Tuesday, November 29, 2016

                                        மாநிலச் செயலரின் விளக்கம்           

      சென்ற மாவட்ட மாநாட்டில் மீண்டும் மாவட்டச் செயலராக      வேண்டும்   என்று பல  சாகஸங்கள்    செய்தார் ராமகிருஷ்ணன்.
 அது  சாத்தியமாகாது    போனதால், வேறு வழியின்றி  தோழர் L.S     பெயரை முன்மொழிந்தார்.       அதிலிருந்து மாவட்ட சங்கத்தை சீர்குலைப்பதையே தனது ஒரே வேலையாக செய்து வருகிறார்.  
அந்த நோக்கத்தோடு ஒரு கூட்டத்தை 28.11.16 அன்று கூட்டினார்.        

முறையற்ற  அந்த கூட்டத்தில்       மாநிலச் செயலர் பங்கேற்றது  
 தவறு என்ற  தோழர்களின்    கருத்தை தொலைபேசி மூலம் தெரிவித்தோம்.  

ராமகிருஷ்ணன் கூட்டிய கூட்டம் முறையற்றது என்று விளக்கவும் 
தவறான முடிவுகள் எடுக்காமல் தடுக்கவே அங்கு சென்றதாகவும் மாநிலச் செயலர்  கூறினார். 

Saturday, November 26, 2016

                                                    வாழ்த்துக்கள் 

தஞ்சை மாவட்ட சங்க புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட
மாவட்டத் தலைவர் தோழர் பன்னீர்செல்வம்,   மாவட்டச் செயலர் 
தோழர் கிள்ளிவழவன், பொருளர் தோழர் சேகர் உள்ளிட்ட புதிய 
மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்.
                                        வேண்டாம்,  பொய் பிரச்சாரம்  !      

 கடந்த ஓராண்டில் நமது உறுப்பினர் பலர் மாற்று சங்கத்திற்கு சென்று விட்டதாக  சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.   

அவர்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை  : 

பட்டியலை வெளியிடுங்கள். அவர்கள் யாருடைய ஆதரவாளர்களாக இருந்தனர்?  அவர்களை அனுப்பி வைத்தது யார் என்பதை பகிரங்கமாக விவாதிக்க நாம் தயார் .

Wednesday, November 23, 2016

நவம்பர் 24- சம்மேளன தினம் !

     சாதனைகள் கண்ட NFPTE சங்கம் உருவான நவம்பர் 
24 அன்று நமது சங்கத்தை மேலும் வலிமைமிக்கதாக்க

 உழைத்திட உறுதி ஏற்போம் !




Tuesday, November 22, 2016


கருத்தரங்கம் முடிந்து திரும்பும்போது தோழர்களுடன்...... 

கருத்தரங்கம் முடிந்து திரும்பும்போது,நம்முடன் வந்த
 தோழர் சேஷு ராஜன் அவர்களின் 60வது பிறந்த நாளை 
கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.












                    பயன்மிகு ஊதிய மாற்ற கருத்தரங்கம் !































சிறப்பான ஏற்பாடுகளை செய்த திருச்சி தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்
                                        Image result for வாய்மையே வெல்லும்

 பதவியின்மை படுத்தும் பாடு !

சென்ற மாவட்ட மாநாட்டில் தான் மாவட்ட செயலராக ஆக முடியாத ஆத்திரத்தில் முன்னாள் மாவட்டச் செயலர்  ராமகிருஷ்ணனும்
 அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து மாவட்டச் செயலரை 
குறை குறுவதையே தங்கள்   ஒரே தொழிற்சங்க   பணியாக 
செய்து வருகின்றனர்.

  ஒற்றுமையுடன் சிறப்பாக நடந்த மாநில மாநாட்டில் மாவட்டச் செயலரை குறை கூறி ஒரு நோட்டீஸை வெளியிட்டு
 அசிங்கப்பட்டனர்.

இன்று திருச்சியில் நடந்த கருத்தரங்கத்தில்  மாவட்டச் செயலரை மட்டுமல்லாது மாவட்டத் தலைவரையும்  குறை கூறி ஒரு 
நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.

மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ், சமீபத்தில் போடப்பட்ட சுழல் மாற்றலின்போது,  தனக்கு Immunity வேண்டாம் என்று உறுதிபடக் கூறினார்.

ஆனால், அவரது சேவை மாவட்ட சங்கத்திற்கு தேவை என்பதால் மாவட்டச் செயலரும்   மாவட்ட பொருளரும் அவருக்கு தெரியாமல்  Immunity கேட்டு நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தோம். அந்த அடிப்படையில் அவருக்கு மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
Immunity  என்ற சலுகை சங்கத்திற்காக    உழைக்கும் முன்னணி நிர்வாகிகளுக்கு வழங்கவேண்டும் என்று நமது சங்கத் தலைமை 
போராடி பெற்ற உரிமை. அதை பயன்படுத்துவது ஒன்றும் குற்றச் செயல்
அல்ல. இதையெல்லாம் தெரிந்திருந்தும் தோழர் ராபர்ட்ஸ் அவர்களை  தரக்குறைவான முறையில் குறை கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தனது சொந்த நலனுக்காக அந்த சலுகையை பயன்படுத்தியவர், 
தற்போது அதை  குறைகூறுவது வேடிக்கையாக உள்ளது.

 அதுமட்டுமல்ல, குறை கூறி நோட்டீஸ் எழுதியவர், தான் மட்டும் கவுன்சிலிங்க் வருவதற்கு முன்பே தனக்கு வேண்டிய இடத்திற்கு 
மாற்றல் கேட்டுப்போனதை நாம் குறையாக எழுதப்போவதில்லை..
அதை அவர் தனது சாமார்த்தியம் என்று பெருமைபட்டுக்கொள்ளட்டும்.....

மாவட்ட சங்கத்தின் செயல்பாடு பற்றி  மாவட்ட செயற்குழுவில் விவாதிக்க நாம் என்றும் தயார்.

 மாவட்ட சங்கம் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுநாள் வரை
 மாவட்ட சங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அனைத்து பிரச்னைகளும்
 தீர்க்கப் பட்டுள்ளது என்று நாம் பெருமையோடு கூறமுடியும்.
மாவட்ட மாநாடு நடக்கும்போது அதன் பட்டியல் வெளியிடப்படும்.

எழுத்தர் கேடர், போன் மெக்கானிக் கேடர் சுழல் மாற்றல் என்பது ராமகிருஷ்ணன் மாவட்டச்  செயலராக இருந்த காலத்தில்தான் துவங்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.

அதே நடைமுறை  தற்போதும் அமலாக்கப்படுகிறது. 

தேவைப்பட்டால் அனைத்து உத்திரவுகளின் நகல்களையும்
 வெளியிட மாவட்டச் சங்கம் தயாராக உள்ளது.

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால்
பொன் குடம்என்பது போல உள்ளது அவர்களின் குற்றச்சாட்டு.

மாவட்ட சங்கத்தை குறை கூறி நோட்டீஸ் வெளியிட்டுள்ளவர்,
 தமிழ் மாநில CGM  அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எழுதி
 இருப்பது  என்ன தெரியுமா ?

" NFTE-BSNL மாவட்டச் சங்கம் சொல்வதையெல்லாம் நிர்வாகம் செய்கிறது.கோவை மாவட்ட நிர்வாகமே, NFTE சங்கத்தின் ஒரு கிளைபோல  செயல்படுகிறது. "

   இது  அவரை அறியாமலேயே அவர் மாவட்ட சங்கத்திற்கு
 கொடுத்த பாராட்டு பத்திரம் அன்றோ !

மாவட்டச் செயலரையும், தலைவரையும் தங்களுக்கு தேவையென்றால்
நீங்கள்தான் எங்களது வழிகாட்டி, ஆசான், think tank, சங்கத்திற்காக இரவு பகல் பாராது  உழைப்பவர்கள்  என்று புகழ்வார்கள்,  தற்போது தேவையில்லை என்பதால் இகழ்கிறார்கள் என்பதையும்    நாங்கள் அறிந்தே உள்ளோம். 

                                 மன நிறைவை தந்த தீர்வு !

