Wednesday, February 28, 2018
- சென்னையில் இன்று....... காலையில் மாநிலச் செயலருடன் தணிக்கையாளரை சந்தித்தோம்.மதியம் மாநிலச் செயலர் மற்றும் மாநில துணைச் செயலர் தோழர் முரளிதரன் அவர்களுடன் தோழியர் அரங்கநாயகி, சோமனூர் அவர்களின் மெடிக்கல் பில் குறித்து மாநில அலுவலக அதிகாரிகளை சந்தித்து விரைவில் Sanction செய்யுமாறுகேட்டுக் கொண்டோம். ஏற்கப்பட்டது.
Saturday, February 24, 2018
ஒற்றுமையின் வெற்றி !
சஞ்சார் பேரணிக்கு பின் அனைத்துச் சங்கத் தலைவர்களுடன் அமைச்சர் நடத்திய சந்திப்பு
நல்ல மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஊதிய மாற்றம் சாத்தியமில்லை என்ற நிலைபாடு தளர்த்தப்பட்டுள்ளது.
ஊதிய மாற்றத்திற்கான பணி துவங்கி DPE வழியாக மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சர் உறுதி கூறி உள்ளதும்,
ஓய்வூதிய வயதில் மாற்றமில்லை என்பதும்
நல்ல மாற்றம்.
தொடர்ந்து ஒற்றுமையாக விழிப்புணர்வுடன்
செயலாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும்
உள்ளது.
இந்த மாற்றத்திற்கு பாடுபட்ட அனைவருக்கும்
நன்றி.
Thursday, February 22, 2018
வரவேற்போம் !! மகிழ்ச்சியுடன் !!
22-2-2018 அன்று டெல்லியில் AITUC தலைவர், மூத்த தோழர் G.L தார் அவர்களின் இல்லத்தில் நடந்த முக்கிய தலைவர்களின் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஒப்பந்த ஊழியர் சங்கங்களை அமைத்திடவும், அகில இந்திய அளவில் நமது சங்கம் சார்ந்த / நமது சங்கத்துடன் நல்லுறவு கொண்ட அனைத்து ஒப்பந்த ஊழியர்களின் அமைப்புகளையும் ஒருங்கிணைத்திடவும்
6 தலைவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
நமது நிறுவனத்தில் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களின் நலன் காத்திட
ஒன்றுபடுவோம் !
போராடுவோம் !!
வென்றிடுவோம் !!!
போராடுவோம் !!
வென்றிடுவோம் !!!
Monday, February 19, 2018
ஊதிய மாற்றப் பிரச்னையில் புதிய வெளிச்சம் !!
NFTE தலைமையின் ஆக்கபூர்வமான பணி !
நமது சங்கத் தலைமை DPE வழிகாட்டுதல்படி நமக்கு 1-1-2017 முதல் நமக்கு ஊதிய மாற்றம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, லாபம் இல்லை என்றால் ஊதிய மாற்றம் இல்லை என்ற விதியை நமக்கு தளர்த்திட பிரதமருக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்திற்கு பதிலாக, விதியை தளர்த்தும் முன்மொழிவு BSNLன் நிர்வாக அமைச்சகமான DOTயிலிருந்து வரவேண்டும் வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தக் கடிதம் ஒரு புதிய வெளிச்சத்தை காட்டி உள்ளது.
இனி அனைத்து சங்கங்களின் பணி, இந்த கடிதத்தின் அடிப்படையில் , அரசாங்கம் DPE வழிகாட்டுதலில் உள்ள விதியை தளர்த்தி BSNLக்கு விலக்கு தரவேண்டும் என்று கோரிக்கையை எழுப்புவதாக அமைய வேண்டும்.
Tuesday, February 13, 2018
வால்பாறை டென்யூர் மாற்றல்கள்
2010லிருந்து டெல்லி கார்ப்பரேட் அலுவலக உத்திரவின்
அடிப்படையில் டென்யூர் மாற்றல்கள் அமலாகிறது.
வால்பாறையில் இரண்டு ஆண்டு டென்யூர் முடித்தவர்கள் அவர்கள் விரும்பி கேட்கும் ஊருக்கு விருப்ப மாற்றல் செய்யப்படுவர். அந்த ஊரில் நீண்ட காலமாக பணியாற்றும் ஊழியர்கள் மாற்றப்படுவார்கள்.
இவ்வாண்டு ஒரு Office Supt, இரண்டு JEக்கள், ஆறு TT ஊழியர்கள் டென்யூர் முடித்து மாற்றல் கேட்டு விண்ணப்பம் கொடுத்து உள்ளனர்.
Long stay List, கோவை Intranetல் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை, பொள்ளாசி பகுதியில் உள்ள ஊழியர்கள் அதை சரிபார்த்து தவறு இருக்குமாயின் மாவட்டச் சங்கத்தை உடனே தொடர்பு கொள்ளவும்.
ஒரு மூத்த தோழர் ஆதாரத்துடன் உடனடியாக மாவட்டச் செயலரை அணுகினார். உடனடியாக தவறு திருத்தப்பட்டுவிட்டது.

Monday, February 12, 2018
நிர்வாகத்துடன் சந்திப்பு !
இன்று NFTE, BSNLEU சங்கத் தலைவர்கள் L. சுப்பராயன்,
A. ராபர்ட்ஸ், R.பரமேஸ்வரன், C. ராஜேந்திரன்,
S.P மகேஸ்வரன் ஆகியோர் AGM (Admn) அவர்களை சந்தித்து சுழல் மாற்றல் அமலாக்கம் குறித்து விவாதிக்க லோகல் கவுன்சிலில் அமைக்கப்பட்ட மாற்றல் கமிட்டியின் கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தினோம்.
மெயின் எக்ஸேஞ்ச் லிஃப்ட் அடிக்கடி பழுதாவதால் புதிய லிஃப்ட் நிறுவ கோரியுள்ளோம். ஏற்கப்பட்டுள்ளது.

Sunday, February 11, 2018
குனியமுத்தூர் தோழர் என்.பழனிச்சாமி அவர்கள் மீதான மகளிர் அதிகாரி கொடுத்த புகார் மீது சுமுக தீர்வு,
சின்னியம்பாளையம் தோழர் ஜே.மாணிக்கம் தற்காலிக மாற்றலை நிரந்தரமாக்கியது,
டிரைவராக பணியாற்றிய (மாற்று சங்க உறுப்பினர்) திருப்பூர் தோழர் டேனியல் அவர்களை உடல்நிலை காரணமாக மீண்டும் டெலிகாம் டெக்னீஷியன் பணி தருவது ஆகிய பிரச்னைகளை தீர்த்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.
தற்போது No pending Problem என்ற நிலையை உருவாக்கிய நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி !
Friday, February 2, 2018
Subscribe to:
Posts (Atom)