தோழர் ஸ்ரீதர் ! மகிழ்ச்சியுடன் அமையட்டும் !
உமது பணி ஓய்வுக் காலம் !!
கோவை மாவட்ட சங்கத்தின் சிறந்த செயல் வீரர்களில் ஒருவராக திகழும் தோழர் எஸ்.ஸ்ரீதர், பெரிய நாயக்கன்பாளையம் கிளைச் செயலர் ,இம்மாதம் பணி ஓய்வு பெறுகிறார்.
கற்றோர் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பழமொழி. அதுபோல
தோழர் ஸ்ரீதர் சென்ற இடமெல்லாம் நமது சங்கத்தின் கோட்டையாக
மாறும் என்பது அவரது சிறப்பு.
ஏப்ரல், 1978ல் கொடுமுடியில் பணியில் சேர்ந்த நாள் முதல் இலாகா பணியிலும் சங்கப் பணியிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியவர் தோழர் ஸ்ரீதர். பணியில் சேர்ந்த ஒரு சில மாதங்களீலேயே செப்டம்பர் 1978ல் கொடுமுடி கிளைச் செயலராக
கே.ஜீ போஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டு வென்றவர்.
1981ல் தாராபுரத்திற்கு மாற்றலில் சென்றவுடன் அங்கும் கிளைச் செயலராக தேர்ந்தெடுக்கபட்டார்.
இடையில் ஈரோடு மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்று செயலாற்றினார்.
தோழர் மாலி அவர்களின் வளர்ப்பான ஸ்ரீதர், தலைவர்கள்
முத்தியாலு, மதிவாணன் ஆகியோரால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.
கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன் பாளையத்திற்கு
1993 ல் மாற்றலில் வந்த நாள் முதல் இன்று வரை 23 ஆண்டுகளாக தொடர்ந்து கிளைச் செயலராக பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார்.வேறு சங்கத்தின் கிளையே உருவாகாத அளவு அமைந்தது அவரது சீரிய செயல்பாடு .
கோவை மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.
பதவியை ஒரு பொருட்டாக கருதாமல் செயலாற்றுபவர் தோழர் ஸ்ரீதர்.
இலாகா பணிகளிலும் கருமமே கண்ணாக பணியாற்றுபவர். CSC யில் அனைத்து விஷயங்களையும் அறிந்து வாடிக்கையாளர்களை மகிழ்விப்பவர்.
சிறந்த தோழராக செயலாற்றிய தோழர் ஸ்ரீதர் அவர்களின் பணி
ஓய்வுக் காலம் சிறப்புடன் அமைய மாவட்டச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment