எரிசக்தி துறையில் 55 சதம்...
சிமெண்ட் தொழிற்சாலைகளில் 52 சதம்...
ஆட்டோமொபைல் தொழிலில் 47 சதம்...
L&T நிறுவனத்தில் 75 சதம்..
சேவைத்துறைகளில் 10 சதம்...
இரயில்வே... தொலைத்தொடர்பு... சுகாதாரம்... கல்வித்துறை..
என எத்தனையோ துறைகளில்...எத்தனையோ சதம்
மேலே நீங்கள் காணும் சதம்.. என்ன சதம்?...
சத்தமில்லாமல் வளர்ந்து வரும்..
ஒப்பந்த ஊழியர்களின் சதமேயாகும்...
எங்கெங்கு காணினும் சக்தியடா என்றான் பாரதி...
இன்றைக்கு இந்திய தேசத்தில்...
எங்கெங்கு காணினும் ஒப்பந்த ஊழியனடா...
கணிசமான கூலி இல்லை...
கண் மூடினால் ஏதுமில்லை...
சோர்ந்து விட்டால் ஆறுதல் இல்லை...
சேர்ந்து விட்டால் தொல்லைகள் இல்லை..
இதுவே இன்றைய ஒப்பந்த ஊழியன் நிலை...
உலகின் உன்னதமான சொல்..
"உழைப்பு " என்றார் மாக்சிம் கார்க்கி...
அந்த உன்னத உழைப்பை நல்கும்..
தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டும் தேசமாக...
நமது இந்திய தேசம் மாறி வருகிறது...
குறைந்தபட்சக்கூலி 15000 என்பது..
இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கை...
எத்தனையோ போராட்டங்களை ஓரணியில் நின்று
தொழிலாளிகள் போராடி விட்டார்கள்...
தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களைக் கண்ட
மத்திய அரசு வேறு வழியின்றி...
குறைந்த பட்சக்கூலியாக பத்தாயிரம் நிர்ணயம் செய்து
30/03/2016 அன்று அரசிதழில் வெளியிட்டது...
குறைந்தபட்சக்கூலி பத்தாயிரமா?
பதைத்து விட்டது பாதக முதலாளி வர்க்கம்...
நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
தங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டியுள்ளன...
FICCI எனப்படும்...
Federation of Indian Chamber of Commerce and Industries
இந்தியத்தரகு முதலாளிகள் சங்கம் தனது
கடும் எதிர்ப்பை மத்திய அரசிற்கு தெரிவித்துள்ளது...
உள்நாட்டு தொழில்கள் நொடித்துவிடும்
என்பது பிக்கியின் வாதம்...
இந்தியாவில் கூலி உயர்வு கொடுத்தால்...
அந்நிய முதலீட்டாளர்கள் யோசனை செய்வார்களாம்...
பாக்கிஸ்தான்... வங்காளதேசம்... வியட்நாம்..
போன்ற கூலி குறைவான நாடுகளின் பக்கம்
அவர்களின் முதலீடு திரும்பும்
என்பது பிக்கியின் பக்கவாதம்...
பிக்கியின் வாதத்திற்கு..
சிறுதொழிற்சாலைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த
முதலாளிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் கூலி வேறுபடுகிறது...
நாடு முழுக்க ஒரே கூலி கொடுக்கப்பட்டால்...
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும்
பொருட்களுக்கு போட்டி வந்து விடும் என்பது அவர்கள் தரப்பு வாதம்...
தொழிலாளர்களுக்கு...
வைப்புநிதி... பணிக்கொடை... ஓய்வூதியம்.. போனஸ்
என்று நாங்கள் அள்ளித்தரும் போது...
கூலி உயர்வு எதற்கு? என்று கேள்விகள் கேட்டுள்ளது...
பிர்லா குழுமம்... குடும்பம்...
எல்லாவற்றுக்கும் மேலாக...
இந்திய ஆடை ஏற்றுமதி முதலாளிகள்...
ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு கூலி உயர்வு அளித்தால்
இந்தியாவின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டுமே
ஆண்டொன்றுக்கு 11,000 கோடி ரூபாய்
இழப்பைச் சந்திக்க வேண்டிவரும்’
என்று கணக்கு போட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படியாக இந்திய முதலைகள்... முதலாளிகள்...
குறைந்த பட்சக்கூலி உயர்வை தடுத்து நிறுத்தியுள்ளனர்...
தொழிலாளியின் கூலிதான் தங்களது லாபம் என்பதைக்
கூசாமல் அவர்கள் கூறியுள்ளார்கள்...
முதலாளிகளுக்காக... முதலாளிகளால் நடத்தப்படும்
முதலாளி அரசும் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறது...
தோழர்களே...
உழைப்பவனைச் சுரண்டுவதுதான்...
உலகின் கொடிய செயல் என்றார் தோழர் லெனின்...
கொலை வாளினை எடடா... கொடியோர் செயல் அறவே...
என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்...
கொலை வாள் எதற்கு.. நமக்கு?
உழைப்போரின் ஒரே ஆயுதம் போராட்டம்...
செப்டம்பர் 2ல் வீதியில் இறங்கிப் போராடுவோம்...
கொடிய விதிகளை மாற்றுவோம்...
உறிஞ்சுபவன் தரமாட்டான்...
உழைப்பவன் விடமாட்டான்...
காரைக்குடி மாவட்டச் சங்க வலைதளத்திலிருந்து....
No comments:
Post a Comment