Thursday, January 21, 2016

             தலைக்கு  மேல் தொங்கும் கத்தி !!
                             (Damocles Sword )
    
                Image result for damocles sword


BSNLEU தனித்த அங்கீகாரத்தில் இருந்த 2006 ஆண்டு,நமது ஊழியர்களுக்கான நடத்தை விதிகளான   BSNL CDA Rules 2006 அறிமுகப்படுத்தப்பட்டது.

அதில் உள்ள  விதி 55ii (b), ஊழியர்களின்  தலைமேல் தொங்கும் கத்தி 
என்று அது அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் நமது  சங்கம் எதிர்த்து 
குரல் கொடுத்து வருகிறது.

55 வயதான ஊழியர்களின் செயல்பாடுகளை பரிசீலித்து அதன் 
அடிப்படையில் சிறப்பாக செயல்பட முடியாத ஊழியர்களை 
வீட்டுக்கு அனுப்பலாம் என்று அந்த விதி கூறுகிறது.

 தற்போது ,BSNL தலைமையகம் தன்னிச்சையாக ஒரு உத்திரவை பிறப்பித்து உள்ளது.   

இவ்வாண்டின் கடந்த மூன்று காலாண்டுகளில் எத்தனை ஊழியர்கள் 
அந்த மாதிரியான பரிசீலனைக்கு ஆட்படுத்தப்பட்டார்கள், எத்தனை 
ஊழியர்கள், தங்கள் வழக்கமான ஓய்வு  தேதிக்கு முன்னரே வீட்டுக்கு அனுப்பபட்டார்கள் (retired prematurely)  என்ற விவரத்தை 25-1-2016க்குள் அனுப்பவேண்டும் என்று தலமட்ட நிர்வாகத்திற்கு உத்திரவிட்டு
உள்ளது. 

இந்த உத்திரவின்படி அந்த மோசமான பரிசீலனைக்கு ஆட்படுத்தப்
-படுபவர்கள்  Non Executive ஊழியர்கள்  மற்றும்  JTOக்கள் மட்டுமே 
என்று பாரபட்சத்துடன் உள்ளது அந்த உத்திரவு.

தற்போது உள்ள ஊழியர்களில் ஆகப் பெரும்பாலானோர் 55 வயதை 
தாண்டியவ்ர்கள் என்பது யாவரும் அறிந்ததே '

  இந்த படுபாதகமான உத்திரவை  எதிர்க்காதது மட்டுமல்ல, ஊழியர்களின் பார்வைக்கு கூட எடுத்துச் செல்லவில்லை BSNLEU.

இந்த உத்திரவை ரத்து செய்து ஊழியர் நலன் காத்திட இனைந்த கரங்கள் சின்னத்திற்கு வாக்களிப்பீர்.





                       

   
 

    

No comments:

Post a Comment