பெங்களூருவில் சொஸைட்டி கிளை துவக்க விழா !
நமது கூட்டணி வாக்குறுதி அளித்தபடி பெங்களூருவில் சொஸைட்டி
கிளை 31-8-15 அன்று துவக்கப்பட்டது.
கிளை துவக்க விழாவிற்கு அனைத்து சங்க தலைவர்களும் அழைக்கப் பட்டனர். NFTE-BSNL தலைவர்கள், சென்னை மாநிலச் செயலர் தோழர்
C.K. மதிவாணன், சம்மேளனச் செயலர்கள் தோழர்கள் சேஷாத்திரி,
S.S. கோபால கிருஷ்ணன், கர்னாடக மாநில சங்க தலைவர் கிருஷ்ண மோகன், கிருஷ்ணா ரெட்டி, FNTO சங்கத் தலைவர் தோழர் லிங்க மூர்த்தி, SEWA BSNL அகில இந்திய தலைவர் சகோ. P.N. பெருமாள்,
TEPU சங்க சென்னை மாநிலச் செயலர் தோழர் விஜயகுமார் , BSNLEU சங்கத்தைச் சார்ந்த முரளி, கிருஷ்ணன் உள்ளீட்ட அனைத்து சங்கத் தலைவர்களும் பங்கேற்ற ஒற்றுமை நிகழ்ச்சியாக அந்த விழா அமைந்தது பாராட்டத் தக்கது.
அவ்விழாவில் பேசிய வெற்றிக் கூட்டணியின் தளகர்த்தர்களில்
ஒருவரான தோழர் மதிவாணன், மோடி அரசின் உத்திரவின் காரணமாக சொஸைட்டி சாதாரண கடனுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருந்தாலும், உறுப்பினர்களின் நலன் கருதி, சொஸைட்டி இயக்குனர்கள் குழு, வட்டியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் வெள்ளானூர் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் திட்டத்தை அமலாக்குவதில் கூடுதல் வேகம் தேவை என்று வலியுறுத்தினார்.
நிறைவுரை ஆற்றிய கூட்டுறவு சங்கத் தலைவர் தோழர் எஸ்.வீரராகவன் அவர்கள் , தோழர் மதிவாணன் அவர்களின் இரண்டு கோரிக்கைகளையும் அமலாக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டது என்று பலத்த கரகோஷத்திற்கிடையே அறிவித்தார்.

No comments:
Post a Comment