ஊதிய மாற்றம் பெற்றிட NFTEன் முன்முயற்சிகள்
1-1-2017 முதல் நாம் ஊதிய மாற்றம் பெற்றிட வேண்டும். அதனை விவாதிக்க ஒரு அதிகாரிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்
ப டவில்லை. பொதுத் ஊழியர்களின் ஊதிய மாற்றம் பற்றி வழிகாட்டும் Department of Public Enterprises (DPE) இன்னும் வழிக்காட்டுதல்களை வெளியிடாததால் இன்னும் முறையான பேச்சுவார்த்தைகள் துவங்காமல் உள்ளன. ஆகவே, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு DPE வழிகாடுதல்களை வழங்கிட உத்திரவிட வேண்டும் என்று நமது சங்கத் தலைமையால் கோரப்பட்டுள்ளது.
BSNL CMDயுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது அவர் DOTக்கு கீழ்க்கண்ட விவரங்களை தெரிவித்து உள்ளதாக கூறி உள்ளார்.
" BSNL தற்போது operational profit என்ற நிதி நிலையை எட்டி உள்ளது. ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களாக தொடர்ந்து இருந்தால் ஊதியக் குழு 1-1-2016 முதல் அமலாகி இருக்கும். ஆகவே, அவர்களுக்கு 1-1-2017 முதல் 15% ஊதிய உயர்வு தருவது நியாயமானது, அதனை அமலாக்கிட தயாராக உள்ளோம் "
உடனடியாக பேச்சுவார்த்தைகளை முறையாக துவக்க அனுமதி வழங்கிட கேட்டும், 15 சத ஊதிய மாற்றத்தை வழங்கிட அனுமதி வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டும், DOT செயலருக்கு கீழ்க்கண்ட கடிதத்தை நமது சங்கம் எழுதி உள்ளது.
Issue guidelines with15% fitment wage revision of BSNL Non Executive staff and avoid industrial unrest. Union seeks intervention of Secretary of DOT vide letter No. TF-9/8PRC Dt.17.05.2017 making it clear that denial of 15% fitment as promised by BSNL administration will generate resentment amongst the employees. Click Here | |
No comments:
Post a Comment