08/01/2018 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து சங்கக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
30/01/2018 அன்று அண்ணல் காந்தி மறைவு தினத்தில் அவரது சமாதியில் அனைத்து சங்கத்தலைவர்கள் அஞ்சலி.
அதன் பின் 5 நாட்கள் தொடர் சத்தியாக்கிரகம்.
30/01/2018 முதல் நாடு முழுக்க அண்ணல் காந்தி வழியில்
விதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்கம்....
28/02/2018 அன்று டெல்லி சஞ்சார் பவன் நோக்கி
மாபெரும் முற்றுகைப் போராட்டம்.
ஒரு வார காலத்திற்குள் மந்திரியை சந்தித்து மனு கொடுத்தல்.
அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும்
சந்தித்து ஆதரவு கோருதல்.
செல் கோபுரம் துணை நிறுவன உருவாக்கம் எதிர்த்து
சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
கோரிக்கைகள்
01/01/2017 முதல் BSNL ஊழியர்களுக்கு
15 சத ஊதிய மாற்றம் அமுல்படுத்துதல்…
இரண்டாவது ஊதிய மாற்ற இழப்புக்களை சரிசெய்தல்…
01/01/2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்தல்….
செல்கோபுரம் துணை நிறுவன
உருவாக்கத்தை அரசு கைவிடுதல்…
ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆகக் குறைப்பதையோ விருப்ப ஓய்வுத்திட்டத்தை கட்டாயமாக அமுல்படுத்துதலையோ தவிர்த்தல்…
தோழர்களே….
நமது தேசத்தந்தை உயிர் நீத்த நாளில்…
நாம் உயிர்த்தெழுவோம் ஒன்றாய்….
இறுதிக்கட்டப் போராட்டத்தை...
உறுதியாக… அமைதியாக நடத்திடுவோம்…
ஊழியர் நலன்… நிறுவன நலன்
இணைந்தே காத்திடுவோம்…
No comments:
Post a Comment