மெய்சிலிர்த்து போனேன் !
--குறிச்சி கிளை கூட்டத்தில் தோழர் ராபர்ட்ஸ்.
தோழர் சுப்பராயன் அவர்களின் மனைவி காலமானபோது நடந்த
ஒரு நிகழ்வு என்னை மெய்சிலிர்க்க வைத்தது..
துக்கம் விசாரிக்க DGM அவரது வீட்டுக்கு சென்றபோது மனைவியை இழந்த தனது துக்கத்தை அடக்கிக் கொண்டு, அவரிடம் முக்கியமான இரண்டு ஊழியர்களின் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி உள்ளார் தோழர் சுப்பராயன்.
அடுத்தநாள் மற்றொரு அதிகாரியை சந்தித்தபோது அவர் இதை
என்னிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்தபோது நான் மெய்சிலிர்த்து போனேன்.
மாநில சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தின் போதும் தனக்கு
கிடைத்த சிறு இடைவெளியில் CGM அவர்களிடம் கோவையில்
ஒரு ஊழியருக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய வேண்டும்
என்று வலியுறுத்தினார்.
இப்படி ஊழியர் நலன் பற்றி சிந்தித்து செயலாற்றும் தோழர்
சுப்பராயன் அவர்களை ஒரு சிலர் வேண்டுமென்றே அவதூறு பேசுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
No comments:
Post a Comment