வரவேற்போம் 2016ஐ !
இன்னும் ஒரு சில மணிகளில் புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வரவேற்போம்.
2015ன் மோசமான நினைவுகள் நமது நினைவை விட்டு அகல
வேண்டும்.
2016ல் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள் தங்களது சக்தி வாய்ந்த வாக்குரிமையை முதிர்ச்சியுடன் பயன்படுத்தி நன்றாக ஆளத் தெரிந்த சரியான தலைமையை தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிபார்ப்போம்.
தே
ர்தல் நடைபெறவுள்ளது. அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்.
மேலும் மூன்றாண்டுகளுக்கு நமது சங்கம் அங்கீகாரத்துடன் பணியாற்ற
நாம் தேர்தல் பணியை காலதாமதமின்றி துவங்க வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம் பெறும் வகையில்
தற்போதைய அங்கீகார விதிகள் உள்ளபோதும், முதன்மைச் சங்கம்
51 சதம் பெற்று விட்டால், அந்த சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம்
கிடைக்கும் என்ற விதியும் உள்ளது. ஆகவே மெத்தனமாக இருக்கக்
கூடாது.
நமது சங்கம் முதன்மை அங்கீகாரச் சங்கமாக இருந்தால்தான்
கோரிக்கைகளில் சமரசமின்றி போராட முடியும் என்பதை
ஊழியர்களிடம் விளக்கிட வேண்டிய கடமை நம் அனைவருக்கும்
உள்ளது.
BSNLEU சங்கம் மட்டுமே அங்கீகாரத்தில் இருந்த காலத்தில்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் என்பதை ஏற்றுக் கொண்டதால்தான் நமக்கு அடுத்த ஊதிய மாற்றம் 1-1-2017 முதல்
அமலாக வேண்டும் நிலை உள்ளது. நமது சங்கம் அங்கீகாரத்தோடு இருந்தால்தான், 78.2 சத ஊதிய நிர்ணயம், அனைவருக்கு 30 சத ஊதிய
நிர்ணயப்பலன், போனஸ் போன்ற பிரச்னைகளில் BSNLEU சமரசம்
செய்து இழப்பை ஏற்படுத்தியது போல அல்லாமல் நமது கோரிக்கை
முழுமையாக பெற முடியும். அந்த பிரச்னைகள் இன்னமும்கூட
தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே.
மிகவும் அனுபவமும் ஆழ்ந்த அறிவாற்றலும் பெற்ற தோழர் குப்தா
அவர்களின் முயற்சியால் முதல் ஊதிய மாற்றத்தின்போது அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதால் நல்ல ஊதிய ஒப்பந்தம் சாத்தியமானது.
ஆனால் BSNLEU சங்கத்தின் மேலாதிக்க போக்கால் இரண்டாவது ஊதிய
ஒப்பந்தமும் NEPPயும் பல குறைபாடுகளோடு உருவானது.
மூன்றாவது ஊதிய ஒப்பந்தம் முழுமையானதாக அமைய நமது
சங்கத்திற்கு முதன்மை அங்கீகாரம் இன்றிமையாதது என்பதை
அனைத்து ஊழியர்க்கும் விளக்கி வெற்றி வாகை சூடுவதோடு
அனைத்து ஊழியர்களையும் ஒன்றினைத்து நல்ல ஊதிய ஒப்பந்தம்
உருவாக பாடுபடுவோம், முன்னேற்றம் காண்போம் என்று புத்தாண்டில்
உறுதி ஏற்போம்.
------- தோழர் CKM அவர்களின் முகநூலில் இருந்து.....
No comments:
Post a Comment