Saturday, March 24, 2018
Friday, March 23, 2018
இதமான விரிவடைந்த மாவட்டச் செயற்குழு !
தோழர் ராபர்ட்ஸ் தலைமையில் நடைபெற்றது. இன்று காலமான மேட்டுப்பாளையம் தோழியர் அங்காத்தாள் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்டச் செயலர் அற்புதமான அமிர்தரஸ் மாநாடு பற்றி நீண்டதொரு விளக்கவுரை ஆற்றினார்.அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற/ பெறும் தோழர்களும் தோழியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மாற்றல் கொள்கை பற்றி ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. மாற்றல் அமலாக்கம் பற்றி விரிவாக விவாதித்து முடிவெடுக்க கமிட்டி அமைக்கப்பட்டது.
மாவட்ட மாநாட்டை மேதினத்தன்று கோவையில் அண்ணாமலை அரங்கில் நடத்துவது என்ற மாவட்டச் செயலரின் அறிவிப்பை அவை ஏற்றுக் கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்து ஒவ்வொரு உறுப்பினரிடமும் குறைந்தபட்சம் ரூ.200/- நன்கொடையாக பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

புதிய மாவட்டப் பொருளர் தோழர் அலெக்ஸ் !
தோழர் செம்மலமுதம் மாவட்டப் பொருளர் பொறுப்பிலிருந்து விலகிய காரணத்தால் ஏற்பட்ட காலியிடத்திற்கு பொள்ளாச்சி கிளைச் செயலர் தோழர் பிரிட்டோ அலெக்ஸாண்டர் அவர்களின் பெயரை மாவட்டச் செயலர் முன்மொழிந்தார். அதை மாவட்டச் செயற்குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அவரை பாராட்டி மாவட்டச் செயலர் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

Thursday, March 22, 2018
கோவை மெயின் எக்ஸேஞ்ச் அலுவலகக் கிளைக் கூட்டம் !
இன்று கிளைத் தலைவர் தோழர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. அமிர்தரஸ் அகில இந்திய மாநாட்டு தீர்மானங்களை மாவட்டச் செயலர் விரிவாக விளக்கி உரையாற்றினார்.
அகில இந்திய சங்க தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் செம்மல் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இம்மாதம் பணி ஓய்வு பெறும் சங்க விசுவாசி தோழியர் மகேஸ்வரி அவர்களும் கௌரவிக்கப்பட்டார்

Tuesday, March 20, 2018
மாவட்ட மாநாட்டு அறிவிப்பு !
மே தினம் உழைக்கும் மக்களின் உன்னதமான தினம்.
அந்நாளில் கோவை மாவட்ட மாநாட்டை கோவையில் அண்ணாமலை அரங்கில் நடத்த உள்ளோம்.
மாநிலச் செயலர் தோழர் நடராஜன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுவார்.
அகில இந்திய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தோழர்கள்
C.K. மதிவாணன், A. காமராஜ், S. பழனியப்பன்,
A.செம்மலமுதம் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் நடைபெறும்.
மேநாள் சம்மேளனச் செயலர் தோழர் SSG மாநாட்டில்
பங்கேற்று பாராட்டுரை வழங்குவார்.

Monday, March 19, 2018
விரிவடைந்த மாவட்ட செயற்குழு !
நாள் : 23-3-18 வெள்ளி மாலை 3 மணி
இடம் : மெயின் தொலைபேசி நிலையம்.
ஆய்படுபொருள் :
: அகில இந்திய மாநாட்டு தீர்மானங்கள் விளக்கம்
: அகில இந்திய சங்க தேசிய செயற்குழுவின்
நிரந்தர அழைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட
தோழர் செம்மலமுதம் அவர்களுக்கு பாராட்டு
: சுழல் மாற்றல்
சிறப்புரை : தோழர் எஸ்.எஸ். கோபாலகிருஷ்ணன்
மேநாள் சம்மேளனச் செயலர்
: தோழர் பா. அருணாசலம்
மாவட்டச் செயலர் , AI BSNL PWA
அனைவரும் வருக !!

