நன்றி ! நெஞ்சுநிறை நன்றி !!
கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் ஏற்கப்பட்ட
அடுத்த நொடியே முதல் வாழ்த்து எமது அருமைத் தலைவர்
தோழர் C.K.மதிவாணன் அவர்களிடமிருந்து செல்பேசியில் வந்தது.
மாநாட்டிற்கு வந்த தலைவர்கள் தோழர்கள் கோ.ஜெயராமன்,
SSG, பட்டாபிராமன், காமராஜ், அசோகராஜன் ஈரோடு குமார்,
என அனைவரும் வாழ்த்தினர்.
தோழர் மாலி, மாநிலத் தலைவர் தோழர் லட்சம், மாநில துணைச் செயலர் வேலூர் சென்னகேசவன் ,மாநில துணைத் தலைவர் சேலம் ராஜா, ஜோதி சிவம், தோழர்கள் நெல்லை பாபநாசம், மாநில அமைப்புச் செயலர் சண்முகம், தூத்துக்குடி மாவட்டச்.செயலர் பாலக்கண்ணன்,
மதுரை மாவட்டச்.செயலர் சிவகுருநாதன்,
மாநில துணைத் தலைவர் தோழியர் பரிமளம்,
திருச்சி மாவட்டச் செயலர் பழனியப்பன், மாநில துணைச் செயலர் தஞ்சை நடராஜன், எனதருமை திருச்சி மாவட்டத் தோழர்கள்,
மாநில துணைத் தலைவர் தோழர் பாலசுப்ரமணியம் தூத்துக்குடி , தஞ்சை மாவட்ட சங்க தோழர்கள்,
நூற்றுக்கும் மேற்பட்ட கோவை மாவட்ட தோழர்கள் தங்கள் வாழ்த்துக்களை SMS, Facebook, தொலைபேசி மூலம்
தெரிவித்து வருகின்றனர்.
அனைவருக்கும் புதிய மாவட்டச் சங்க நிர்வாகிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் !
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை மாவட்ட மாநாடு : புதிய நிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட தலைவர் தோழர் .A.ராபர்ட்ஸ்
மாவட்டச் செயலர் தோழர். எல் சுப்பராயன்
மாவட்ட பொருளர் தோழர் A.செம்மல்லமுதம்
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரையும்
மனதார தஞ்சை nfte மாவட்ட சங்கம்
பாராட்டுகின்றது.
------------------------------------------------------------------------------------------------------------
தமிழக NFTE தோழர்களின் அபிலாஷைக்கு கிடைத்த வெற்றி !
தமிழகத்தின் ஒட்டு மொத்த NFTE தோழர்களின் அடிமனதில் இருந்த மன விருப்பத்தை,
சேலம் செயற்குழுவில் எடுத்துரைத்தோம் !
அதை விடாப்பிடியாய் கோவையில் அமலாக்கியதன் இன்ப அதிர்வுகளின் வெளிப்பாடுதான் காரைக்குடி கவியின் புதுக்கவிதை !
அன்புத் தோழர் மாரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி !
---------------------------------------------------------------------------------
காரைக்குடி வலைதளத்திலிருந்து.......
ஒன்று படு... உயர்படு.
ஓட... ஓட... விரட்டு...
ஒற்றுமையால் மிரட்டு...
தோழர்களே....
NFTE கோவை மாவட்ட மாநாடு...
சிறுவாணியின் இனிமை போல்
சிறப்புடன் நடந்தேறியுள்ளது...
ஒரு மனதாக..
ஏக மனதாக...
முழு மனதாக..
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
புதிய நிர்வாகிகளுக்கு
நமது மனம் நிறை வாழ்த்துக்கள்...
மாவட்டத்தலைவர் அருமைத்தோழர். இராபர்ட்
மாவட்டச்செயலர். அன்புத்தோழர்.சுப்பராயன்
மாவட்டப்பொருளர்.அருமைத்தோழர்.செம்மல் அமுதம்
ஆகியோரின் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள்...
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..
ஒன்றாம் வகுப்பு பாடமல்ல...
என்றும் மனிதருக்கு மங்காத பாடம்...