ஊழியர்களை / அதிகாரிகளை முட்டாளாக்க நினைக்கும் அபிமன்யூ !
அனைத்து சங்கங்கள்/ அசோசியேஷன்கள் என்று கூறிக் கொண்டு
ஊதிய மாற்ற கோரிக்கை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்த அறிவிப்பை சில சங்கங்கள் வெளியிட்டுள்ளன.
NFTE BSNL, AIBSNLEA, SEWA BSNL, TEPU OTA BSNL உள்ளிட்ட பல
சங்கங்களின் பொதுச் செயலர்கள் அந்த அறிவிப்பில் கையொப்பம்
இடவில்லை. ஆகவே அது எப்படி அனைத்து சங்க அறிவிப்பு ஆகும் ?
அவரது நோக்கம் ஊதிய மாற்ற கோரிக்கையை வெல்வது அல்ல.
அதற்கு மாறாக நான் தான் போராட்ட நடத்தினேன் என்ற
விளம்பரமே !
விளம்பரமே !
தோழர் அபிமன்யூ அவசர அவசமாகக் கூட்டிய அனைத்து சங்க கூட்டத்திற்கு தலைமை ஏற்ற AIBSNLEA சங்கத்தின் பொதுச்
செயலர் தோழர் பிரகலாத ராய் அவர்கள்கூட அந்த வேலைநிறுத்த அறிவிப்பில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
செயலர் தோழர் பிரகலாத ராய் அவர்கள்கூட அந்த வேலைநிறுத்த அறிவிப்பில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
கூட்டத்தின் தலைவரைக்கூட வேலைநிறுத்த அறிவிப்பில் கையொப்பமிட வைக்க முடியாத அபிமன்யூவால் எப்படி அனைத்து சங்க ஒற்றுமையை கட்ட முடியும்?
அனைத்து சங்கத்திற்கும் கன்வீனராக தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட அபிமன்யூ, அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் BSNLEU பொதுச் செயலர் என்று கையொப்பமிட்டது ஏன் ? தனது சங்கத்திற்கு பேட்டி தரவேண்டும் என்று கூறியது ஏன் ? கனரக தொழில் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கூட தனியாருக்கு ஆதரவாக முந்தைய அரசு செயல்பட்டதால்தான் நமது நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கடிக்கபட்டது என்பதை விளக்கவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் 2004 முதல் 2013 வரை BSNLEUதான் ஒரே அங்கீகாரச் சங்கமாக இருந்தது.
மற்ற அனைத்து சங்கங்களும் ஆதரவளித்த போதும் அச்சங்கம் தனது கடமையை ஆற்றவில்லை.
மற்ற அனைத்து சங்கங்களும் ஆதரவளித்த போதும் அச்சங்கம் தனது கடமையை ஆற்றவில்லை.
தனக்கு தேவை என்றால் ஒற்றுமை என்பதும் தேவை முடிந்தவுடன் கழற்றி விடுவதும் அவர்களது வாடிக்கை.
உதாரணத்திற்கு சில :
2004ல் FNTO சங்கத்தை கவர்ந்து இழுத்தவர்கள் இரண்டு தேர்தலில் வென்ற பிறகு கழற்றிவிட்டார்கள். அதுமட்டுமல்ல அவர்களது சின்னத்தையும் அபகரித்தனர்.
SEWA BSNL சங்கத்தின் ஆதரவால் அங்கீகாரம் பெற்றவர்கள், இன்றுவரை அச்சங்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
இது போன்ற செயல்பாடுகளால்தான் அனைத்து சங்கங்களும் அபிமன்யூவை கன்வீனராக ஏற்க மறுக்கின்றனர். ஓற்றுமை உருவாகவில்லை. ஆகவே தனது மேலாண்மைப் போக்கை கைவிட்டு தான்தான் ஒரே கனவீனர் என்ற நிலைபாட்டிலிருந்து விலகி அனைத்து சங்கங்களுக்கும் உரிய மரியாதை அளித்து
மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும்.
மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும்.
ஊதிய மாற்றம் என்ற கடுமையான கோரிக்கையை வெல்ல ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் போதாது.
ஒரு உணர்வுபூர்வமாக ஒன்றுபட்ட, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தின்
மூலமே ஊதிய மாற்றம் சாத்தியம்.
அந்த திசைவழியில் செயலாற்றுவோம்.!
No comments:
Post a Comment