Monday, August 8, 2016

ஆகஸ்ட் - 9
ஆவேசம் கொண்ட அகிம்சை



1942 - ஆகஸ்ட் 8...
அகிம்சை நாயகன் காந்தி ஆவேசம் கொண்ட நாள்...
செய்... அல்லது செத்து மடி... என ஆவேசம் கொண்டு 
மும்பையில் முழங்கினார்... அண்ணல் காந்தி...
QUIT...INDIA ... வெள்ளையனே... வெளியேறு.. என்று 
வீறு கொண்டு கிளம்பினார்...
வெள்ளையன் வெளியேறும் வரை 
ஒத்துழையாமை இயக்கம் என சபதம் செய்தார்...
உறக்கம் கலைந்தது... உசுப்பேறியது...

ஆகஸ்ட் 9 நாடு முழுவதும் தலைவர்கள் கைது...
மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கிப் போராடினர்...
வெள்ளையனே... வெளியேறு... 
கோரிக்கை முழங்கியது... கோடிக்கைகள் முழங்கின...
குண்டுகளும் முழங்கின...
டெல்லியில் ஒரே இடத்தில் 76 பேர் இரையானார்கள்...
சிறை முழுக்க மக்கள் வெள்ளம்....
குற்றங்கள்  பதியப்படவில்லை... 
விசாரணைகள்  நடத்தப்படவில்லை...
தண்டனைகள் மட்டும் தாராளமாக கொடுக்கப்பட்டன...
அகிம்சையும் புரட்சி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது...
இதுவே இந்திய வரலாற்றில் 
ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்பட்டது...

அன்று... ஆகஸ்ட் 9 ... 1942...
அகிம்சைக்கும் அளவு  உண்டு...
பொறுமைக்கும் எல்லை உண்டு..
என்பதை உணர்த்தி..
வெள்ளையனே... வெளியேறு என்று 
வீதியில்  நின்று  தேசம் உரக்க கூவிய தினம்...

இன்று ஆகஸ்ட் 9 - 2016...
வெள்ளையன்... துரத்தப்பட்டானா?
வெள்ளைத்தனம் துடைக்கப்பட்டதா? 
உங்கள் சிந்தனைக்குரியது...

No comments:

Post a Comment