Friday, May 22, 2015


  PGM  அவர்களுடன் புதிய நிர்வாகிகள் அறிமுகம் ! 

கோவை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாவட்டச் சங்க 
நிர்வாகிகளை PGM அவர்களுக்கு அறிமுகம் செய்யும் சந்திப்பு  
20-5-15 அன்று மதியம் நடைபெற்றது.
DGM (A),  DGM (U) AGM (OP & Admn) ஆகியோர் உடனிருந்தனர். 
  
புதிய மாவட்ட சங்க நிர்வாகிகளை வரவேற்ற PGM அவர்கள், தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். 

புதிய மாவட்டச் செயலர் தோழர் L.S, மாவட்ட மாநாட்டில் நமது மாநிலச் செயலர் தோழர் பட்டாபிராமன் , கோவை  SSAவின் வளர்ச்சித்  திட்டங்கள் பற்றி விவரித்ததை எடுத்துக் கூறி, அனைத்து சங்க கூட்டத்தை கூட்டி விவாதித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினார். 

பொள்ளாச்சி CSC இடத்தை Axix Bankக்கு வாடகைக்கு விடுவதை 
கடுமையாக எதிர்த்தும்,  வேலைநிறுத்த காலத்தில் சில தலமட்ட 
அதிகாரிகள் அலுவலகத்திற்கு வராமலேயே தங்கள் வருகையை பதிவு செய்ததோடு, தங்கள் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருகைப் பதிவு  செய்ததை சுட்டிக்காட்டி, அந்த வருகைபதிவுகளை ரத்து செய்ய 
வலியுறுத்தியும் கடிதங்கள் கொடுத்தும் வலியுறுத்தி உள்ளோம்.

No comments:

Post a Comment