Thursday, December 8, 2016

    தனி டவர் கம்பெனி அமைக்கும் முயற்சியை முறியடிப்போம் !
  டிசம்பர்-15 அனைத்து சங்கங்களின் ஒன்றுபட்ட  வேலைநிறுத்தம் .

கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த நமது நிறுவனம்,
தற்போது லாபத்தை நோக்கி பீடுநடைபோடுகிறது. ஆனால் மத்திய
அரசோ நமது நிறுவனத்தை மீண்டும் வலுவிழக்க    வைக்கும்
மிகவும் பாதகமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே  நமது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 65,000 செல் 
டவர்கள் உள்ளன. அவை அனைத்தும் நமது ஊழியர்களாலும் அதிகாரிகளாலும் பராமரிக்கப்படுகின்றன.  தற்போது மேலும் 
20,000 டவர்களை நிர்மாணிக்கும்   பணி மும்மரமாக நடைபெற்று வருகின்றது. ஆக 85000 டவர்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி.

 நமது கடும் எதிர்ப்பையும் மீறி    இந்த டவர்களை பிரித்து தனி 
கம்பெனி அமைக்க 6-8-2015 அன்று நடந்த  மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை 
மேற்கொண்டு இறுதி கட்ட நிலைக்கு வந்துள்ளது.

இந்த முடிவு நமது  நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும்
 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அதன் ஊழியர்கள் மற்றும் 
அதிகாரிகளின் எதிர்காலத்திற்கும் பெரும் கேடு 
விளைவிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை,

தனித்தனியாக BSNL நிறுவனத்தின் சேவைகளை கூறுபோட்டு 
பிரித்து விட்டால் அதன் வளர்ச்சி என்பது பெரிதும் சுணங்கிப் போகும்.ஏற்கனவே broadband   பணிக்கென BBNL எனும் நிறுவனம் அமைக்கப்பட்டதும் அதே குறுகிய  நோக்கத்துடன்தான்.

தொலைத் தொடர்புத் துறையில் புதியதாக தடம் பதித்துள்ள அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு செல் டவர் 
இல்லாத குறையை போக்கவும், அந்த நிறுவனம் புதியதாக செல் டவர்களை நிர்மாணிக்க ஆகும் செலவை குறைக்கவும்தான் 
BSNL நிறுவனதிற்கு சொந்தமான செல் டவர்களை பிரித்து புதிய 
கம்பெனி அமைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது

இது நடைமுறைக்கு வந்துவிட்டால், இனி அந்த செல் டவர்களை பயன்படுத்த  BSNL    நிறுவனமும்  அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிவரும் என்பது கொடுமையானது. இதனால் கூடுதல் செலவு ஆகும். BSNLன்  நிதியாதாரமும் பாதிக்கப்படும்.

ஆகவேதான்   நாம் அனைவரும் நமது நிறுவனத்தை காக்கும்
டிசம்பர்-15, 2016 அன்று நடைபெறவுள்ள அனைத்து சங்க வேலைநிறுத்த
போராட்டத்தில்  தவறாது   பங்கேற்க அறைகூவி அழைக்கிறோம் !

No comments:

Post a Comment