Thursday, September 10, 2015

        வெற்றிகரமான மாவட்டச் செயற்குழு  !


மாவட்ட மாநாட்டிற்கு பிறகு பீளமேட்டில் இன்று (10-9-15) மாவட்டத் தலைவர் தோழர் ராபர்ட்ஸ் தலைமையில் கூடிய மாவட்டச் செயற்குழு வெற்றிகரமாக அமைந்தது.

        மாவட்ட முழுவதிலுமிருந்து கிளைச்செயலர்கள்,  மாவட்டச் சங்க நிர்வாகிகள் முன்னணித் தோழர்கள் பங்கேற்றனர். அனைத்து கிளைச் சங்க நிர்வாகிகளும் தங்கள் கருத்தை முன் வைத்தனர்.

  கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

1. திருப்பூரில் சிறப்பாக மேளா நடத்தும் திருப்பூர் தோழர்களை செயற்குழு     மனதார பாராட்டுகிறது. இது போன்ற மேளாக்களை மற்ற கிளைகளும்
   நற்செயலை  பின்பற்றி நடத்திட 

 வழிகாட்டுகிறது.

2.மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடக்     கோரி  நடந்த செப்டம்பர் 2 வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும்  செயற்குழு தனது  பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தது.
3. செப்டம்பர் 16 தர்ணாவிற்கு ஊழியர்களை அதிகமான திரட்டுவது என்றும்

4.   கேபிள் பணி குறித்து நிர்வாகம் விரைவான முடிவெடுக்க வேண்டும் என்றும் அந்த பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த  ஊழியர்க்கு தல மட்ட அதிகாரிமுன் ஒப்புக்கொண்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும், PF ( பிராவிடெண்ட் நிதி) ESI நிதி முறையாக பிடித்தம் செய்கிறதா என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்றும் நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

5. சிறப்பான ஏற்பாடுகள் செய்த பீளமேடு கிளையை பாராட்டுகிறோம். 



No comments:

Post a Comment