Rotation Transfer Season
வால்பாறைக்கான டென்யூர் மாற்றல் Long Stay list இறுதிப் பட்டியல் வெளியானவுடன் சுழல் மாற்றல் சீஸன் சூடு
பிடித்து விட்டது.
வெளியூர் மாற்றல் டென்யூர் 3 வருடம் என்று சிலர் குழப்பத்தை கிளப்பி விட்டுள்ளனர்.
சென்னை மாநில சங்க அலுவலகத்தில் தங்கி இருந்தபோது மாநிலச் செயலருடன் இது குறித்து
விரிவாக விவாதித்தேன்.
2016ல் சுழல் மாற்றல் உத்திரவிடும்போது இரண்டு ஆண்டுகள் என்று gentlemen agreement உள்ளதையும் தெரிவித்தேன்.
2010ல் தான் டெலிகாம் டெக்னீஷீயன் கேடரில் சுழல் மாற்றல் அமலாகத் துவங்கியது.
அப்போது இருந்த சூழ்நிலை இப்போது இல்லை என்பது மட்டுமல்ல. அந்த சூழல் அடியோடு மாறி உள்ளது.
அப்போது திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதிகளில் கடும் ஆட்பற்றாக்குறை.
தற்போது கோவையில் கடும் ஆட்பற்றாக்குறை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவையில் மட்டும் பணி ஓய்வு பெற்று
உள்ளனர். ஒரு சிலர் துரதிருஷ்டவசமாக உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டனர். அரசூர், சங்கனூர்
போன்ற தொலைபேசி நிலையங்களில் ஒரு ஊழியர்கூட இல்லாத சூழல். கோவையில் இதயமாகத் திகழும் ராம்நகர் தொலைபேசி நிலயத்தில் இண்டோர் பகுதியில் ஒரு நிரந்தர ஊழியர்கூட கிடையாது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற உள்ள ஊழியர்களையும் கணக்கில் கொண்டால் நிலைமை இன்னும் படுமோசமாக மாறும்.
ஆகவே, மாற்றல் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று நமது மாவட்டச் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடைசியாக நடந்த லோகல் கவுன்சில் கூட்டத்திலும் இந்த கருத்தை வலியுறுத்தினோம்.
அனைத்து முன்னணித் தோழர்களையும் கலந்தாலோசித்த பின், கீழ்க்கண்ட திட்டத்தை நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக முன் வைக்கிறோம்.
1. புதிய Rotation Transfer விளக்க உத்திரவின் அடிப்படையில் சுழல் மாற்றலில் வெளியூரில் சென்று இரண்டு ஆண்டுகள் பணி முடித்தோரை அவர்களின் விருப்ப மாற்றல் வேண்டுகோளின்படி மாற்றவேண்டும்.
கோவையில் கடும் ஆட்பற்றாக்குறை உள்ள வருவாயை அதிகம் ஈட்டித்தரும் இடங்களில் பணியில் அமர்த்த வேண்டும். உதாரணம்: மெயின் டெலிபோன் எக்சேஞ்ச், பீளமேடு, சாய்பாபா காலனி, துடியலூர், கணபதி போன்ற பகுதிகள்.
வெளியூர் கிராமப்புற பகுதிகளுக்கு கட்டாய மாற்றல் தேவையில்லை. அங்கெல்லாம் போஸ்டிங்க் செய்யப்படும் ஊழியரின் சம்பளத்திற்கு ஏற்ப அந்த பகுதிகளில் வருவாய் இல்லை. ஆகவே, செலவீனத்தை குறைக்கும் வகையில் பொள்ளாச்சி பகுதியில் பரீட்சார்த்தமாக மேற்கொண்டதைப்போல மாற்று ஏற்பாடுகளை செய்திடுவது ஊழியர் நலன் சார்ந்தது மட்டுமல்ல, பொருளாதாரரீதியாக புத்திசாலித்தனமானது கூட.
( It will not only be in the interest of staff welfare but also an action with economic prudence.)
அது சாத்தியமில்லாத பட்சத்தில் வெளியூர் மாற்றல் காலத்தை ஓராண்டாக நிர்ணயம் செய்யலாம். ஊழியர்கள் தங்களது மாற்றல் பலனையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர்.

No comments:
Post a Comment