 சமீபத்தில் நமது சங்கம் சாராத ஒரு ஊழியரின் பிரச்னை நமது கவனத்திற்கு வந்தது. அதில் நியாயம் இருந்ததால், அந்த பிரச்னையை தீர்க்க  நாம் முழு முயற்சி மேற்கொண்டோம். பிரச்னை சுமுகமாக முடிந்தவுடன் அந்த ஊழியர் நமக்கு அனுப்பிய   SMS :

Sir, thank you so much for the efforts you have taken to transfer me. I will never forget
 this  help in my life. My whole family is happy.... thank you sir...

இதுவே நமது செயல்பாட்டிற்கு கிடைத்த வெகுமதியாக கருதி மனநிறைவு கொள்கிறோம்.

 வேண்டுமென்றே ஒரு சிலர்  மாவட்டச் சங்கத்தை அவதூறு செய்வதை புறந்தள்ளி, " என் கடன் பணி செய்து செய்து கிடப்பதே " என்று எங்களது பணி வழக்கம் போல தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது சங்கத்தை சீர்குலைக்க முயலும் ஒரு சிலரின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு மாவட்ட சங்கத்திற்கு  அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Friday, November 18, 2016




சோவியத்தில்  பொதுவுடமைப் புரட்சி தோன்றியது 1917ல்.. 
இந்தியாவில் தொழிற்சங்கம் தோன்றியது 1920ல்...
தூத்துக்குடியில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தது 1908ல்..

புரட்சி வெடிக்கும்  முன்னே....
தொழிற்சங்கம்  பிறக்கும் முன்னே...
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய 
மாபெரும் தலைவன்தான் வ உ சிதம்பரம் பிள்ளை...

தூத்துக்குடியில் அன்று இருந்த கோரல் நூற்பாலையில் 
தொழிலாளர்கள் கோரமாக நடத்தப்பட்டார்கள்...
உரிய கூலி இல்லை... ஓய்வு இல்லை... விடுமுறை இல்லை...
கொடுமை கண்ட  வ உ சி கொதித்தெழுந்தார்...

வ உ சியும்... சுப்பிரமணிய சிவாவும்... 
தொழிலாளர்களை உணர்வேற்றினர்...
1908 பிப்ரவரி 27ம் நாள் 3 கோரிக்கைகளை முன்வைத்து 
வேலை நிறுத்தத்தை வ உ சி துவக்கினார்...
கூலி உயர்வு... வாரத்தில் ஒரு நாள் விடுமுறை... விடுமுறை நாட்கள் 
இவைதான் தொழிலாளர் அன்று முன் வைத்த கோரிக்கைகள்...

ஆங்கிலேய அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாண்டது..
ஆனாலும் அஞ்சாமல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்...
9 நாள் வேலை நிறுத்தத்திற்குப் பின்...
பஞ்சாலை நிர்வாகம் பணிந்தது...
வ உ சி அனைத்து தொழிலாளர்கள் முன்னிலையில் 
நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்...
கூலி உயர்வைக் கொடுக்கவும்...
வேலை நேரத்தைக் குறைக்கவும்...
வார விடுமுறை அளிக்கவும்...
பஞ்சாலை நிர்வாகம் ஒத்துக்கொண்டது...
வேலை நிறுத்தம்  மாபெரும் வெற்றி பெற்றது...

இன்று வ உ சி இல்லை...
ஆனாலும் இந்திய தேசத்தில் இன்றும்...
கூலி உயர்வுக்காகவும்... சலுகைகளுக்காகவும்...
தொழிலாளர்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்...

இந்திய தேச மானம் காக்க.. 
கடலிலே சுதேசிக் கப்பல் விடுவேன்....
இயலாவிட்டால் கடலிலே விழுந்து உயிரை விடுவேன்..
என்று சூளுரைத்துக் கப்பலோட்டிய தமிழன்...
தொழிற்சங்கம் இல்லாத காலத்திலும் 
தொழிலாளரை ஒன்று திரட்டிப் போராடி வென்ற தலைவன்... 
செக்கிழுத்த செம்மல் வ உ சி நினைவைப் போற்றுவோம்...