Monday, October 12, 2015


                             செயலகக் கூட்ட முடிவுகள் !

                       
                       
                         


கோவை நகரில் உத்தேசிக்கப்பட்ட மாற்றல் கொள்கை அமலாக்கம் குறித்து ஆழமான விவாதம் 4 மணி நேரம் நடந்தது

        இரண்டு அங்கீகாரச் சங்கங்களும் ஏற்றுக் கொண்ட நிலைபாட்டை நிர்வாகம் பாரபட்சமின்றி முழுமையாக அமலாக்க வேண்டும் ;

ஒரு சங்கத்தின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து ஒரு பகுதியை மட்டும் அமலாக்கிவிட்டு மற்ற பகுதிகளை அமலாக்காமல் தள்ளிப் போடுவது  சரியல்ல என்று ஏகமனதாக ஏற்கப்பட்டது. இல்லையென்றால் அமலாக்கிய ஒரு பகுதி மாற்றல்களை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி போராடுவது,

  சங்கத்தின்  ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் 
ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்கு நிர்வாகம் துணை போகக் கூடாது என்று வலியுறுத்துவது என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவேண்டும், பிரதி மாதம்
 ஏழாம் தேதிக்குள் முறையாக சம்பளம்  பட்டுவாடா செய்யப்பட வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அமலாக்க வலியுறுத்திடவும் முடிவெடுக்கப்பட்டது..

  போராட்ட தேதியை மாவட்ட செயலரும் தலைவரும் கலந்துபேசி முடிவு செய்ய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.



        .





No comments:

Post a Comment