளனச் செயலர்கள்  
தோழர்கள் ஜெயராமன், கோபாலகிருஷ்ணன்  தோழமைமிகு   
மாநிலச் செயலர் தோழர்  நடராஜன், சென்னை மாநில துணைச் 
செயலர் தோழர் இளங்கோவன்  உள்ளிட்ட அனைத்து 
தலைவர்களுக்கும்,

ஆயிரம் பணிகளுக்கு இடையேயும் வீடு தேடி வந்து ஆறுதல் 
கூறிய PGM  திரு சிவராஜ் அவர்களுக்கும், பணி ஓய்வுபெற்ற  
DGM திரு.ரத்தினசாமி அவர்களுக்கும்,   DGM திருமதி எம்.கே கீதா அவர்களுக்கும், டிஜிஎம் (IMPCS) , திரு ஸ்ரீகுமார் அவர்களுக்கும் 
 AGM  திரு. முத்துகுமார் அவர்களுக்கும் DE (Extl) திரு மணியன் அவர்களுக்கும் மற்றும் 

அனைத்து தோழர் தோழியர்களுக்கும்  நன்றி  ! நன்றி !! 

Thursday, September 22, 2016


                                    CGM அவர்களுடன் சந்திப்பு !
 கோவை வந்துள்ள தமிழ் மாநில முதன்மைப் பொது மேலாளர்
திருமதி பூங்குழலி அவர்களை இன்று நமது மாவட்ட சங்கத்தின்
சார்பாக தோழர்கள்   சுப்பராயன்,  ராபர்ட்ஸ்,  செம்மல் அமுதம், 
நரேஷ்குமார்,   கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். 

புதிய இணைப்புகள் வழங்க டெண்டர் மூலம் காண்ட்ராக்ட் 
விடுவது தவறு ! போதிய உபகரணங்களை கொடுத்தால் 
ஊழியர்களே இனைப்புகளை வழங்குவர் என்று உறுதி 
அளித்தோம்.
                      கரையான்  புற்றெடுக்க,
  கருநாகம்  குடிகொண்டதைப் போல. 

வருங்காலத்தில் இந்த முடிவு அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் 
பாதகமாக முடியுமென்று கூறி நமது எதிர்ப்பை தெரிவித்தோம்.

கார்ப்பரேட் அலுவலக உத்திரவின் அடிப்படையிலேயே, மாநில
நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 பல மாநிலங்களில் ஏற்கனவே இந்த நடைமுறை அமலாகிவிட்டது.      

தமிழகத்தில் தாமதமாகவே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்
படுகிறது. 

ஆகவே மேல் மட்டத்தில் இப்பிரச்னையை எடுக்குமாறு கூறினார்.

Wednesday, September 21, 2016

                             
 DGM (Admn & HR ) அவர்களுடன் சந்திப்பு !

                   19-9-2016 அன்று TNF (Technically Not Feasible) பகுதிகளில் புதிய 
இணைப்புகளை  வழங்க டெண்டர் மூலம்  ஒப்பந்த அடிப்படையில்   தனியார் நிறுவனத்திற்கு  பொறுப்பு வழங்க வேண்டும் என்ற  BSNL   கார்ப்பரேட்  அலுவலக உத்திரவை அமலாக்கும் வகையில்  வெளியிடப்பட்ட  e-tendering  விளம்பரம் குறித்து விளக்குவதற்கான 
கூட்டத்திற்கு  DGM (Admn & HR ) அழைப்பு விடுத்தார். 

நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் சுப்பராயன், ராபர்ட்ஸ், செம்மல் அமுதம்,  நரேஷ்குமார், கோட்டியப்பன்,  கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.சேவா  சங்கத்தின் சார்பாக தோழர்   சண்முகம்  கலந்து கொண்டார்.

நிர்வாகத்தின் சார்பாக AGM ( Plg I ), AGM (Admn) AGM (MM)   ஆகியோர் பங்கேற்றனர்.  

கேபிள் இல்லாததால், பல  பகுதிகளில் நமது நிறுவனத்தால்   புதிய  இணைப்புகள் வழங்க முடியவில்லை. 

ஆகவே, Build Operate & Transfer  (BOT) என்பது போல ,  அந்த  பகுதிகளில் புதிய இணைப்பு தரும்  பணியை revenue sharing அடிப்படையில்     காண்ட்ராக்ட்க்கு  விடவேண்டும் என்று  கார்ப்பரேட் அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. 

