Tuesday, November 22, 2016

                                        Image result for வாய்மையே வெல்லும்

 பதவியின்மை படுத்தும் பாடு !

சென்ற மாவட்ட மாநாட்டில் தான் மாவட்ட செயலராக ஆக முடியாத ஆத்திரத்தில் முன்னாள் மாவட்டச் செயலர்  ராமகிருஷ்ணனும்
 அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து மாவட்டச் செயலரை 
குறை குறுவதையே தங்கள்   ஒரே தொழிற்சங்க   பணியாக 
செய்து வருகின்றனர்.

  ஒற்றுமையுடன் சிறப்பாக நடந்த மாநில மாநாட்டில் மாவட்டச் செயலரை குறை கூறி ஒரு நோட்டீஸை வெளியிட்டு
 அசிங்கப்பட்டனர்.

இன்று திருச்சியில் நடந்த கருத்தரங்கத்தில்  மாவட்டச் செயலரை மட்டுமல்லாது மாவட்டத் தலைவரையும்  குறை கூறி ஒரு 
நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.

மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ், சமீபத்தில் போடப்பட்ட சுழல் மாற்றலின்போது,  தனக்கு Immunity வேண்டாம் என்று உறுதிபடக் கூறினார்.

ஆனால், அவரது சேவை மாவட்ட சங்கத்திற்கு தேவை என்பதால் மாவட்டச் செயலரும்   மாவட்ட பொருளரும் அவருக்கு தெரியாமல்  Immunity கேட்டு நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தோம். அந்த அடிப்படையில் அவருக்கு மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
Immunity  என்ற சலுகை சங்கத்திற்காக    உழைக்கும் முன்னணி நிர்வாகிகளுக்கு வழங்கவேண்டும் என்று நமது சங்கத் தலைமை 
போராடி பெற்ற உரிமை. அதை பயன்படுத்துவது ஒன்றும் குற்றச் செயல்
அல்ல. இதையெல்லாம் தெரிந்திருந்தும் தோழர் ராபர்ட்ஸ் அவர்களை  தரக்குறைவான முறையில் குறை கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தனது சொந்த நலனுக்காக அந்த சலுகையை பயன்படுத்தியவர், 
தற்போது அதை  குறைகூறுவது வேடிக்கையாக உள்ளது.

 அதுமட்டுமல்ல, குறை கூறி நோட்டீஸ் எழுதியவர், தான் மட்டும் கவுன்சிலிங்க் வருவதற்கு முன்பே தனக்கு வேண்டிய இடத்திற்கு 
மாற்றல் கேட்டுப்போனதை நாம் குறையாக எழுதப்போவதில்லை..
அதை அவர் தனது சாமார்த்தியம் என்று பெருமைபட்டுக்கொள்ளட்டும்.....

மாவட்ட சங்கத்தின் செயல்பாடு பற்றி  மாவட்ட செயற்குழுவில் விவாதிக்க நாம் என்றும் தயார்.

 மாவட்ட சங்கம் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுநாள் வரை
 மாவட்ட சங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அனைத்து பிரச்னைகளும்
 தீர்க்கப் பட்டுள்ளது என்று நாம் பெருமையோடு கூறமுடியும்.
மாவட்ட மாநாடு நடக்கும்போது அதன் பட்டியல் வெளியிடப்படும்.

எழுத்தர் கேடர், போன் மெக்கானிக் கேடர் சுழல் மாற்றல் என்பது ராமகிருஷ்ணன் மாவட்டச்  செயலராக இருந்த காலத்தில்தான் துவங்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.

அதே நடைமுறை  தற்போதும் அமலாக்கப்படுகிறது. 

தேவைப்பட்டால் அனைத்து உத்திரவுகளின் நகல்களையும்
 வெளியிட மாவட்டச் சங்கம் தயாராக உள்ளது.

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால்
பொன் குடம்என்பது போல உள்ளது அவர்களின் குற்றச்சாட்டு.

மாவட்ட சங்கத்தை குறை கூறி நோட்டீஸ் வெளியிட்டுள்ளவர்,
 தமிழ் மாநில CGM  அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எழுதி
 இருப்பது  என்ன தெரியுமா ?

" NFTE-BSNL மாவட்டச் சங்கம் சொல்வதையெல்லாம் நிர்வாகம் செய்கிறது.கோவை மாவட்ட நிர்வாகமே, NFTE சங்கத்தின் ஒரு கிளைபோல  செயல்படுகிறது. "

   இது  அவரை அறியாமலேயே அவர் மாவட்ட சங்கத்திற்கு
 கொடுத்த பாராட்டு பத்திரம் அன்றோ !

மாவட்டச் செயலரையும், தலைவரையும் தங்களுக்கு தேவையென்றால்
நீங்கள்தான் எங்களது வழிகாட்டி, ஆசான், think tank, சங்கத்திற்காக இரவு பகல் பாராது  உழைப்பவர்கள்  என்று புகழ்வார்கள்,  தற்போது தேவையில்லை என்பதால் இகழ்கிறார்கள் என்பதையும்    நாங்கள் அறிந்தே உள்ளோம். 

                                 மன நிறைவை தந்த தீர்வு !

 சமீபத்தில் நமது சங்கம் சாராத ஒரு ஊழியரின் பிரச்னை நமது கவனத்திற்கு வந்தது. அதில் நியாயம் இருந்ததால், அந்த பிரச்னையை தீர்க்க  நாம் முழு முயற்சி மேற்கொண்டோம். பிரச்னை சுமுகமாக முடிந்தவுடன் அந்த ஊழியர் நமக்கு அனுப்பிய   SMS :

Sir, thank you so much for the efforts you have taken to transfer me. I will never forget
 this  help in my life. My whole family is happy.... thank you sir...

இதுவே நமது செயல்பாட்டிற்கு கிடைத்த வெகுமதியாக கருதி மனநிறைவு கொள்கிறோம்.

 வேண்டுமென்றே ஒரு சிலர்  மாவட்டச் சங்கத்தை அவதூறு செய்வதை புறந்தள்ளி, " என் கடன் பணி செய்து செய்து கிடப்பதே " என்று எங்களது பணி வழக்கம் போல தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது சங்கத்தை சீர்குலைக்க முயலும் ஒரு சிலரின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு மாவட்ட சங்கத்திற்கு  அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment