Monday, August 29, 2016

 
                               தோழர் நம்பீசன் காலமானார்

                              

தமிழ் மாநில சங்கத்தின் மூத்த தோழர், முன்னாள் லைன் ஸ்டாப் சங்க   மாநிலச்
செயலர் தோழர் நம்பீசன்  அவர்கள் 94 வது
வயதில் காலமானார்.

அவருக்கு நமது செங்கொடி தாழ்த்தி 
அஞ்சலி.   

Friday, August 26, 2016


       சிறக்க நடந்த   ஈரோடு மாவட்ட மாநாடு  

மாநிலச்செயலர் தோழர் நடராஜன் எழுச்சிமிகு துவக்கவுரை 
ஆற்றினார். 

ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கிட உதவும் உள்ளங்கள் 
உதவிக்கரம் நீட்டின . 

தோழர் குமார் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 
தோழர் மாலி அவர்கள் தலைமையில்  மிக சிறப்பாக நடைபெற்றது.  

 இந்நாள், முன்னாள் பொருளாளர்கள், தோழர்கள் சுப்பராயன், அசோக்ராஜன்  உள்ளிட்டோர்  மனதார  பாராட்டுரை  வழங்கினர்.     

சேவை   கருத்தரங்கத்தில் பொது மேலாளர் உரையாற்றினார். 

சம்மேளனச்செயலர் தோழர் ஜெயராமன் நிறைவுரையாற்றினார். 

மீண்டும் மாவட்டச் செயலராக தோழர்  பழனிவேல் ஏகமனதாக   தேர்ந்தெடுக்கபட்டார்.   

புதிய நிர்வாகிகளுக்கு நமது  வாழ்த்துக்கள் Thursday, August 25, 2016

                                 
                                   

        போனஸ் கமிட்டி கூட்டம் !


  • 24-8-16 அன்று போனஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
  • புதிய PLI திட்டத்தில்... DOT-BSNL MOU உடன்பாட்டின் அடிப்படையில், வருவாய் இலக்குக்கு (Revenue Target)             மேல், கூடுதல் வருவாய் ஒவ்வொரு கோடி ரூபாய்க்கு   போனஸ் (PLI) ஒரு ரூபாய்   வழங்க   நிர்வாகம்  முன்                  வந்தது  
  • சங்க பிரதிநிதிகள் இதை ஏற்காமல்   2014-15, 2015-16 ஆண்டுகளுக்கு அட்ஹாக்  போனஸ் வழங்க             வலியுறுத்தினர் .

2014-15 ஆண்டுக்கு ரூ.1100/- வழங்க நிர்வாகம் முன்வந்தது.
இந்த தொகையையும் சங்க பிரதிநிதிகள் ஏற்கவில்லை.  
அதிகப்படுத்த வலியுறுத்தினர்.

2015-16 நிதியாண்டுக்கு  நிதிநிலை அறிக்கை தணிக்கை         
செய்த பிறகு விவாதிப்பதாக தெரிவித்தது.

அடுத்த கூட்டம்   5-9-16 அன்று நடைபெறும் என்று முடிவு  
எடுக்கப்பட்டது.  

அம்பலமான  அபிமன்யூவின் பொய்ப்பிரச்சாரம் !

பொய் சொல்வதையே வாடிக்கையாக கொண்ட  BSNLEU   சங்க 
பொதுச் செயலர்,  சென்ற தேர்தலுக்கு முன் நமது சங்கம் மூன்று
இலக்க   போனஸுக்கு ஒப்புக் கொண்டது என்ற பொய்பிரச்சாரம்
என்பது இந்த கூட்டத்தில் அம்பலமானது.   

ஈரோடு மாவட்ட மாநாடு 
ஆகஸ்ட் - 25 மற்றும் 26 தேதிகளில்...

பகுத்தறிவின் பிறப்பிடம்..  

ஈரோட்டில் நடைபெறும்

NFTE

ஈரோடு  மாவட்ட மாநாடு 

வெற்றி பெறவும்..

அன்புத்தோழர்.குமார் 

அவர்களின் பணி நிறைவு விழா 

சிறக்கவும்  வாழ்த்துகிறோம்...

Tuesday, August 23, 2016

செப்டம்பர் 2  போராட்ட தயாரிப்பு கூட்டம் 


Monday, August 22, 2016


ஆடு நனைகிறதே  என்று............. 20  ஆண்டுகளாக  எதிரியாக நினைத்து  ஒழிக்க நினைத்தவரை , திடீரென்று மனமாறி  
காப்பாற்றியதாம்   இரட்டை நாக்கு !!

ஆஹா ! தோழர்கள் மீது   என்னே திடீர் கரிசனம் !!

உடுமலையில் மாவட்டச் செயலர் நல்லவர் ; கிளைச் செயலர்தான் மோசமானவர் என்று சொல்வார்கள் !

கோவையிலோ   வேறு மாதிரி பேசுவார்கள் !
இந்த இரட்டை நாக்கு பேர்வழிகள் !! 
   


Sunday, August 21, 2016

                                           
                                                  சிறப்புக் கூட்டம் 

              நாள் : 23-8-16    :   நேரம் மாலை 4   மணி 
          இடம் :  CTO CLUB , கோவை-18  

                 தலைமை:   தோழர் A. ராபர்ட்ஸ்
                                   மாவட்டத்  தலைவர் 

  சிறப்புரை :  தோழர் R.பட்டாபிராமன்   

                       அனைவரும் வருக !!
                  
                                                   தோழமையுடன், 
                                                   எல்.சுப்பராயன்,
                                               மாவட்டச் செயலர்
                                 


                                               

Saturday, August 20, 2016


                               

                             இரட்டை நாக்கு பேர்வழி ! 


மாற்றல் கமிட்டி கூட்டத்தில், " அந்த ஊழியருக்கு  வங்கிக்கு  போய்வர   இரண்டு  மணி   நேரம்தான் வேலை ! அந்த இடத்திற்கு இனி புதிய   ஆள் போட    வேண்டாம் !!  இன்னொருவருக்கு    வேலையே இல்லை ! ஸ்டேஷனரி சப்ளை செய்வதற்கு ஒரு ஊழியர்   தேவையா ?    ஆட்பற்றாக்குறை   உள்ள  சூழ்நிலையில்   இப்படியெல்லாம் ஊழியர்களை   வேஸ்ட்   செய்யலாமா ?   வேலையுள்ள வேறு இடத்திற்கு போடுங்கள் ! "   என்று  பேசிய நாக்குதான்     இன்று வேறு மாதிரி எழுதுகிறது...........ஏதோ ஆதாயந்தேடி .......

                   the cat is out of the bag 

மாவட்ட சங்கத்திற்கு எதிராக சில தோழர்களை கிளப்பிவிட முயலும் வகையில்   உண்மையை திரித்துக் கூறிய அந்த இரட்டை நாக்கு  எது என்பது  நீண்ட நாட்களாக மூடுமந்திரமாக   இருந்தது.   இப்போது   தெரிந்து  விட்டது.

 விரைவில்  மேலும் பல உண்மைகள்   வெளி வரும் , அப்போது உண்மையை உணர வேண்டியவர்கள் உணர்வார்கள்........

  நல்லவர்போல் நடிக்கும் நயவஞ்சகர்களின் 
 சதி   முறியடிக்கப்படும் !!        

Friday, August 19, 2016

            
 செப் - 2  வேலை நிறுத்த ஆயத்த மாநாடு திருச்சி 
                                                           18/8/2016

 அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு திருச்சியில் நடைபெற்றது.   .நமது சங்கத்  தோழர்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.
 திருச்சி, தஞ்சை, குடந்தை கோட்டத்தோழர்கள் கலந்து கொண்டனர்.


        திருச்சி மாவட்ட செயலர் பழநியப்பன் அனைவரையும் வரவேற்றார்.

எரிசக்தி துறையில் 55 சதம்...
சிமெண்ட் தொழிற்சாலைகளில் 52 சதம்...
ஆட்டோமொபைல் தொழிலில் 47  சதம்...
L&T  நிறுவனத்தில் 75 சதம்..
சேவைத்துறைகளில் 10 சதம்...
இரயில்வே... தொலைத்தொடர்பு... சுகாதாரம்... கல்வித்துறை.. 
என எத்தனையோ துறைகளில்...எத்தனையோ  சதம் 

மேலே நீங்கள் காணும் சதம்.. என்ன சதம்?...
சத்தமில்லாமல் வளர்ந்து வரும்.. 
ஒப்பந்த ஊழியர்களின்  சதமேயாகும்...

எங்கெங்கு காணினும் சக்தியடா என்றான் பாரதி...
இன்றைக்கு இந்திய தேசத்தில்... 
எங்கெங்கு காணினும் ஒப்பந்த ஊழியனடா...

கணிசமான  கூலி இல்லை...
கண் மூடினால் ஏதுமில்லை...
சோர்ந்து விட்டால் ஆறுதல் இல்லை...
சேர்ந்து விட்டால் தொல்லைகள் இல்லை..
இதுவே இன்றைய ஒப்பந்த ஊழியன் நிலை...

உலகின் உன்னதமான சொல்..
"உழைப்பு " என்றார் மாக்சிம் கார்க்கி...
அந்த உன்னத உழைப்பை நல்கும்.. 
தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டும் தேசமாக...
நமது இந்திய தேசம் மாறி வருகிறது...

குறைந்தபட்சக்கூலி 15000 என்பது..
இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கை...
எத்தனையோ போராட்டங்களை ஓரணியில் நின்று 
தொழிலாளிகள் போராடி விட்டார்கள்...

தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களைக் கண்ட
மத்திய அரசு வேறு வழியின்றி...
குறைந்த பட்சக்கூலியாக பத்தாயிரம் நிர்ணயம் செய்து 
30/03/2016 அன்று அரசிதழில் வெளியிட்டது...

குறைந்தபட்சக்கூலி பத்தாயிரமா?
பதைத்து விட்டது பாதக முதலாளி வர்க்கம்...
நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 
தங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டியுள்ளன...
FICCI எனப்படும்... 
Federation of Indian Chamber of Commerce and Industries
இந்தியத்தரகு முதலாளிகள் சங்கம் தனது 
கடும் எதிர்ப்பை மத்திய அரசிற்கு தெரிவித்துள்ளது...
உள்நாட்டு தொழில்கள் நொடித்துவிடும்
என்பது பிக்கியின் வாதம்...

இந்தியாவில் கூலி உயர்வு கொடுத்தால்...
அந்நிய முதலீட்டாளர்கள் யோசனை செய்வார்களாம்...
பாக்கிஸ்தான்... வங்காளதேசம்... வியட்நாம்..
போன்ற கூலி குறைவான நாடுகளின் பக்கம் 
அவர்களின் முதலீடு திரும்பும் 
என்பது பிக்கியின் பக்கவாதம்...

பிக்கியின் வாதத்திற்கு..
சிறுதொழிற்சாலைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 
முதலாளிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் கூலி வேறுபடுகிறது...
நாடு முழுக்க ஒரே கூலி கொடுக்கப்பட்டால்...
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் 
பொருட்களுக்கு போட்டி வந்து விடும் என்பது அவர்கள் தரப்பு வாதம்...

தொழிலாளர்களுக்கு... 
வைப்புநிதி... பணிக்கொடை... ஓய்வூதியம்.. போனஸ் 
என்று நாங்கள் அள்ளித்தரும் போது... 
கூலி உயர்வு எதற்கு? என்று  கேள்விகள் கேட்டுள்ளது... 
பிர்லா குழுமம்... குடும்பம்...

