Thursday, June 23, 2016

தொழிற்சங்க சர்வாதிகாரத்தை உருவாக்கிட  
               BSNLEUவின்  விடாமுயற்சி !   

 ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் 
என்ற புதிய அங்கீகார விதிகள், 2013, உருவானவுடன்,  அந்த  விதிகள், தொழிற்சங்க ஜனநாயகம் காப்பதற்காக  BSNLEU செய்த சாதனை 
என்று வீரவசனம் பேசினார்கள்.

ஆனால், 2016ல்,  7வது அங்கீகாரத்  தேர்தல் துவங்கிய நேரம் முதலே தனது தொழிற்சங்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதே அதன் ஒரே குறிக்கோளாக இருந்தது.

அதற்காக அனைத்து பொய்ப் பிரச்சாரங்களிலும் அந்த சங்கம் ஈடுபட்டது.
தேர்தல் முடிந்த பிறகும் சதி செய்தது. அதையும் மீறி நமது சங்கம் அங்கீகாரம் பெற்றதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தற்போது ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நமது சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கியது தவறு என்று வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

2002ல்,  BSNLEU சங்கம் ஜெயித்துவிடும் என்ற அதீத நம்பிக்கையில் 
ஒரு   சங்க அங்கீகாரத்திற்கு ஒப்புக் கொண்டுவிட்டு, வெற்றி 
பெற்றவுடன் இரண்டாவது  சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டும் என்று இதே ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததும்  BSNLEU  சங்கம்தான்.

  பதிவான வாக்குகள் அடிப்படையில்தான் வாக்கு சதவீதம் 
கணக்கிடப்பட  வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் 
NFTE-BSNL சென்னை மாநிலச் செயலர் தோழர் சி.கே.மதிவாணன்
அவர்கள் வழக்கு தொடுத்தபோது, இதே BSNLEU சங்கம் மிகப்பெரிய முதலாளித்துவ வக்கீலை வைத்து அதை எதிர்த்து வாதாடியது.   

சில  ஆண்டுகள் கழித்து , பல்டி அடித்து,  பதிவான  வாக்குகள் அடிப்படையில் வாக்கு சதவீத்தை கணக்கிட வேண்டும் என்று  கோருவது விந்தையிலும் விந்தை மட்டுமல்ல, தான் எடுத்த  
வாந்தியை மீண்டும் உண்பதற்கு  சமமாகும்.
       
ஆகவே, BSNLEU,  தற்போது  கெடுமதியோடு தனது  சர்வதிகாரத்தை 
நிலை நாட்டிட செய்யும் முயற்சி தோற்கும் என்பது உறுதி .     

No comments:

Post a Comment