கோழிக்கோடு மத்திய செயற்குழு தீர்மானங்கள்
பிப்ரவரி 13 மற்றும் 14 தேதிகளில் கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற NFTE மத்திய செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி BSNL மற்றும் ITI நிறுவனங்களை விற்கத்துடிக்கும் மத்திய அரசின் மோசமான பொதுத்துறை விரோதக் கொள்கையை எதிர்த்து அனைத்து சங்கங்களுடன் இணைந்து கடுமையாகப் போராடுவது.
செல்கோபுரம் துணை நிறுவனம் அமைக்கும் முயற்சியை எதிர்த்துப் போராடுவது. போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரதம மந்திரிக்கு தபால்
அட்டை அனுப்பும் இயக்கம் நடத்துவது.
அட்டை அனுப்பும் இயக்கம் நடத்துவது.
பொதுத்துறை அதிகாரிகளுக்கான நீதிபதி சதீஷ்சந்திராவின் 3வது ஊதிய திருத்த அறிக்கையை மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும். பொதுத்துறை ஊழியர்களுக்கான சம்பளப் பேச்சுவார்த்தைக்கான வழிகாட்டுதலை DPE உடனடியாக வெளியிட வேண்டும். BSNL நிறுவனம் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி ஊதியப் பேச்சுவார்த்தைக்குழுவை அமைக்க வேண்டும்.
8 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் போனசை மீட்டுத்தந்த மத்திய சங்கத்திற்கு வாழ்த்துக்களை செயற்குழு உரித்தாக்குகிறது. 2015-16ம் ஆண்டிற்கான போனசைப்பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கான 78.2 IDA பிரச்சினையைத் தீர்த்து வைத்தமைக்காகவும், ஓய்வூதியப்பங்களிப்பான 60:40 முறையை நீக்கியமைக்காகவும் மத்திய செயற்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
78.2 சத சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி பெற்றுத்தந்த மத்திய சங்கத்தை மத்திய செயற்குழு மனதார பாராட்டுகிறது.
TTA மற்றும் TM பதவிகளில் 15 சத இடங்கள் சேவை அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
வணிகப்பகுதிகள் உருவாக்கத்தில் நிர்வாகம் சங்கங்களைக் கலந்து ஆலோசிக்காததை செயற்குழு கண்டிக்கிறது.
வங்கிகளில் உள்ளது போல் 4வது சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment