Friday, February 17, 2017

                              மார்ச் 1 முதல் ........

Non-Executive   ஊழியர்க்கு 200 ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ள 
சிம் கார்டில் தனியார் அலைபேசிகளுக்கு ரூ.50 வரை  
01-03-2017  முதல் பேசலாம். 


 கோழிக்கோடு  மத்திய செயற்குழு முடிவுகள் !


(1) Organise  of Calling attention day for wage revision:- 

The circle/District unions will organise 

“Call attention day” on 16-03-2017 by holding 
Lunch hour demonstration insisting  expeditious notification of DPE guidelines for wage revision.

 (2) The National Executive has decided for 
formation of “National Forum of BSNL unions
and Associations” in place of “National Forum of 
BSNL workers” to broaden the Forum. Now 
Executive Associations can also join the forum. 

3) Internal committee for wage revision:- 

The NEC has decided to form an  internal wage 
committee consisting of following comrades besides 
President and General Secy –

i) Com. C.K. Mathivanan, 
(ii) Com. R.G. Dani C.S, Maharashtra,
(iii) Com. K. Natarajan, C.S, Tamilnadu 
(iv) Com. K.S. Seshadri.
(v) Com. Mahabir Singh, C.S, Jharkhand.

The nominees of alliance partners will be consulted 
before discussions with management committee. 

(4) Letter campaign:- All the employees will write
a letter to Prime Minister against recommendation of
 “Niti Ayog” for sale of BSNL and its transfer to 
States as well as against formation of Subsidiary
 Tower Company.  


Thursday, February 16, 2017

 கோழிக்கோடு  மத்திய செயற்குழு தீர்மானங்கள்
பிப்ரவரி 13 மற்றும் 14 தேதிகளில்  கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற NFTE மத்திய செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி  BSNL மற்றும் ITI நிறுவனங்களை விற்கத்துடிக்கும் மத்திய அரசின் மோசமான பொதுத்துறை விரோதக் கொள்கையை எதிர்த்து அனைத்து சங்கங்களுடன் இணைந்து                    கடுமையாகப் போராடுவது.
செல்கோபுரம் துணை நிறுவனம் அமைக்கும் முயற்சியை எதிர்த்துப் போராடுவது. போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரதம மந்திரிக்கு தபால்
அட்டை அனுப்பும் இயக்கம் நடத்துவது.

பொதுத்துறை அதிகாரிகளுக்கான நீதிபதி சதீஷ்சந்திராவின்                                3வது ஊதிய திருத்த அறிக்கையை மத்திய அரசு உடனே வெளியிட                     வேண்டும். பொதுத்துறை ஊழியர்களுக்கான சம்பளப்                     பேச்சுவார்த்தைக்கான வழிகாட்டுதலை DPE உடனடியாக வெளியிட               வேண்டும். BSNL நிறுவனம் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும்                            உள்ளடக்கி ஊதியப்  பேச்சுவார்த்தைக்குழுவை அமைக்க வேண்டும்.


8 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் போனசை மீட்டுத்தந்த                மத்திய சங்கத்திற்கு வாழ்த்துக்களை செயற்குழு உரித்தாக்குகிறது.                            2015-16ம் ஆண்டிற்கான போனசைப்பெறவும் முயற்சிகள்                         மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கான 78.2 IDA பிரச்சினையைத் தீர்த்து                      வைத்தமைக்காகவும், ஓய்வூதியப்பங்களிப்பான 60:40 முறையை நீக்கியமைக்காகவும் மத்திய செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
78.2 சத சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி பெற்றுத்தந்த                              மத்திய சங்கத்தை மத்திய செயற்குழு மனதார பாராட்டுகிறது.
TTA மற்றும் TM பதவிகளில் 15 சத இடங்கள் சேவை அடிப்படையில்                   நிரப்பப்பட வேண்டும்.
வணிகப்பகுதிகள் உருவாக்கத்தில் நிர்வாகம் சங்கங்களைக் கலந்து ஆலோசிக்காததை செயற்குழு கண்டிக்கிறது.
வங்கிகளில் உள்ளது போல் 4வது சனிக்கிழமை விடுமுறையாக                அறிவிக்கப்பட வேண்டும்.

