35 ஆண்டுகளாக இந்த வளாகத்தில் நடைபெறும் மகளிர் தின கூட்டங்களில்
பங்கேற்று வருகிறேன். இதுதான் நான் பணியில் இருக்கும்போது
கலந்துகொள்ளும் கடைசி மகளிர் தினம்.
இந்த நன்னாளில் தோழியர் பகவதி எங்களுக்கெல்லாம் ஒரு ஆதர்ஸ
தோழியராக இருந்ததை நினைவு கூர்வது எனது கடமை. ஆண்களே
தயங்கிய போது தைரியமாக அதிகார ஆணவம் பிடித்த அதிகாரியை
தட்டிக் கேட்டவர் தோழியர் பகவதி. தோழியர்கள் தங்களது உரிமைக்காக
போராட தயங்கக் கூடாது.நமது துறையில் பணியாற்றும் தோழியர்களின்
போராட்ட உணர்வே சங்கத் தலைவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
33 சத ஒதுக்கீட்டை நாடாளுமன்ற, சட்ட மன்றங்களில் பெற மாதர்
அமைப்புகள் தொடர்ந்து குரலெழுப்ப வேண்டும்.
வெல்லட்டும் மகளிர் உரிமைக்கான போராட்டங்கள் !!.
No comments:
Post a Comment