 கேரளா, குஜராத் உள்ளிட்ட  சில  மாநிலங்களில் இந்த நடைமுறை   ஏற்கனவே அமலில் உள்ளது. 

தமிழகத்தில்,  கோவை,மதுரை, திருச்சி உள்ளிட்ட  8  SSAக்களில்                   இதை உடனடியாக அமலாக்க கார்ப்பரேட்  அலுவலகம் உத்திரவிட்டதின் அடிப்படையில் e-tendering மூலம் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் சாராம்சம் :

1)  புதிய இணைப்புகள் மூலம்  வரும் வருமானத்தில்  65% BSNLக்கு, 
 35 % அந்த ஒப்பந்ததாரர்  கம்பெனிக்கு.

2)  குறைந்தபட்சம்   7 ஆண்டுகள் தொடர்ந்து இணைப்புகள் வழங்க வேண்டும் உள்ளிட்டவை  ஆகும்.

நாம் நமது மேல்மட்டங்களுடன் கலந்து  பேசி நமது கருத்தை   தெரிவிப்பதாக கூறியுள்ளோம்.     
     
                        

Monday, September 19, 2016





நன்றியுரை :
அருண்குமார்-பூர்ணிமா திருமண வரவேற்பு விழாவிற்கு
வருகை தந்த அனைவருக்கும் நன்றி பாராட்ட கடமைப் பட்டுள்ளோம்.
இந்த திருமணம் இவ்வளவு சிறப்பாகவும் மாறுபட்டும்
நடப்பதற்கு 94 வயது நிரம்பிய மூத்த தோழர் எல்.கோபாலகிருஷ்ணன் அவர்களே காரணம்.
அவரது அளப்பரிய தொண்டால், சீரிய செயல்பாட்டால்
அவரது வாரிசுகளான மகன் சந்திரசேகர், மருமகள்
பொற்கொடி, பேரன் ராகுல்,பேத்தி கீர்த்தி ஆகியோர்
ஈர்க்கப்பட்டு, முற்போக்கு எண்ணத்தோடு செயல்படுகின்றனர்.
அந்த மூத்த தோழர் எல்.ஜீ அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல திருமண வரவேற்புகளில் பங்கேற்று இருப்பீர்கள்.
ஆனால் இது புதுமையானதாக இருந்திருக்கும், மாற்றம்
உள்ளதாக அமைந்துள்ளது.
வழக்கமான திருமணங்களில் மனமகன் வீட்டார் தாங்கள்
சற்று மேலே என்று நினைத்து செயல்படுவர். ஆனால்
இந்த திருமணத்தில் மணமகன் வீட்டார் எந்த செருக்குமின்றி
நடந்து கொண்டனர். மணமகள் வீட்டாரும் பணிந்து நிற்காமல்
நடந்துகொண்டோம்,எல்லா விஷயங்களிலும்.
இதற்கு மூல காரணம் நமது ஆசான் காரல் மார்க்ஸ்
அவர்கள்தான்.
மார்க்ஸியத்தை உள்வாங்கியவர்களின் இல்லத்
திருமணங்கள் இவ்வாறாகத்தான் அமைந்திருக்கும்.
இங்கே சாதிக்கோ, மதத்திற்கோ, இனத்திற்கோ
இடமில்லை. ஆண், பெண் வேறுபாடின்றி சரிசமமாக
கருதி திருமணம் நடைபெறும்
இங்கேதான் மணமகளின் தந்தைக்கு, மணமகன் வீட்டார்
நினைவுப்பரிசு வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்த
புதுமையையும் கண்டோம்.அது தோழர் சந்திரசேகர் அவர்களின்
பெரிய மனத்திற்கு உதாரணம்.
எனக்கு நிறைய அண்ணிகள் உண்டு. அனைவரும் என்னை சகோதரனாக கருதி பழகுகிறார்கள். கோவையில் 15-9-16 அன்று
திருமணம் முடிந்தவுடன் எனது அண்ணி சாரதா அவர்கள்,
" மணி, ( எனது செல்லப்பெயர் ) உனக்கு இரண்டு மணி
மணியான மாப்பிப்ளைகள் கிடைத்து உள்ளனர்,
மணி மஹாலில் நடந்த திருமணத்திற்கு பிறகு"
என்று கவித்துவமாக வாழ்த்து தெரிவித்தார்.
எனது அலுவலகத்திலும் அதே போல எனது தோழியர்கள்,
சுப்பராயன், ரிடையர்மெண்ட் ஆவதற்குள் இரண்டு
மகள்களுக்கும் திருமணம் செய்து முடித்து வீட்டீர்கள்,
இனி உங்களது குடும்ப பாரம் குறைந்தது என்று கூறி
வாழ்த்தினர்.
எனது முதல் மருமகன் ரகுராமன், அந்த திருமணம், காதல் திருமணம், கலப்புத்திருமணம், சாதி மறுப்பு திருமணம்.
இரண்டாவது மகளின் திருமணம் தோழமை
திருமணமாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த திருமணத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின்
அனைத்து முன்னணி தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
தோழர் கே,ஆர்.சங்கரன் அவர்களின் தொழிற்சங்க
அலுவலகம் நான் பணியாற்றும் டெலிபோன் எக்சேஞ்ச்க்கு
பின் உள்ளது. பல ஆசிரியர், அரசு ஊழியர்களின் போராட்டங்களில்
பங்கேற்று, ஆதரவு கோஷம் எழுப்பி உள்ளேன். ஆவர்
பங்கேற்று வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
அதேபோல தோழியர் தமிழ்ச்செல்வி அவர்களின்
பங்கேற்பும் பாராட்டுதலுக்கு உரியது.
தோழியர் பாலபாரதி அவர்களின் வருகையும் பங்கேற்பும்
மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.அவர் மார்க்சிஸ்ட் கட்சித்
தலைவர் மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர்க்கும்
சொந்தமானவர். மகளிர் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாராடுதலுக்குரிய தோழியர். எம்.எல்.ஏ ஆன பின்னும்
எளிமையான அவரது செயல்பாடு போற்றுதலுக்குரியது.
மேலும் இவ்விழாவிற்கு தலைமையேற்ற தோழர் லாசர்,
வரவேற்புரை நல்கிய தோழர் ஜோதிராம், மற்றும் வாழ்த்துரை
வழங்கிய தோழர்கள் சி.ராமகிருஷ்ணன் , மூட்டா ஆர்.கிருஷ்னமூர்த்தி, கே.ஏ.தேவராஜன், சி.செல்வின் சத்தியராஜ், வங்கி அதிகாரிகள் சங்கத்தலைவர் தோழர் சி.பி.சந்திரசேகர்,
எனது சங்கத்தின் தலைவர்கள், லட்சம், ரமேஷ், பூபதி, பரிமளம்
உள்ளிட்ட அனைத்து தோழர் தோழியர்க்கும் குடும்பத்தார்க்கும்
நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. .