Wednesday, February 15, 2017

பயன்மிகு கோழிக்கோடு தேசியக் குழுக் கூட்டம் 


உறுப்பினர் எண்ணிக்கையில் குறைவாக    இருந்தாலும் சங்கப்பற்று 
மிக அதிகம் !!     என்பதை  நிரூபிக்கும் வகையில்  மாநிலச் செயலர் 
தோழியர் லத்திகா அவர்களின் தலைமையிலான    கேரள மாநில 
சங்கத்தின் உற்சாகமிகு வரவேற்போடு நடந்த தேசிய செயற்குழு
சரியான தருணத்தில் மனந்திறந்த   விவாதங்களை நடத்தி     
பயனுள்ள  தீர்மானங்களையும் முடிவுகளையும்   நிறைவேற்றி
வருங்கால செயல்பாட்டிற்கு திட்டமிட்டுள்ளது. 

மாநாட்டை துவக்கிவைத்து  AITUC  அகில இந்திய   செயலர்  
தோழியர் அமர்ஜித் கௌர்  அவர்கள் ஆற்றிய உரை மிகுந்த 
எழுச்சிமிக்க உரையாக அமைந்தது. அனைத்து  பொதுத்துறை நிறுவனங்களை அழித்தொழிக்க மோடி சர்க்கார் மேற்கொள்ளும்
நடவடிக்கைகளையும் தெளிவாக விளக்கினார்.
SEWA BSNL சங்க பொதுச் செயலர் தோழர்  N.D. ராம்,  TEPU சங்க 
துணை பொதுச் செயலர் தோழர் விஜயகுமார்  ஆகியோரின் 
உரை சிறப்பானதாக அமைந்தது.        

ஊதிய மாற்றம் பற்றிய அணுகுமுறையை தீர்மானிக்க தோழர் 
இஸ்லாம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 
தோழர்கள்  மதிவாணன், நடராஜன் ஆகியோர் பங்கேற்க 
உள்ளனர்.     

No automatic alt text available.

Image may contain: 8 people, people standing

Image may contain: 2 people, people standing and outdoor
Image may contain: one or more people, people on stage and indoor
Image may contain: 3 people, people on stage and people standing




Image may contain: 2 people, people standing and indoor

Image may contain: 3 people, people on stage and people standing

Image may contain: 1 person


Image may contain: 1 person, standing

Image may contain: 5 people, people sitting and indoor

Image may contain: 7 people, people sitting

Image may contain: 8 people, people sitting

Image may contain: 4 people, people sitting and indoor


Image may contain: 6 people, people sitting and indoor

Image may contain: 5 people, people sitting





Tuesday, February 7, 2017

வாழ்த்தி விடை தருகிறோம் !



  கோவை SSA வின்  PGM ஆக சிறப்பாக செயலாற்றிய 
திரு சிவராஜ் அவர்கள்  மாற்றலில்   சென்னை STRக்கு  
 இன்று மாலை relieve ஆகும்போது நம்மை  அழைத்து 
விடைபெறுவதாக கூறி ஊழியர்கள் அளித்த ஒத்துழைப்பிற்கு 
நன்றி தெரிவிப்பதாக கூறினார். 

   அவர் பொறுப்பில் இருந்த காலத்தில் சங்கங்களோடு  சுமுக 
உறவை உறுதி செய்தார். பிரச்னைகளோடு  நாம் கோபாவேசத்தோடு
பேசினாலும் அதை பெரிதுபடுத்தாமல் நிதானமாகவும் பொறுமையோடும் பிரச்னைகளை விளக்கி நியாயமான தீர்வுகளை வழங்கிய அவரது அணுகுமுறையை பாராட்டி அவருக்கு நமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டோம்.
              

Friday, February 3, 2017

                 இலவச சிம் கார்டில் மாற்றம் 
ஊழியர்க்கு 200 ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ள சிம் கார்டில் 
தனியார் அலைபேசிகளுக்கு ரூ.50 வரை பேச மீண்டும் 
னுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முயற்சி எடுத்த அகில இந்திய சங்க தலைமைக்கு 
நன்றி.

Off net calls for Rs.50/- allowed from SIMs supplied to non executives : 

                                              Click here.