Saturday, April 2, 2016

தேர்தல் நேரம் இது!




BSNLEU பொது செயலர் அபிமன்யு கடந்த ஆறு வருடங்களாக மௌனம் காத்துவிட்டு நிர்வாகம் இலாகா நஷ்டத்தில் இருப்பதால் போனஸ் கொடுக்க முடியாது என்று கூறியபோது வாய்மூடி இருந்தார். 

பொதுத்துறை நிறுவனங்களை கட்டுபடுத்தும் Department of 
Public Enterprises(DPE)  2011 இலாபம் என்பது போனசோடு தொடர்பு உடையது அல்ல என்று கூறியும் போனஸ் 
கொடுக்க மனமில்லாமல் நிர்வாகத்தோடு 2013 வரை
 சுவர் எழுப்பி நின்றவர் தோழர் அபிமன்யு என்பது 
யாவரும் அறிந்ததே!

 NFTE –BSNL ஆறாவது சரிபார்ப்பு தேர்தலில் அங்கீகாரம் பெற்றவுடன்BSNLEU சங்கத்துடன் போட்ட பார்முலாவை மறுபரிசீலனை செய்ய நிர்வாகம் ஒத்துக்க்கொண்டது. 
அதற்கு தலை ஆட்டுவதை தவிர வேறு வழியில்லை 
என்பதை அபிமன்யு உணர்ந்து கொண்டார்.

இதனை எப்படி செயல்படுத்துவது என்பதை தீர்மானிக்க
ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் நமது சங்கத்தின் சார்பாக தோழர் இஸ்லாம் பங்கேற்றார். அதே போல BSNLEU சார்பாக அபிமன்யு பங்கேற்றார். 
அபிமன்யுவின் தொடர்ச்சியான ஒத்துழையாமை 
காரணமாக கமிட்டி பலமுறை கூடவில்லை. இதன் 
காரணமாக போனஸ் பற்றி கடந்த இரண்டு வருடங்களாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

ஆதலால், NFTE –BSNL சங்கம் குறைந்தபட்சம் Adhoc Bonus கொடுக்கப்பட வேண்டும் என நிர்வாகத்தை வலியுறுத்தியது. வேறு வழியின்றி CMD Adhoc Bonus  தர ஒத்துக் கொண்டார். ஆனால் எவ்வளவு தொகை என்பதில் திரும்பவும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டது.

 30-03-16 அன்று கமிட்டி இதை பற்றி விவாதிக்க கூடியது. எப்போதும் போல அபிமன்யு இந்த கூட்டத்திற்கு வராமல் புறகணித்தார். நாடு பூராவும் ஒட்டு சேகரிப்பதுதான் முதல் கடமை எனக் கூறி நழுவினார். ஆனால் நாம் விடவில்லை. நிர்வாகம் குறைந்தபட்ச தொகையை போனஸ் பார்முலா முடிவாகும்வரை ஏற்று கொள்ள வேண்டினர். 

எதுவாக இருப்பினும் போனஸ் கிடையாது இன்ற நிலையில் மாற்றம் வந்திருப்பது பெரிய விஷயமாக நாம்  பார்த்ததும். லாபம் வந்தால் மட்டுமே  போனஸ் என்ற நிலையில் மாற்றம் வந்திருப்பது நல்ல அறிகுறியாக நாம் பார்த்தோம். துரதிஷ்ட்வசமாக நாம் இன்னும் லாபம் என்ற நிலையை அடையவில்லை. அபிமன்யு  Rs.3500க்குறைந்து ஏற்க கூடாது என்று கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். 

ஆனால், கடந்த ஆறு வருடமாக இதற்காக ஏதாவது போராட்டத்தினை அபிமன்யு முன்  எடுத்திருக்கிறாரா? நாம் வாங்கும் சம்பளமே மிகவும் அதிகம்.... போனஸ் கேட்பது அநியாயம்...... என்று நாடெங்கும் பிரசாரம் செய்து வந்தார்.


NFTE   LOW  QUOTATION என்று சொல்லும் BSNLEU 
போனஸ் விவகாரத்தில்  NO  QUOTATION...ஆன  பரிதாபம் என்ன?


ஆறு வருடம் தூங்கி இருந்து விட்டு இன்று போனஸ் பெற வெற்று ஆர்ப்பாட்டம் செய்யும் சங்கத்திற்கு  அனைத்து ஊழியர்களும் 10-05-16 தேர்தலில் சரியான பதில் அளிப்பார்கள்
.

கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இதே புரட்சிபுலி அபிமன்யு போனஸ் இனி யாரும் பெறவே முடியாது என்று கூறியது அனைவருக்கும் இன்னும் ஞாபகத்தில்தான் உள்ளது.


பாடம் புகட்டுவோம் ஊழியர் விரோத BSNLEU சங்கத்திற்கு!
தேர்ந்தெடுப்போம் NFTE-BSNL சங்கத்தை

No comments:

Post a Comment