Wednesday, September 21, 2016

                             
 DGM (Admn & HR ) அவர்களுடன் சந்திப்பு !

                   19-9-2016 அன்று TNF (Technically Not Feasible) பகுதிகளில் புதிய 
இணைப்புகளை  வழங்க டெண்டர் மூலம்  ஒப்பந்த அடிப்படையில்   தனியார் நிறுவனத்திற்கு  பொறுப்பு வழங்க வேண்டும் என்ற  BSNL   கார்ப்பரேட்  அலுவலக உத்திரவை அமலாக்கும் வகையில்  வெளியிடப்பட்ட  e-tendering  விளம்பரம் குறித்து விளக்குவதற்கான 
கூட்டத்திற்கு  DGM (Admn & HR ) அழைப்பு விடுத்தார். 

நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் சுப்பராயன், ராபர்ட்ஸ், செம்மல் அமுதம்,  நரேஷ்குமார், கோட்டியப்பன்,  கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.சேவா  சங்கத்தின் சார்பாக தோழர்   சண்முகம்  கலந்து கொண்டார்.

நிர்வாகத்தின் சார்பாக AGM ( Plg I ), AGM (Admn) AGM (MM)   ஆகியோர் பங்கேற்றனர்.  

கேபிள் இல்லாததால், பல  பகுதிகளில் நமது நிறுவனத்தால்   புதிய  இணைப்புகள் வழங்க முடியவில்லை. 

ஆகவே, Build Operate & Transfer  (BOT) என்பது போல ,  அந்த  பகுதிகளில் புதிய இணைப்பு தரும்  பணியை revenue sharing அடிப்படையில்     காண்ட்ராக்ட்க்கு  விடவேண்டும் என்று  கார்ப்பரேட் அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. 

 கேரளா, குஜராத் உள்ளிட்ட  சில  மாநிலங்களில் இந்த நடைமுறை   ஏற்கனவே அமலில் உள்ளது. 

தமிழகத்தில்,  கோவை,மதுரை, திருச்சி உள்ளிட்ட  8  SSAக்களில்                   இதை உடனடியாக அமலாக்க கார்ப்பரேட்  அலுவலகம் உத்திரவிட்டதின் அடிப்படையில் e-tendering மூலம் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் சாராம்சம் :

1)  புதிய இணைப்புகள் மூலம்  வரும் வருமானத்தில்  65% BSNLக்கு, 
 35 % அந்த ஒப்பந்ததாரர்  கம்பெனிக்கு.

2)  குறைந்தபட்சம்   7 ஆண்டுகள் தொடர்ந்து இணைப்புகள் வழங்க வேண்டும் உள்ளிட்டவை  ஆகும்.

நாம் நமது மேல்மட்டங்களுடன் கலந்து  பேசி நமது கருத்தை   தெரிவிப்பதாக கூறியுள்ளோம்.     

No comments:

Post a Comment