எல்லாவற்றுக்கும் மேலாக...
இந்திய ஆடை ஏற்றுமதி முதலாளிகள்...
ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு அளித்தால் 
இந்தியாவின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டுமே 
ஆண்டொன்றுக்கு 11,000 கோடி ரூபாய் 
இழப்பைச் சந்திக்க வேண்டிவரும்’ 
என்று கணக்கு போட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படியாக இந்திய முதலைகள்... முதலாளிகள்...
குறைந்த பட்சக்கூலி உயர்வை தடுத்து நிறுத்தியுள்ளனர்...
தொழிலாளியின் கூலிதான் தங்களது லாபம் என்பதைக் 
கூசாமல் அவர்கள் கூறியுள்ளார்கள்...
முதலாளிகளுக்காக... முதலாளிகளால் நடத்தப்படும் 
முதலாளி அரசும் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறது...

தோழர்களே...
உழைப்பவனைச் சுரண்டுவதுதான்...
உலகின் கொடிய செயல் என்றார் தோழர் லெனின்... 
கொலை வாளினை எடடா... கொடியோர் செயல் அறவே...
என்றார் புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன்...
கொலை வாள் எதற்கு.. நமக்கு? 
உழைப்போரின் ஒரே ஆயுதம் போராட்டம்...
செப்டம்பர் 2ல் வீதியில் இறங்கிப் போராடுவோம்...
கொடிய விதிகளை மாற்றுவோம்...
உறிஞ்சுபவன் தரமாட்டான்... 

உழைப்பவன் விடமாட்டான்...

காரைக்குடி மாவட்டச் சங்க வலைதளத்திலிருந்து....
 Thursday, August 18, 2016

வாழ்க  வசவாளர்கள் 

நியாயத்தை நிலைநாட்ட நமது மாவட்டச் சங்கம்  கொடுத்த 
உண்ணாவிரதப்  போராட்டத்தை அறிவித்த     பிறகு BSNLEU  
சங்கத்தின் வெப்சைட்டில் வந்துள்ள  வசை பாடல்களின் சில
வரிகள்  


* " தன்னை தலைவர் என்று தானே செல்பி எடுத்து விளம்பரம்படுத்தி 
    கொள்ளும் ஒருவர். 

 *  ஏற்றி விட்ட தனது சக தொழிற்சங்க தலைவனை  காட்டி கொடுத்து
   பதவி ஒன்றே முக்கியம் என மாவட்ட செயலர் பதவியை 
   நயவஞ்சமாக பெற்றவர். 

*  தனது தொழிற்சங்க வரலாற்றில் தொழிலாளர்களுக்காக செய்த ஒரு 
   சில சாதனைகளையாவது சொல்ல இயலாதவர் 


* போராட்டங்களை கொச்சைப்படுத்துவது இவரின் வாடிக்கை. இது 
  அவருக்கு வேண்டும் என்றால் சாதனையாக இருக்கலாம்" 


இது போன்ற கொச்சைத்தனமான வசைபாடல்கள்    நமக்கு 
புதிதல்ல..... 33 ஆண்டுகளாக   பழகிப்போன  ஒன்று......

நமது மூத்த தோழர்  ஒருவர்    பல்லாண்டுகளுக்கு முன் கூறியது  :

 " நம்பூதிரி அணியினர் நமது தோழரை புகழ்ந்தால் அவர் சரியாக வேலைசெய்யவில்லை   என்று  அர்த்தம்.   நம்பூதிரி   அணியினர்  
எந்த  தோழரை   அதிகமாக  திட்டுகிறார்களோ,    அவர்   நன்றாக செயல்படுகிறார் என்று அர்த்தம் "     

    காய்த்தமரம் தான் கல்லடி படும் என்பதால்  இதையெல்லாம் 
நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. 

நமது மாவட்ட மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு வெளிப்படையாக ஏகமனதாக நடைபெற்றதை மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் 
 அறிவர்.