0:00





18-9-16 அன்று மதுரையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 
  தோழியர் பாலபாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று வாழ்த்தினார். 

18-9-16 அன்று மதுரையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 
   நமது தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தினர்







2014-15 ஆண்டிற்கான போனஸ் ரூ.3000/- வழங்க 
ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான போனஸ் பற்றி விரைவில் 
முடிவெடுக்கப்படும்.

Friday, September 16, 2016

மாநிலப் பொருளர் மகள் திருமணவிழாவில் 
மாநிலச் செயலர் தோழர் கே.நடராஜன் மற்றும் தோழர்கள்


Thursday, September 15, 2016

இன்று சிறப்புடன் நடந்த எனது இளைய மகளின் திருமண

நிகழ்வில் கோவை PGM திரு சிவராஜ் அவர்களும்

பல அதிகாரிகளும் அனைத்து சங்க தலைவர்களும்.


சென்னையிலிருந்து மாநிலச் செயலர் தோழர் நடராஜன்

அவர்களும் திருச்சி தோழர்களும், மதுரைத் தோழர் சேது

அவர்களும்  எனது   அருமைத் தோழர்கள்  தோழியர்களும் 

திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

                       அனைவருக்கும் நன்றி !  நன்றி !!

                                            
                                             தோழமையுடன்              
                                             எல்.சுப்பராயன்.




Monday, September 12, 2016


9-9-16 அன்று தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டம்









Tuesday, September 6, 2016

                                  Abhimanyu stands exposed:

Two meetings were held by PLI ( Bonus) committee on 28-08-2016 and 
05-09-2016  the management has offered to give only 1100 rupees as 
PLI for 2014-2015 financial year in these meetings despite request 
from NFTE and BSNLEU for enhancing the amount. 

