Wednesday, July 29, 2015

                 PGM அவர்களுடன் சந்திப்பு 
 
  PGM அவர்களை  மாவட்ட சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து ஊழியர் பிரச்னைகளை விவாதித்தனர். 

மாவட்டச் செயலர் தோழர் L.S. மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ், 
மாவட்ட துணைத்தலைவர் தோழர் கோட்டியப்பன், மாவட்ட பொருளர்
தோழர் செம்மல் அமுதம், ராம்நகர் கிளைச் செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, மெயின் எக்ஸேஞ் கிளைச் செயலர் தோழர் பரமேஸ்வரன், பீளமேடு கிளைச் செயலர் தோழர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிர்வாகத்தின் சார்பாக DGM (A), AGM (A)  ஆகியோர் பங்கேற்றனர்.


டாட்டாபேட் பகுதிக்கு கூடுதலாக  RM ஊழியர்க்கு மாற்றல் வழங்கியதற்கும்  

  SDE  சின்னியம்பாளையம், அங்கு பணியாற்றும்  ஊழியர்களை 
கொடுமைப் படுத்தும் வகையில் நடந்து கொள்வதை நிர்வாகத்தின் கவனத்திற்கு  எடுத்துச் சென்றதால், அவரை மாற்றி  உத்திரவிட்டதற்கும், 

திருப்பூர் தோழர்கள்  கந்தசாமி, சந்தரசேகரன் ஆகியோரின் விருப்ப 
மாற்றலை உத்திரவிட்டமைக்கும், 

 உபரி என்று திருப்பூர் TRA பகுதியிலிருந்து ஊழியர் மாற்றலின் போது
 தோழர் அந்தோனி மரிய பிரகாஷ் அவர்களுக்கு அவர் விருப்பத்தின் 
பேரில் என்.ஆர்.கே புரத்திற்கு மாற்றல் உத்திரவிட்டதற்கும், 

நெகமம் தோழர் ரத்தினம் அவர்களுக்கு பொள்ளாச்சி  NPT  தொலைபேசி நிலையத்திற்கு மாற்றல் அளித்ததற்கும் 

சோமனூர் JTO (Officiating) தோழர் ராஜேந்திரன் அவர்களுக்கு கோவை மாற்றல் அளித்தமைக்கும் நன்றி தெரிவித்தோம்.  
  
   பொள்ளாச்சி, பீளமேடு, மெயின் எக்சேஞ் CTO பகுதிகளில் சேவை மேம்பாடு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

TTA ஊழியர்களின் Rule 8 மாற்றல்கள், கேபிள் பணிக்கு கூடுதல் உதவியாளர்கள்,  TTA ஊழியர்க்கு conveyance, JTO  Officiating  ஊழியர்க்கு வழங்கவேண்டிய Pay fixation arrears ஆகியவற்றை விவாதித்தோம். 

மெயின் எக்ஸேஞ் PGM அலுவலகத்தில்  ஊழியர்கள் உபரி என்று போடப்பட்ட மாற்றல் உத்திரவால் நமது உறுப்பினர்கள் மூவர்  பாதிக்கப்பட்டுள்ளதையும் அதை சரிசெய்ய வேண்டும் என்றும்,  அந்த மாற்றல் உத்திரவால் ஏற்பட்ட பாரபட்சத்தை களையும் வகையில் Rotation Transferஐ விரைவில் வெளியிட வலியுறுத்தினோம். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று PGM அவர்கள் உறுதி அளித்துள்ளார்.