நியாயத்தை நிலை நாட்ட,
போராட்டப் பாதையில் நாம் !
மாவட்டத் தலைவர் தோழர் A.ராபர்ட்ஸ்,
மாவட்டச் செயலர் தோழர் L.சுப்பராயன்,
துணைத் தலைவர் தோழர் S.கோட்டியப்பன்
ஆகியோர் இன்று துணைப் பொது மேலாளர்
(நிர்வாகம்) திரு P.ரத்தினசாமி அவர்களை
சந்தித்து போராட்ட அறிவிக்கையை அளித்தனர்.
* தீர்க்கப்படாத கோரிக்கைகளை
நிறைவேற்றக் கோரியும் ,
* நிர்வாகம் மாற்றல் பிரச்னையில்
பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்றும் ,
* ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் உடனடியாக
வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று வலியுறுத்தியும்
3-11-2015 முதல்
மாவட்டத் தலைவர் தோழர் A. ராபர்ட்ஸ்,
மாவட்டச் செயலர் தோழர் L. சுப்பராயன்
ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்வர்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயம் வெல்ல, அமைப்பை காத்திட,
அனைவரும் ஒத்துழைப்பீர் !!
No comments:
Post a Comment