வாழ்க வசவாளர்கள்
நியாயத்தை நிலைநாட்ட நமது மாவட்டச் சங்கம் கொடுத்த
உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த பிறகு BSNLEU
சங்கத்தின் வெப்சைட்டில் வந்துள்ள வசை பாடல்களின் சில
வரிகள்
* " தன்னை தலைவர் என்று தானே செல்பி எடுத்து விளம்பரம்படுத்தி
கொள்ளும் ஒருவர்.
* ஏற்றி விட்ட தனது சக தொழிற்சங்க தலைவனை காட்டி கொடுத்து
பதவி ஒன்றே முக்கியம் என மாவட்ட செயலர் பதவியை
நயவஞ்சமாக பெற்றவர்.
* தனது தொழிற்சங்க வரலாற்றில் தொழிலாளர்களுக்காக செய்த ஒரு
சில சாதனைகளையாவது சொல்ல இயலாதவர்.
* போராட்டங்களை கொச்சைப்படுத்துவது இவரின் வாடிக்கை. இது
அவருக்கு வேண்டும் என்றால் சாதனையாக இருக்கலாம்"
இது போன்ற கொச்சைத்தனமான வசைபாடல்கள் நமக்கு
புதிதல்ல..... 33 ஆண்டுகளாக பழகிப்போன ஒன்று......
நமது மூத்த தோழர் ஒருவர் பல்லாண்டுகளுக்கு முன் கூறியது :
" நம்பூதிரி அணியினர் நமது தோழரை புகழ்ந்தால் அவர் சரியாக வேலைசெய்யவில்லை என்று அர்த்தம். நம்பூதிரி அணியினர்
எந்த தோழரை அதிகமாக திட்டுகிறார்களோ, அவர் நன்றாக செயல்படுகிறார் என்று அர்த்தம் "
காய்த்தமரம் தான் கல்லடி படும் என்பதால் இதையெல்லாம்
நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
நமது மாவட்ட மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு வெளிப்படையாக ஏகமனதாக நடைபெற்றதை மாநாட்டில் பங்கேற்ற அனைவரும்
அறிவர்.
" தனக்கு வேண்டிய CTO நண்பர் பாதிக்கப்பட்டால் சுழல் மாற்றல் வேண்டாம் என்பார்..... வேறு உறுப்பினர் என்றால் middle of the
academic year என்றால்கூட tenure மாற்றல் போட்டாலும்
பரவாயில்லை என்பார் " என்பதே BSNLEU மாவட்ட செயலரைப்
பற்றி அவரது சங்க உறுப்பினர்களிடையே உள்ள பரவலான கருத்து.
நிர்வாகத்திடம் மாற்றல்போட ஒப்புக்கொண்டுவிட்டு, பதவிக்கு
ஆபத்து வந்தவுடன் பல்டி அடித்தவருக்கு நம்மைப் பற்றி எழுத
தகுதி உண்டா என்பதையும்,
" சார் ! எந்த CSC யிலாவது Stationery சீட் பார்க்க ஒரு சீனியர் தந்தி ஊழியரை post செய்தது உண்டா ! ஏன் ஒரு நல்ல Handஐ
வேஸ்ட் செய்கிறீர்கள் ? " என்று நிர்வாகத்திடன் பேசிவிட்டு,
வெளியே வந்து ரகசியமாக அதை நான் பேசியதாக பிரச்சாரம்
செய்யும் இரட்டை நாக்கு கோயபல்ஸ் யார் என்பதையும் அவரது
மனசாட்சிக்கே விட்டுவிடுகிறோம்.
கடைசியாக நடந்த லோகல் கவுன்சில் கூட்டத்தில் BSNLEU
சங்கத்தை சேர்ந்த ஒரு கவுன்சில் உறுப்பினரிடம் ஒரு அதிகாரி மோசமாக நடந்து கொண்டார். ஊழியர் தரப்பு செயலர் அமைதியாக
இருந்தார்.ஆனால் ஊழியர் தரப்பு தலைவரான நம்மால் அதை
கேட்டுக் கொண்டு வாளா இருக்க முடியவில்லை. தலையிட்டு
பிரச்னை ஆக்கியவுடன், அந்த அதிகாரி மன்னிப்பு கேட்டார்.
கூட்டம் முடிந்து வெளியே வந்தவுடன் பல BSNLEU சங்க
கவுன்சில் உறுப்பினர்கள், நம்மிடம் கைகொடுத்து
" தோழர் L.S., சீனியர் தோழர் என்ற முறையிலே உங்களது தலையீடு சிறப்பாக இருந்தது, நன்றி "
என்று கூறியதே நமது செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு.
No comments:
Post a Comment