Wednesday, January 31, 2018

இரண்டாம் நாள் சத்தியாகிரக போராட்டம் Image may contain: 4 people, people standing and outdoor

Image may contain: 7 people, people sitting

AITUC மாநிலச் செயலர் தோழர் ஆறுமுகம் Ex-MLA   பேசுகிறார்
Image may contain: 2 people, people sitting, table and outdoor

Image may contain: 2 people, outdoor

Image may contain: 3 people, people sitting, table and outdoor

Image may contain: one or more people, people sitting, table and outdoor

Friday, January 26, 2018

  சிறக்கட்டும் ! தோழர் கோட்டியப்பனின் பணி ஓய்வுக் காலம் !
                  அறுபதிலும் இளமையாக தோற்றமளிக்கும் 
 வீரமிகு நெல்லை கோவையின்  மாண்பில்  சங்கமித்தது !
              

                                             
அன்றும் இன்றும் 
 

        எனது சமகால  இயக்கப் போராளி.  எனது அனைத்து தொழிற்சங்க  பணிகளிலும்  உறுதுணையாக இருந்தவர். 

1983 லிருந்து கோவை   மாவட்டச்  சங்கத்தின் முக்கியமான தூண்களில் ஒருவராக இருப்பவர்.

1980களில்   அவர்   பணியாற்றிய பொது மேலாளர் அலுவலகத்தில் எதிர் அணி ஆகப்பெரும்பான்மை. 
இவரும் மூத்த தோழருமான மாசாணன் மட்டுமே 
நமது அணி. பெரும் எதிர்ப்புகளை அஞ்சாநெஞ்சத்தோடு  எதிர்கொண்டு சங்கத்தை   வலுவாக  கட்டியவர்.   பொது மேலாளர்  அலுவலகத்திற்கு யார் வந்தாலும் முதலில் சந்திப்பது  தோழர்  கோட்டியப்பனாகத்தான் இருக்கும்.
எந்த பிரச்னையையும் தீர்க்கும் வல்லமை அவரிடம்
 இருந்தது. 

வாழ்க்கைத்துணையாக அஞ்சல் துறையில் பணியாற்றும் தோழியரை ஏற்று மனநிறைவான வாழ்க்கை வாழ்பவர்.

கர்ண பரம்பரை. கலை இலக்கிய பெருமன்றம், இந்தோ- சோவியத் நட்புறவுக் கழகம், இஸ்கப் என்று அனைத்திலும் தீவிர செயல்பாட்டாளர்.

தனது சொந்த செலவில் ருஷ்யா சென்று யுகப்புரட்சியின் நாயகர் லெனின் அவர்களின் பூத உடலை அருகில் சென்று  தொட்டுணர்ந்த அரிய வாய்ப்பை கிடைக்கப் பெற்றவர்.

அவரது பணி ஒய்வுக் காலம் அர்த்தமுள்ளதாய் அமையும் 
என்பதில் சந்தேகமில்லை.

 பணி ஓய்வுக்கு பி,ன்  நமது நிறுவனத்தில் மிகுந்த சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களின் 
நலன் காக்க செயலாற்ற உள்ளார்.

அவரது பணி நிறைவுக் காலம் சிறப்புடன் அமைய மாவட்டச் சங்கத்தின் தோழமைமிகு  வாழ்த்துக்கள்.

      

Friday, January 19, 2018

No automatic alt text available.
             மேட்டுப்பாளையம் கிளை மாநாடு !

கிளைத் தலைவர் தோழர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலர் தோழர் கே.நடராஜன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

கிளை மாநாட்டில் முன்வைக்கபட்ட செயல்பாட்டறிக்கையில்   மாவட்டச் செயலரைப் பற்றி பல அவதூறான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

அவற்றை மறுதலித்தும் மாவட்டச் செயலரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட அனைத்து பிரச்னைகளும் தீர்ப்பட்டுள்ளன என்றும் விளக்கினேன்.


மேலும் கோவை மாவட்டத்தில் NFTCL சங்கத்தை துவக்கியது தவறான செயல் என்றும் கண்டிக்கத்தது என்று எழுதப்பட்டு இருந்தது. 


NFTCL சங்கத்தின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் விருப்பப்படியே NFTCL  மாவட்டச் சங்கம் துவக்கப்பட்டது என்றும் அதற்கும் மேட்டுப்பாளையம்     கிளை மாநாட்டுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும் 
தெளிவாக விளக்கினேன். 

புதியதாக தேர்ந்தெடுக்கபட்ட கிளைச் சங்க நிர்வாகிகளுக்கு 
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
கிளைத் தலைவர் : தோழர் செல்வகுமார்
கிளைச் செயலர்  : தோழர் ரவி
கிளைப் பொருளர் : தோழர் லட்சுமணன்
புதியநிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

 கிளைச் சங்கத்தின் செயல்பாட்டறிக்கை தமிழ் மாநில வாட்ஸப்லில் உடனடியாக பதிவேற்றப்பட்டது  முறையற்ற 
செயலாகும்.
Image may contain: 2 people, people sitting

Image may contain: 8 people, indoor


Thursday, January 18, 2018


அனைத்து சங்க சத்தியாகிரக
போராட்ட விளக்கக் கூட்டம் !
20-1-18 சனி மாலை 4 மணி

மெயின் தொலைபேசி நிலையம், கோவை-18.
சிறப்புரை :
தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன்,
BSNLEU மாநிலச் செயலர்
தோழர். A. ராபர்ட்ஸ்,
மாநில துணைச் செயலர், NFTE-BSNL
தோழர். M தனுஷ்கோடி,
கோவை பகுதிச் செயலர் AIBSNLEA
தோழர். I மனோகரன்
CEC Member, SNEA


அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம் !

