Saturday, December 31, 2016
Friday, December 16, 2016
Thursday, December 15, 2016
வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற
அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் !
---------------------------------------------------------------------------
உண்மை நிலையும் உள்ளக் குமுறலும் !
இன்று காலை வேலைநிறுத்தம் உண்டா இல்லையா என்றறிய ஒரு தோழியர் நம்மிடம் தொடர்பு கொண்டார்.
கண்டிப்பாக உண்டு என்று சொன்னவுடன், அவர் தொடர்ந்தார்:
" சார், நமது சங்கக் கூட்டம் என்றுதான் 28-`11-16 அன்று துடியலூரில் நடந்த கூட்டத்திற்கு ஆவலுடன் சென்றேன். உங்களைப் பற்றி
குற்றப் பத்திரிக்கை வாசித்தனர். அப்போதுதான் நாம் ஏதோ தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ ?என்று தோன்றியது "
Monday, December 12, 2016
Saturday, December 10, 2016
Jun 06, 2011, 10.02 PM | Source: CNBC-TV18 Maran should step down: NFTE-BSNL's
CK Mathivanan The National Federation of Telecom Employees today staged a protest
against Dayanidhi Maran.
They demanded that Maran should step down for misusing 323 BSNL lines.

இந்த போராட்டத்தின் தளபதிக்கு எங்கள் வாழ்த்துகள்....
முகநூலில் தோழர் மாலி....
BSNL சட்டவிரோத இணைப்புகள் வழக்கு:
மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் (பிஎஎஸ்என்எல்) தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்பட ஏழு பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
Thursday, December 8, 2016
தனி டவர் கம்பெனி அமைக்கும் முயற்சியை முறியடிப்போம் !
டிசம்பர்-15 அனைத்து சங்கங்களின் ஒன்றுபட்ட வேலைநிறுத்தம் .
கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த நமது நிறுவனம்,
தற்போது லாபத்தை நோக்கி பீடுநடைபோடுகிறது. ஆனால் மத்திய
அரசோ நமது நிறுவனத்தை மீண்டும் வலுவிழக்க வைக்கும்
மிகவும் பாதகமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே நமது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 65,000 செல்
டவர்கள் உள்ளன. அவை அனைத்தும் நமது ஊழியர்களாலும் அதிகாரிகளாலும் பராமரிக்கப்படுகின்றன. தற்போது மேலும்
20,000 டவர்களை நிர்மாணிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகின்றது. ஆக 85000 டவர்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி.
நமது கடும் எதிர்ப்பையும் மீறி இந்த டவர்களை பிரித்து தனி
கம்பெனி அமைக்க 6-8-2015 அன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை
மேற்கொண்டு இறுதி கட்ட நிலைக்கு வந்துள்ளது.
இந்த முடிவு நமது நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும்
2 லட்சத்திற்கும் மேற்பட்ட அதன் ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளின் எதிர்காலத்திற்கும் பெரும் கேடு
விளைவிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை,
தனித்தனியாக BSNL நிறுவனத்தின் சேவைகளை கூறுபோட்டு
பிரித்து விட்டால் அதன் வளர்ச்சி என்பது பெரிதும் சுணங்கிப் போகும்.ஏற்கனவே broadband பணிக்கென BBNL எனும் நிறுவனம் அமைக்கப்பட்டதும் அதே குறுகிய நோக்கத்துடன்தான்.
தொலைத் தொடர்புத் துறையில் புதியதாக தடம் பதித்துள்ள அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு செல் டவர்
இல்லாத குறையை போக்கவும், அந்த நிறுவனம் புதியதாக செல் டவர்களை நிர்மாணிக்க ஆகும் செலவை குறைக்கவும்தான்
BSNL நிறுவனதிற்கு சொந்தமான செல் டவர்களை பிரித்து புதிய
கம்பெனி அமைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது
இது நடைமுறைக்கு வந்துவிட்டால், இனி அந்த செல் டவர்களை பயன்படுத்த BSNL நிறுவனமும் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிவரும் என்பது கொடுமையானது. இதனால் கூடுதல் செலவு ஆகும். BSNLன் நிதியாதாரமும் பாதிக்கப்படும்.
ஆகவேதான் நாம் அனைவரும் நமது நிறுவனத்தை காக்கும்
டிசம்பர்-15, 2016 அன்று நடைபெறவுள்ள அனைத்து சங்க வேலைநிறுத்த
போராட்டத்தில் தவறாது பங்கேற்க அறைகூவி அழைக்கிறோம் !

Sunday, December 4, 2016
BSNL நிறுவனத்தைத் துண்டாடத்துடிக்கும்
மக்கள் விரோத மத்திய அரசின் முடிவை எதிர்த்து
செல் கோபுரங்களை நம்மை விட்டுச் செல்ல விடமாட்டோம்
என்ற உறுதியுடன் அனைத்து சங்கங்களும் பங்கு கொள்ளும்
டிசம்பர் 15 ஒரு நாள் அகில இந்திய
வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்...
ஓங்கி ஒலிக்கட்டும் உரிமைக்குரல்கள்...
ஓங்கி உயரட்டும் உரிமைக்கரங்கள்...
Saturday, December 3, 2016
Friday, December 2, 2016
மெய்சிலிர்த்து போனேன் !
--குறிச்சி கிளை கூட்டத்தில் தோழர் ராபர்ட்ஸ்.
தோழர் சுப்பராயன் அவர்களின் மனைவி காலமானபோது நடந்த
ஒரு நிகழ்வு என்னை மெய்சிலிர்க்க வைத்தது..
துக்கம் விசாரிக்க DGM அவரது வீட்டுக்கு சென்றபோது மனைவியை இழந்த தனது துக்கத்தை அடக்கிக் கொண்டு, அவரிடம் முக்கியமான இரண்டு ஊழியர்களின் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி உள்ளார் தோழர் சுப்பராயன்.
அடுத்தநாள் மற்றொரு அதிகாரியை சந்தித்தபோது அவர் இதை
என்னிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்தபோது நான் மெய்சிலிர்த்து போனேன்.
மாநில சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தின் போதும் தனக்கு
கிடைத்த சிறு இடைவெளியில் CGM அவர்களிடம் கோவையில்
ஒரு ஊழியருக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய வேண்டும்
என்று வலியுறுத்தினார்.
இப்படி ஊழியர் நலன் பற்றி சிந்தித்து செயலாற்றும் தோழர்
சுப்பராயன் அவர்களை ஒரு சிலர் வேண்டுமென்றே அவதூறு பேசுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
குறிச்சி கிளை சிறப்புக் கூட்டம் !
குறிச்சி கிளைக் கூட்டம் கிளைத் தலைவர் தோழர் ஆர். நடராஜன் அவர்கள் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலர் தோழர் சுப்பராயன்,
மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். டிசம்பர் 15 வேலைநிறுத்தம், திருச்சி ஊதிய மாற்ற கருத்தரங்க தீர்மானங்கள், நமது அமைப்பு நிலை விளக்கப்பட்டன. கூட்டம் முடிந்தவுடன் தோழர்கள் மாவட்டச் செயலரிடம் போனஸ் நன்கொடை வழங்கினர்.

Subscribe to:
Posts (Atom)