The amount of PLI for 2015-2016 will be declared by the management 
soon. This is the factual and actual position on PLI ( Bonus).

When the election campaign for the seventh membership verification 
was in full swing few months ago ,BSNLEU General Secretary 
Abhimanyu spread a false propaganda that NFTE agreed with the 
management for two digit ( 99 rupees) bonus. This low campaign by 
BSNLEU was undertaken only to get few votes more than NFTE in 
the verification ballot. It is now exposed. 

But Abhimanyu and his followers should say sorry or express 
apology to Com. Islam, who was humiliated and abused throughout 
the country due to the falsehood propaganda by BSNLEU. Never. 
That was to be expected from decent and civilised people and not 
from Abhimanyu.
                                              From the FB of Com.C.K.M

Monday, September 5, 2016

                                                    

Saturday, September 3, 2016





சின்னஞ்சிறு கம்பெனியான INFOTEL பெயரில் தகிடுதத்தம்
செய்து குறைந்த விலையில் 22 மாநிலங்களில் லைசன்ஸ்
பெற்றபின் அதை முழுங்கிய பகாசூர Reliance கம்பெனி
இன்று மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களை,
வெளியேற்ற முயற்சிக்கிறது.

2005ல் மத்திய அரசின் CAG ரிலையன்ஸ் ஜியோ பெற்ற
லைசன்ஸ் முறையானது அல்ல, அரசை ஏமாற்றி
பெற்றது, ஆகவே அந்த லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும்
என்று அறிக்கை கொடுத்தார். அதை குப்பை கூடைக்கு
அனுப்பிய மோடி அரசு, இன்று அதன் விளம்பரதாரராகவும்
மாறிவிட்டது.

 2G ஊழல் போல இதுவும் ஒரு மிகப்பெரிய ஊழல்.

விரைவில் அதன் முகமூடி கிழியும். உண்மை வெளிப்படும்.

