Tuesday, August 25, 2015


            சொஸைட்டி  வட்டிப்  பிரச்னையும் 
              BSNLEUவின்  கபட  நாடகமும் !!

சென்ற முறை,  சொஸைட்டி  BSNLEUவின்  முழுக் கட்டுப்பாட்டில் இருந்தபோது சாதாரண கடனுக்கான  வட்டி விகிதம் 16.5 சதம். 

அப்போது, வட்டியை குறைக்க வேண்டும் என்று நமது சங்க ஆதரவு   டைரக்டர்கள் மற்றும்  RGB உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது, 

" ஐயோ அது சாத்தியமில்லை ! வட்டியை குறைத்தால்  சொஸைட்டி திவாலாகிவிடும் ! " என்று  பேசியவர்தான் முன்னாள் இயக்குனர்
( BSNLEU) அன்புமணி. 
  
   சென்ற RGB  தேர்தலுக்கு பிறகு  காட்சிகள் மாறின. 

BSNLEU கூட்டணி சொஸைட்டி தேர்தலில் படுதோல்வி அடைந்தது.  
நமது  கூட்டணியின் வசம் சொஸைட்டி நிர்வாகம் வந்தது. ஒவ்வொரு சதமாக, இருமுறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. மொத்தத்தில் 
வட்டி விகிதம் 14.5 சதமாக ஆனது. உறுப்பினர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

சென்ற ஆண்டு நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியைப்  பிடித்தார். நல்ல 
காலம் பிறக்கும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், நாட்டு  மக்களுக்கு மட்டுமல்லாது, நமது  சொசைட்டி உறுப்பினர்களுக்கும் நல்ல காலம் பிறப்பதற்கு பதிலாக கெட்ட காலம் பிறந்தது. 

          இதுநாள் வரை விவசாயிகளுக்கு வழங்கிய சலுகை வட்டியிலேயே வங்கிகள் நம்மை போன்ற ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கும் கடன் வழங்கி வந்தது. அந்த முறையை அடியோடு மாற்றி, சலுகை வட்டி தரக் கூடாது என்று உத்திரவு பிறப்பித்தது மோடி அரசு. அதன் காரணமாக நமது கூட்டுறவு சங்கமும் ஏற்கனவே  வாங்கிய கடனுக்கு அதிக வட்டி தர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. தவிர்க்க முடியாமல் உறுப்பினர்களுக்கு வழங்கிய கடனுக்கான  வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.    

   வெறும் வாயை மெல்பவனுக்கு  அவல் கிடைத்ததுபோல, தோல்வியில் துவண்டு போயிருந்த அன்புமணி கம்பெனி உயிர்த்தெழுந்தது.

   ஆகா ! வட்டி உயர்வு அநியாயம் !!   ஏற்க மாட்டோம் !!  என்று  நீட்டி முழக்கி தமிழக சொஸைட்டி உறுப்பினர்களிடம் மட்டுமல்லாது, உறுப்பினர் அல்லாதவர்களிடமும் தங்களது வழக்கமான கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.

    நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் மோடிதான் காரணம் என்று மேடை தோறும் பிரசங்கம் செய்பவர்கள்,  இந்த வட்டி உயர்வு பிரச்னையில் மட்டும் மோடி அரசின் மோசடித்தனத்தை தோலுரிக்காமல்,  அன்புமணி தலைமையில் தற்போதைய இயக்குனர் குழுவை சந்தித்து கையெழுத்து படிவத்தை கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்பது ஏன் ?

வட்டி குறைப்பில் இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை  இருக்குமானால் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியது, மோடி அரசை எதிர்த்து அல்லவா ? 

அதை விட்டுவிட்டு, பொறுப்பேற்றவுடன் வட்டியை குறைத்த இயக்குனர் குழு மீது பாய்வது ஏன் !!

வெள்ளானூர் நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு என்பது சென்ற இயக்குனர் குழு காலத்திலேயே முடிவாகிவிட்டதோடு, சென்ற தேர்தலில் ஆகப் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட்ட, 
 இனி மாற்ற முடியாத முடிவு....  

சோழியன் குடுமி சும்மா ஆடுமா ! 

இவர்களது உள்நோக்கம் அடுத்த அங்கீகாரத் தேர்தல் !

இந்தியாவெங்கும் பொய்ப்பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் பெற்றாலும்  தமிழகத்தில இவர்களது பாச்சா இது நாள் வரை பலிக்கவில்லை  ! 

BSNLEUவின் பன்னிரெண்டாண்டு  அங்கீகார காலத்தில் சொல்லிக்
 கொள்ள சாதனை ஏதுமில்லை...போனஸ் இல்லை,  ஊதிய 
மாற்றத்தில் குளறுபடிகள் என்ற வேதனைகளே தொடர்கதையாகி வருகிறது.  இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் ஜெயிக்க 
வேண்டும் என்ற நப்பாசையில்தான் இந்த வட்டி குறைப்பு 
ஆர்ப்பாட்டம் எனும்  கபட நாடகம்  ! 

                 BSNLEUவின்  பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம் !! 

                                 உண்மையை எடுத்துரைப்போம் !! 

        தமிழகத்தில் NFTE-BSNL சங்க வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் !!

   
 
   

Tuesday, August 11, 2015

               
  பெருந்தலைவர் குப்தா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய 
தோழர் எல். சுப்பராயன் அவர்களை  கட்டியணைத்து வாழ்த்தும் குப்தா 
அவர்களின் மகன் தோழர் சலீல் குப்தா . 
அமர்ந்திருப்பவர்கள்  புத்தகத்தை வெளியிட்ட தோழர் வீரராகவன் மற்றும் புத்தகத்தை சீரமைத்த தோழர் V.K.G .  


   Displaying 20150811_150536.jpg

 

                                                   

Thursday, August 6, 2015


 " Never a Dogmatist " புத்தக வெளியீடு

பிரம்மாண்டமாக நடந்த சென்னை மாநில மாநாட்டின்  ஒரு நிகழ்ச்சியாக, 

" தோழர் குப்தா என்றும் வறட்டுத்தனமானவரல்ல " என்ற பொருள்படும்
வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக விளக்கும்
தோழர் எல்.சுப்பராயன் எழுதியுள்ள " Never a Dogmatist " என்ற
ஆங்கில நூலை கூட்டுறவு சங்கத் தலைவர் தோழர் வீரராகவன்
வெளியிட, குப்தா அவர்களின் மூத்த மகன் திரு சலீல் குப்தா 
பெற்றுக் கொண்டார். அவரது மனைவி டாக்டர் சுனீதாவும்

விழாவில் பங்கேற்றார்.விழாவிற்கு தோழர் குணசேகரன் தலைமை ஏற்றார்.

             அம்பேத்கார் அவர்களின் கருத்து பெட்டமாக,

                     " நான் இந்து அல்ல "   என்ற தலைப்பிலும் 

  என் ஜன்னலுக்கு அப்பால் என்ற தலைப்பிலும்தோழர் சி.கே.எம் எழுதியுள்ள இரண்டு நூல்களையும் 


முறையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் 

தோழர் மூ.வீரபாண்டியன், வணிகர்கள் சங்க தலைவர் திரு வெள்ளையன் 

ஆகியோர் வெளியிட தோழர்கள் மாலி, ராஜசேகரன் ஆகியோர் 

பெற்றுக் கொண்டனர்.