Thursday, May 4, 2017



Image may contain: 1 person, beard

வானவில்
வரைந்த ஓவியம்
பூமி கண்டெடுத்த
புதையல்
அறிவு-தனை
அளக்கும் அளவுகோல்
பொருளின் பொருள் உரைத்த
பொருளற்றவர்களின் பொருள்
உபரி மதிப்பை
கண்டுபிடித்த உன்னத மதிப்பு
வேர்வையே உயிர்ப்பின்
வேர் என்றறிவித்த மேதை
உழைப்பின் மதிப்பை
கண்டுபிடித்த உழைப்பு
வறுமை விரட்டியபோதும்
வறுமையை விரட்டும் வழிசொன்னவர்
நாடற்றவர் என அறிவிக்கப்பட்டாலும்
எல்லா நாடும் நாடியவர்
நிலப்பரப்பின் வரப்புகளை
தகர்த்த கலப்பை
கண்ணீரில் வாழ்கிறார் கடவுள்
என்று சொன்ன மனிதன்
இழப்பதற்கு ஏதுமற்றவர்களின்
மூலதனப் பெருங்குவியல்
அடிமைச் சங்கிலிகளை
உடைத்தெறியும் சுத்தியல்
ஆளும் வர்க்கத்தின்
வேரறுக்கும் அரிவாள்
இதயத்தில் பாதியை ஜென்னிக்கும்
மூளையில் பாதியை ஏங்கெல்சுக்கும் தந்தவர்
சமத்துவ பொன்னுலகை
சாத்தியமாக்கும் சாவி
பரிணாமத்தின் உச்சம் மனிதம்
மனிதத்தின் உச்சம் மார்க்ஸ்

No comments:

Post a Comment