Thursday, June 30, 2016

                        மாவட்ட செயற்குழுக் கூட்டம் !

கோவை மாவட்டச் சங்கத்தின்  செயற்குழுக் கூட்டம் 29-6-16 
அன்று ராம்நகர் தொலைபேசி நிலையத்தில் தோழர் A.  ராபர்ட்ஸ் 
தலைமையில் நடைபெற்றது

மாவட்ட உதவித் தலைவர் தோழர் S. கோட்டியப்பன் தியாகிகளுக்கு
அஞ்சலி செலுத்தினார். 

ராம் நகர் கிளைச் செயலர் தோழர் S.கிருஷ்ண மூர்த்தி அனைவரையும்
வரவேற்றார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி உரையாற்றிய
மாவட்ட செயலர் தோழர் L.சுப்பராயன், ஊதிய மாற்றம் குறித்த நமது
 ஊழியர்களின் எதிர்பார்ப்பு, இன்றைய நிலை, தேசிய அளவிலான 
போரம் அமைப்பு, மாநில மாநாட்டை வெற்றிகர -மாக்கிட நமது
 உறுப்பினர்களின் பங்கு ஆகியவற்றை விளக்கி  உரையாற்றினார். 

மெயின் எக்ஸேஞ்ச் கிளைச் செயலர் தோழியர் L. தனலட்சுமி, 
முதற்கட்ட நிதியாக ரூ.5000/- வழங்கினார்.


சங்க அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றிய தோழர் P.ராமையன், 
பணி ஓய்வை ஒட்டி கௌரவிக்கப்பட்டார்.

சம்மேளனச் செயலர் தோழர்  SSG ஊதிய மாற்றம் குறித்த இன்றைய 
நிலை, மாநில மாநாட்டை வெற்றிகரமாக்கிட வேண்டிய அவசியம், 
BSNLEU சங்கத்தின் அராஜக செயல்பாடுகள் போன்றவற்றை
விளக்கினார்.   

 மாநில மாநாட்டிறகாக அனைத்து உறுப்பினர்களிடமும் தலா 
ரூ.200/- வசூலிப்பது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தலா 
ரூ.500/- வழங்குவது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
5-7-16க்குள் வசூலித்த தொகையை மாவட்ட பொருளரிடம்
ஒப்படைப்பது என்றும் ஏற்கப்பட்டது.

உடனடியாக மாவட்ட துணைச் செயலர் தோழர் K.G.நரேஷ் குமார்,
ரூ.500/- வழங்கினார். 

   
மாவட்டச் செயற்குழுவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த 
கிளைச் செயலர் தோழர் S.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிளைத்
தோழர்கள் A.கருப்புசாமி, P.குமாரவேல் உள்ளிட்டோருக்கு நமது
 நன்றி.












No comments:

Post a Comment