எதிர்கொள்வோம் !
தொலைத் தொடர்பு துறையில் தனது ஏகபோகத்தை உருவாக்கும் நோக்கத்தில் வாய்ஸ் கால் இலவசம், ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி என்றெல்லாம் விளம்பரம்
செய்து வாடிக்கையாளர்களை கவர முனைந்துள்ளது முகேஷ் அம்பானியின்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.
அந்நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவானதே குறுக்கு
வழியில்தான். திருபானி அம்பானி இறந்தவுடன் அவரது இரு மகன்களிடையே
சொத்துத் தகராறு ஏற்பட்டது. சிதம்பரம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார். டெலிகாம் துறை அனில் அம்பானிக்கு ஒதுக்கப்பட்டது.ஆனால் முகேஷ் அம்பானியால் அந்த உடன்பாட்டை அமலாக்க விருப்பமில்லை. வளம் கொளிக்கும் டெலிகாம் துறையில் நுழைய திட்டமிட்டார்.
2010ல் 4 G ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டபோது அதில் நேரடியாக பங்கு கொள்ளாமல்
தனது பினாமி மூலம் ஏலம் எடுத்தார் முகேஷ் அம்பானி..அவரது பினாமி வேறு யாருமல்ல....ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சுக்ராம் சிறை செல்ல
காரணமாக இருந்த Himachal Futuristic Communications Limited (HFCL),மகேந்திர
நாகதாவின் மகன் அனந்த் நகதா. அந்த குடும்பமே ஊழலில் திளைத்துள்ளது.
அனந்த நகதா IBSPL என்ற கம்பெனியை துவக்கி, அது 4 G ஏலத்தில் பங்கேற்று
22 தொலைத்தொடர்பு மாநிலங்களில் ப்ராட்பேண்ட்க்கான லைசன்ஸ் பெற்றது.
சுருக்கமாக I NFOTEL எனும் அந்த நிறுவனம் யாரும் கேள்விப்படாத நிறுவனம்.
ரூ.2.5 கோடி மட்டுமே முதலீடும் 14 லட்சம் மட்டுமே ஆண்டு வருமானமும்
கொண்ட அந்த சிறு நிறுவனத்திற்கு 12,847 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அலைகற்றை ஒதுக்கப்பட்டது. அந்த நிறுவனம் கொடுத்த வங்கி உத்திரவாதம் (Bank guarantee) போர்ஜரி செய்யப்பட்டது. ஏலம் விடப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த கம்பெனியை விலைக்கு வாங்கி ரிலையன்ஸ் ஜியோ என்று பெயர் மாற்றினார் முகேஷ் அம்பானி. எல்லாம் ரகசிய ஏற்பாடுதான்.
இவ்வாறாக பொய்யிலே பிறந்த ரிலையன்ஸ் ஜியோ, பொய்யையே முதலீடாக்கி
ஏர்டெல், வோடாபோன், ஐடியா, உள்ளிட்ட தனியார் நிறுவனங்களையும் நமது
நிறுவனத்தையும் ஓரங்கட்டிவிட்டு தனது ஏகபோகத்தை நிலைநாட்ட இலவசம்
எனும் ஆயுதத்தை எடுத்துள்ளது. இதில் மிகவும் கேவலமானது என்னவென்றால்,
நமது நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவு பிரதமர் மோடியின் பெயரையும் போட்டோவையும் தனது மோசடி விளம்பரத்திற்கு கூச்சநாச்சமின்றி பயன்படுத்துவதாகும்.அதை மத்திய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது
அதன் உள்நோக்கத்தை தோலுரித்து காட்டுகிறது.
இந்த மோசமான சூழலில் நமது CMD திரு.அனுபம் ஸ்ரீவத்சா அவர்கள்,
" இந்த சவாலை எதிர்கொள்வோம் ! நமது கட்டணங்களை சமப சந்தர்பத்திற்கு
ஏற்றவாறு மாற்றியமைப்போம் ! சிறந்த 4ஜீ சேவையை உறுதி செய்வோம் ! "
என்று உறுதியுடன் செயலாற்றுவது நம்பிக்கை அளிக்கிறது
No comments:
Post a Comment