The Rs 19,000 Crore Mystery ,,,,,

In a report that was tabled in Parliament on 8 May 2015, the Comptroller and Auditor General (CAG) of India indicted the Department of Telecommunications (DoT) for providing an “undue benefit” to Reliance Jio—a telecom company owned by Mukesh Ambani as part of Reliance Industries Limited (RIL)—by allowing Jio to offer voice services under the Broadband Wireless Access (BWA) spectrum. According to the report, the cost of this “undue benefit” was Rs 3,367 crore. However in a draft report that had been released by the CAG in August 2014, the figure for the undue benefit was Rs 22,842 crore.
Cancel broadband spectrum held by Reliance Jio: CAG draft report
CAG in a draft report sent to the Department of Telecom for comments, said, "the DoT failed to recognise the tell-tale sign of rigging of the auction right from beginning of the auction" in which a small ISP, Infotel Broadband Services Pvt Ltd (IBSPL) emerged winner of pan-India broadband spectrum by paying 5,000 times of its net worth.
RIL, which acquired IBSPL within hours of it winning the spectrum and later renamed it Reliance Jio, said, "There is no final CAG report that we are aware of. That said we outrightly reject any suggestion whereby spectrum was acquired in any manner other than through a transparent bidding process duly supervised by Government of India."
According to the draft report, IBSPL, ranked 150th in the list of ISPs, submitted an earnest money deposit of Rs 252.50 crore "through the covert and overt assistance of third party/private bank", bid for Rs 12,847.77 crore (5000 times of its net worth) for pan-India spectrum and then sold the company on the day of completion of the auction.
These, according to the draft report, "indicated IBSPL's collusion and sharing of the confidential information with a third party in violation of auction conditions/rules."
RIL spokesperson said the auction for the BWA spectrum was one of the most competitive auction in the Indian telecom history which fetched final bid price more than six times the reserve price for the Pan-India spectrum.
"This was despite no visible evidence of any eco-system for the BWA spectrum at the time of auction. Any allegations of so-called collusion, sharing the confidential information or rigging the auction are bizarre and completely rejected," the spokesperson said.
On bank guarantee, RIL spokesperson said that as per NIA bidders were required to submit Bank Guarantee for desired amount as Earnest Money Deposit (EMD) along with its application.
"EMD was based on specific deposit requirement for each telecom circle. Accordingly Infotel Broadband Services Pvt Ltd (IBSPL) submitted a Bank Guarantee of Rs 253 crore in format as prescribed in NIA. Since no money was deposited as EMD, the question of source of deposit does not arise," the spokesperson said.
The draft CAG report said, "Due to inclusion of inadequate eligibility criterion for participation in the auction, the promoters of the IBSPL enriched themselves and made unfair gain."
CAG rejected DoT response that the eligibility criterion for participation in the auction was finalised after due diligence and on sector regulator TRAI's recommendations saying it was department's responsibility to ensure that only serious ISPs participated in the auction.
DoT in its response admitted that there was no eligibility criterion with respect to minimum net worth or paid up capital for participation in the auction.
"Neither the top management of the DoT nor the important committees... could detect these tell tale signs of collusion and sharing of confidential information by the biggest bidder, a tiny ISP.
"The IMC (inter-ministerial committee) did not satisfy itself as to how the IBSPL, a company with a net worth of Rs 2.5 crore, would be able to pay the bid amount of Rs 12,847.77 crore within ten days," it said.
CAG in the draft report said, "the government should get the matter investigated even at this juncture, fix responsibilities on the bidders, which violated the auction conditions/rules prescribed and cancel the allotment of the BWA spectrum along with exemplary punishment on the colluding firms."
The CAG estimated that decision of government to allow Internet service providers licence holder having BWA spectrum to provide voice services against payment of Rs 1,658 crore resulted in undue advantage worth Rs 22,842 crore to RJio.
The DoT has said the auction rules allowed all kind of telecom operators to participate in auction and there were no inherent limitation in providing voice service using BWA spectrum.
"Has the successfully bidder of pan-India BWA spectrum obtained UAS licence (permits held by mobile phone service providers), he would have become eligible to use BWA spectrum to provide any of the service permitted under UASL including full mobile service," the official source said.
Telecom operators like Bharti Airtel, Idea Cellular, Vodafone, Aircel etc hold Unified Access Service Licence (UASL) that allows them providing full mobile phone services as well.
The BWA auction rules gave option to participants to procure BWA spectrum under UASL against payment of Rs 1,658 crore as paid by other operators but there was no guarantee of giving them initial spectrum as was given to incumbents.
CAG has rejected logic of DoT saying that auction guidelines linking of BWA spectrum with UASL is "unfair and highly inappropriate."

Friday, September 2, 2016

               அன்றும் இன்றும் NFTEன்   ஒரே நிலை  !  
    It is Very Meagre.......Give Reasonable amount  
                               

                இடையிலே தேர்தல் காரணமாக  
      அபிமன்யூவால்  எவ்வளவு குழப்பங்கள் !

By Com.Abhimanyu in BSNLEU's web site...
dated 2-9-16 
Both the Staff Side members of the PLI Committee, com. P. Abhimanyu, GS, BSNLEU and com. Chandeswar Singh, GS, NFTE, met shri Anupam Shrivastava, CMD BSNL yesterday, and discussed the PLI issue. Both the leaders told the CMD BSNL that, the PLI amount of Rs.1,100/-, offered by the Management Side, in the PLI Committee meeting held on 
24-08-2016, is very meagre. They sought the intervention of the CMD BSNL to settle the issue. Both the leaders demanded that, the contribution being given by the employees, especially during the past 2/3 years, for the revival of the Company should be kept in mind, and a reasonable amount should be paid as PLI to the employees. 
The CMD BSNL assured to look into the issue.

From NFTE-BSNL WEB SITE : 

30-03-2016 : PLI payment:- The joint meeting of PLI committee took place today with Shri Shamim Akhtar, PGM(SR) in Chair, GM(Restg), GM(Pers) also attended. Com. Islam Ahmad, Leader Staff Side in NC and NFTE nominee alone attended the meeting. Secy, Staff side has not attended on the plea that one month notice is required for the meeting. The official side proposed about amount of PLI for year 2014-15. The leader staff side stated that the quantum of money is too meager but we are not rejecting the proposal. The committee will now place its report to the competent authority for decision. NFTE is keen to see that the right of the workers is restored.


                    வேலைநிறுத்த போராட்டத்தில் 
                      பங்கேற்ற அனைத்து 
                   தோழர் தோழியர்க்கும் 
                     நன்றியும் பாராட்டும்