Friday, January 12, 2018

சிறப்பான  உடுமலை, பொள்ளாச்சி   கிளை மாநாடுகள் !

உடுமலை, பொள்ளாச்சி   கிளை மாநாடுகள் 11-1-2018 
அன்று சிறப்பாக நடைபெற்றது. 

தோழர்கள் சுப்பராயன், ராபர்ட்ஸ், செம்மல் அமுதம், ராமகிருஷ்ணன் பங்கேற்று இன்றைய போராட்ட சூழ்நிலை குறித்து உரையாற்றினர்.

உடுமலை கிளைத் தலைவராக தோழர் தங்கவேலு, செயலராக தோழர் ரமேஷ் குமார் பொருளராக தோழர் ஆறுமுகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

பொள்ளாச்சி  கிளைத் தலைவராக தோழர் கருப்பையா, செயலராக தோழர்  அலெக்ஸ், பொருளராக தோழர் அருணாசலம் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.
Wednesday, January 10, 201808/01/2018 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து சங்கக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

30/01/2018 அன்று அண்ணல் காந்தி மறைவு தினத்தில் அவரது  சமாதியில் அனைத்து சங்கத்தலைவர்கள் அஞ்சலி. 
அதன் பின் 5 நாட்கள் தொடர் சத்தியாக்கிரகம்.

       30/01/2018 முதல் நாடு முழுக்க அண்ணல் காந்தி வழியில் 
விதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்கம்....

28/02/2018 அன்று டெல்லி சஞ்சார் பவன் நோக்கி
 மாபெரும் முற்றுகைப் போராட்டம்.

ஒரு வார காலத்திற்குள் மந்திரியை சந்தித்து மனு கொடுத்தல்.

 அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும்
 சந்தித்து ஆதரவு கோருதல்.

செல் கோபுரம் துணை நிறுவன உருவாக்கம்  எதிர்த்து 
சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.


கோரிக்கைகள்
01/01/2017 முதல் BSNL  ஊழியர்களுக்கு 
15 சத ஊதிய மாற்றம் அமுல்படுத்துதல்…

இரண்டாவது ஊதிய மாற்ற இழப்புக்களை சரிசெய்தல்…

01/01/2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்தல்….

செல்கோபுரம் துணை நிறுவன 
உருவாக்கத்தை அரசு கைவிடுதல்…

ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆகக் குறைப்பதையோ விருப்ப ஓய்வுத்திட்டத்தை கட்டாயமாக அமுல்படுத்துதலையோ தவிர்த்தல்…


தோழர்களே….
நமது தேசத்தந்தை உயிர் நீத்த நாளில்…
நாம்  உயிர்த்தெழுவோம் ஒன்றாய்….
இறுதிக்கட்டப் போராட்டத்தை...
உறுதியாக… அமைதியாக நடத்திடுவோம்…
ஊழியர் நலன்… நிறுவன நலன்
இணைந்தே காத்திடுவோம்…

Monday, January 8, 2018

தோழர் குப்தா நினைவு தினம்

தோழர் ஞானையா பிறந்ததினம்
         Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 1 person, indoor
Image may contain: 2 people, people standing and indoor
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 8 people, people sitting and indoor
Image may contain: 4 people, people sitting, table and indoor
Image may contain: 4 people, people sitting

       Demo against the appointment of 

         CMD BSNL Tower Corporation 

         in spite of All unions opposition


Image may contain: 3 people, people standing
Image may contain: 10 people, people standing, crowd and outdoor
Image may contain: 3 people, people standing, crowd, wedding and outdoor
Image may contain: 8 people, people standing, crowd and outdoor
அகில இந்திய மாநாடு

நமது சங்கத்தின் அகில் இந்திய மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில்
எதிர்வரும் 2018 மார்ச் 14 முதல் 16 வாரை
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளைகளின் பொதுக்குழு நடத்தி சார்பாளர் தேர்வுகள் போன்ற பணிகளை விரைந்து முடித்திடல் வேண்டும்.

பயணத்துக்கான டிக்கெட் பதிவுகளை இதுவரை செய்யாதவர்கள் விரைந்து செய்ய வேண்டுகிறோம்.  

Thursday, January 4, 2018

அனைத்து சங்க ஆர்பாட்டம் 

டவர் கம்பெனி அமைப்பதை எதிர்த்து அனைத்து சங்கங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய போதும் மோடி அரசாங்கம் தானடித்த மூப்பாக புதிய டவர் கம்பெனிக்கு புதிய CMD ஆக திரு அமித் யாதவ், IAS அவர்களை நியமித்து உத்திரவு பிறப்பித்து உள்ளது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல உள்ளது.

அரசின் இந்த போக்கை கண்டித்து 
அனைத்து சங்க அறைகூவலின்படி
 8-1-18 அன்று ஆர்ப்பாட்டம் மெயின் தொலைபேசி நிலையம் முன் நடைபெறும். 
அனைவரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்று காலை 10.30 மணிக்கு தொழிற்சங்க அலுவலகத்தில் நமது ஒப்பற்ற தலைவர்கள், குப்தா அவர்களின் நினைவு தினமும் ஞானையா அவர்களின் பிறந்த தினமும் அனுஷ்டிக்கப்படும்.   

       

Tuesday, January 2, 2018

                 தவறான முன்னுதாரணம் !

மாவட்டச் செயலருடன் கலந்து பேசாமல் சில கிளைகளின் மாநாடு குறித்த அறிவிப்பு தமிழ் மாநில சங்க வாட்சப்பில் அக்கிளைக்கு சம்பந்தமில்லாத தோழரால் வெளியிடப்பட்டுள்ளது. தவறுகளை திருத்திக் கொள்வது நல்லது.