  " தனக்கு வேண்டிய CTO  நண்பர் பாதிக்கப்பட்டால் சுழல் மாற்றல் வேண்டாம் என்பார்..... வேறு உறுப்பினர் என்றால்   middle of the 
academic year என்றால்கூட   tenure மாற்றல் போட்டாலும் 
பரவாயில்லை என்பார் "  என்பதே    BSNLEU     மாவட்ட செயலரைப்
பற்றி அவரது சங்க உறுப்பினர்களிடையே உள்ள  பரவலான கருத்து.  

நிர்வாகத்திடம் மாற்றல்போட ஒப்புக்கொண்டுவிட்டு, பதவிக்கு 
ஆபத்து   வந்தவுடன்   பல்டி அடித்தவருக்கு நம்மைப் பற்றி எழுத 
தகுதி   உண்டா  என்பதையும், 

 " சார் ! எந்த CSC யிலாவது   Stationery   சீட்  பார்க்க ஒரு சீனியர் தந்தி ஊழியரை  post  செய்தது உண்டா ! ஏன் ஒரு நல்ல Handஐ  
வேஸ்ட் செய்கிறீர்கள் ? "  என்று நிர்வாகத்திடன் பேசிவிட்டு, 
வெளியே வந்து  ரகசியமாக   அதை நான் பேசியதாக பிரச்சாரம் 
செய்யும் இரட்டை நாக்கு கோயபல்ஸ் யார் என்பதையும்   அவரது 
மனசாட்சிக்கே விட்டுவிடுகிறோம்.    

கடைசியாக நடந்த  லோகல் கவுன்சில் கூட்டத்தில் BSNLEU 
சங்கத்தை  சேர்ந்த ஒரு கவுன்சில் உறுப்பினரிடம் ஒரு அதிகாரி   மோசமாக நடந்து கொண்டார். ஊழியர் தரப்பு செயலர் அமைதியாக
 இருந்தார்.ஆனால் ஊழியர் தரப்பு தலைவரான நம்மால் அதை 
கேட்டுக் கொண்டு   வாளா  இருக்க முடியவில்லை. தலையிட்டு 
பிரச்னை ஆக்கியவுடன்,  அந்த அதிகாரி மன்னிப்பு கேட்டார். 

கூட்டம் முடிந்து வெளியே வந்தவுடன்   பல   BSNLEU  சங்க 
கவுன்சில்  உறுப்பினர்கள், நம்மிடம் கைகொடுத்து 

 "  தோழர் L.S.,  சீனியர்  தோழர் என்ற முறையிலே உங்களது தலையீடு சிறப்பாக இருந்தது, நன்றி  " 

என்று கூறியதே   நமது செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு.        


உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு !

           மாவட்ட சங்கம் கொடுத்த உண்ணாவிரத  போராட்ட அறிவிப்பின் அடிப்படையில் PGM அவர்களுடனும் AGM (Admn &  HR)  அவர்களுடனும்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

பேச்சு வார்த்தையில்   மாவட்டச் செயலர்,   மாவட்டத்  தலைவர் 
தோழர் ராபர்ட்ஸ், மாவட்ட பொருளர்   தோழர் செம்மல் அமுதம் 
மாவட்ட துணைச் செயலர் தோழர் நரேஷ்குமார், ராம்நகர் கிளைச் செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, மெயின் எக்சேஞ்ச்  வெளிப் 
புறக் கிளைச் செயலர் தோழர்  பரமேஸ்வரன் ஆகியோர் 
பங்கேற்றனர்.

நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட நிர்வாகம், 
விரைவில் அதனை  அமலாக்க  ஒப்புக்கொண்டு கடிதம் 
கொடுத்ததன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.   

Wednesday, August 17, 2016


                தினகரன் நாளிதழில் 12.8.16 

                  கோவை தர்ணா  செய்தி !