Sunday, March 18, 2018
புதிய தமிழகம் சார்ந்த நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !
தோழர் P.காமராஜ் சம்மேளனச் செயலராக
தோழர் P.காமராஜ் சம்மேளனச் செயலராக
திருச்சி மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் துணைத்தலைவராக
கோவை தோழர் A.செம்மலமுதம் சிறப்பு அழைப்பாளராகவும்,
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர்களுக்கு
கோவை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!!
தன்னெழுச்சிமிக்க மாநாடு !!
மாவட்டங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு சார்பாளர்களை மட்டும் பங்கேற்க அழைத்து வரவேண்டும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பங்கேற்க விருப்பம் தெரிவித்த ஊழியர்களின் எண்ணிக்கை 3000 ஆனதால் மாநாட்டு அரங்கின் திறந்த வெளியில் மிகப்பெரிய பந்தல் அமைத்து மாநாடு சிறப்பாக நடத்தப்பட்டது. சிறிய மாநிலமான பஞ்சாப் மிகச் சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது.

ஆச்சரியம் ! ஆனால் உண்மை !!
தமிழகம் தந்த தலைவர்கள் மதிவாணன், பட்டாபிராமன் ஆகியோர் தங்களது சிறந்த அனுபவங்கள் இயக்கத்திற்கும் ஊழியர்க்கும் பயன்படும் வகையில் தங்களது சொந்த விருப்பத்தை ஒதுக்கிவைத்து அகில இந்திய சங்க நிர்வாகிகள் பொறுப்பை ஏற்று செயலாற்ற வேண்டும் என்று மாநாட்டில் பங்கேற்ற பலரும் வற்புறுத்தினர்.
இதில் மிகப் பெரிய விஷயம், தோழர் பட்டாபி நிர்வாகியாக வரவேண்டும் என்று தோழர் மதி அவர்களும் தோழர் மதி அகில இந்திய நிர்வாகியாக பொறுப்பேற்றே ஆக வேண்டும் என்று தோழர் பட்டாபி வற்புறுத்தியதும்தான்.

அற்புதமான அமிதரஸ் மாநாடு !
BSNL ஊழியர்களின் மிக முக்கியமான காலகட்டத்தில் பாரம்பரியமிக்க NFTE-BSNL சங்கத்தின் 5 வது அகில இந்திய மாநாடு 14-3-18 முதல் 16-3-18 வரை வரலாற்று சிறப்புமிக்க பஞ்சாப் மாநில அமிர்தரஸ் நகரில் மிகவும் சீரோடும் சிறப்போடும் முடிந்துள்ளது.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலிருந்தும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சார்பாளர்கள் / பார்வையாளர்கள், அவர்களில் பலர் தங்களது மனைவி மக்களோடு ஆர்வத்துடன் பங்கேற்றது நமது சங்கம் மிகுந்த உயிர்ப்புடன் உள்ளது என்பதை எடுத்துக்காட்டி அனைவரையும் பரவசப்படுத்தியது.
ஊதிய மாற்றம், டவர் கம்பெனி, போனஸ், அடுத்த உறுப்பினர் சரிப்பார்ப்பு தேர்தல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளைப் பற்றியும் ஆழமான விவாதங்கள் நடத்தி வருங்கால செயல்பாடுகளை முடுக்கிவிடும் வகையில் முக்கியமான தீர்மானங்களோடு நிறைவடைந்தது.
நிர்வாகிகள் தேர்வு ஏகமனதாக நடந்தது முத்தாய்ப்பாய் அமைந்தது.
நமது சங்க வரலாற்றில் அமிர்தரஸ் மாநாடு ஒரு மிக முக்கியமான எழுச்சியுட்டும் மாநாடாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

Saturday, March 10, 2018
Subscribe to:
Posts (Atom)